சென்னை படம் காட்டறாங்க...
சென்னை பல விசயங்களுக்கு நல்லதா பட்டாலும், பெரும்பாலும் வெளியே எங்கயாவது போகனும் என்றால் டிராபிக் என்ற கொடுமையை சந்திக்க வேண்டியுள்ளது!!! முக்கியமா கத்திப்பாரா ஜங்ஷன், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அடையாறு & திருவான்மியூர் ஏரியா பக்க போனும் என்றாலே ஒரு அலர்ஜி போல ஆயிடுச்சு!!! நான் பெரும்பாலும் Peak hoursல் வெளியே செல்வதை தவிர்த்துவிடுவேன், வேற வழியே இல்லை என்றால் குறுக்குவழி, ஒண்டிச்சந்து என பல தேடி சேரவேண்டிய இடத்தை அடைவது வழக்கம். சிஃபி.காம் ஒரு சிறப்பு இணைய தளம் அமைத்திருக்காங்க, இது போன்ற ட்ராபிக் பிரச்சனையை அவாய்டு செய்து செல்ல... இப்பொழுது சென்னையின் மூன்று இடங்களில் லைவ் வீடியோ இணைய தளம் மூலம் காண்பிக்கப்படுது! (Traffic Live video feed- Kathipara, Kilpauk, Thiruvanmiyur), இனி மேலும் பல இடங்கள் இதில் சேரலாம் என்று நினைக்கிறேன்! இந்த இணையத்தை பயன்படுத்தி எங்க ட்ராபிக் இருக்கு, எங்க இல்லை என்பதை அறிந்து அதற்கேற்றார் போல உங்கள் பயனத்தை திட்டமிட உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். லைவ் கேமேரா Feeds பார்க்க இங்கே சொடுக்கவும் . முதலில் படங்கள் வர கொஞ்சம் தாமதமாகும் அட்ஜஸ்ட் பண்ணிக்க்க...