சென்னை அலைவரிசை
முன்பெல்லாம் வானொலி என்ற சொல்லைக் கேட்டால் கோவை வானொலியும் திருச்சி வானொலியும் கொர கொர ஒலிபரப்போடு ஒலிக்கும் இலங்கை வானொலியும் சென்னையின் முதல் அலைவரிசையுமே நினைவுக்கு வரும்.இது சென்னைக்கு முதன்முதலில் பொறியியல் கல்லூரியை தேர்ந்தெடுக்க வந்தபோது மாறியது.சென்னை சென்டரலில் இறங்கி அப்பாவின் கையைப்பிடித்தபடி பாரிமுனை வரை நடந்தேச் சென்றிருக்கிறேன்.அப்படி நடந்துச் சென்ற போதுதான் பாதையோரம் வாழும் மக்களின் காதருகில் கிசுகிசுத்தபடி சென்னை அலைவரிசை அறிமுகம்.ஒரு நாள் மட்டுமே அப்போது சென்னையில் இருந்தாலும் சென்னை அலைவரிசை மனதில் பசைப்போட்டு ஒட்டிக் கொண்டது.7.00 முதல் 7.30 மணிவரை & 8.30 முதல் 9.00 மணிவரை மீண்டும் மாலை 5.30 மணிக்கே தமிழ் பாடல்கள் என கோவை அலைவரிசை கேட்டு நேரம் குறித்து சென்னை முதல் அலைவரிசை,திருச்சி அலைவரிசை,இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் வழியே பாடல்கள் கேட்டு இரவு பி.பி.சியும் சிங்கையின் ஒலி 96.8 ம் கேட்டபடி உறங்கிப்போவனுக்கு நாள் முழுவதும் பாடல்கள் ஒலிபரப்பும் சென்னை அலைவரிசை பிடித்துப்போனதில் அதிசியம் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. அண்ணா பல்கலை கழக மரத்தடியில் அமர்ந்திருந்து காத்த...