Posts

Showing posts with the label விருந்தினர்

சென்னை நினைவுகள் - உண்மைத்தமிழன் (விருந்தினர் பத்தி)

1995-ம் ஆண்டு ஜனவரி 1. என் வாழ்க்கையில் நடந்த திருப்பங்களில் முதன்மையானது சென்னையில் கால் பதித்த இந்த நாள்தான். சென்னையில் நான் பார்க்கச் சென்று மீள முடியாமல் மூழ்கியது கன்னிமாரா நூலகத்தில்தான். திண்டுக்கல், மதுரை என்று வாசம் செய்த ஊர்களிலெல்லாம் நூலகங்களை இரண்டாவது வீடாக வைத்திருந்த நான் சென்னைக்கு வந்ததும் முதல் ஞாயிற்றுக்கிழமை கன்னிமாராவில்தான் கழித்தேன். எத்தனை, எத்தனை புத்தகங்கள்? படிக்க நேரம்தான் கிடைக்கவில்லை. இப்போதும் தொடர்ந்து பத்து வருடங்களாக அந்நூலகத்தின் உறுப்பினராக இருந்து வருகிறேன். தொடர்ந்து சென்னையை வலம் வர ஆரம்பித்தேன் புது மாப்பிள்ளை, பொண்ணுடன் ஊர், ஊராகச் சென்று விருந்து சாப்பிடுவானே அது மாதிரி.. எப்போதும் எனக்குப் பிரியத்திற்குரிய சினிமா தியேட்டர்களை, சாயந்தர வேளைகளில் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தேன். தமிழ்ப் படங்களைவிட ஆங்கிலப் படங்களே எனக்கு அதிகம் பிடித்தன. தேவி, சத்யம், ஆனந்த் மூன்று காம்ப்ளக்ஸ்களிலும் ஒரு விடுமுறை நாளில் நான்கு ஷோவும் பார்த்துவிட்டுத்தான் சைக்கிளில் அசோக் நகர் சென்றடைவேன். அன்றைக்கு எனக்கு இருந்த சினிமா ஆசையை வெறியாக மாற்றி என்னை வெறிநாய் கணக்...

சிங்காரச் சென்னை - தமிழ்நதி (விருந்தினர் பத்தி)

எழுத்துக்கும் எனக்குமிடையில் ஒருவித இடைவெளி விழுந்துவிட்டதை,தொடர்பறுந்த நிலையில் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில்,சென்னைப் பட்டினம் பற்றி எழுதும்படி பொன்ஸ் கேட்டிருக்கிறார். சென்னையைப் பற்றி ஏற்கெனவே இரண்டு தடவைகள் எழுதிவிட்டேன். அதன் சாயல் இந்தப் பதிவிலும் இடம்பெறக்கூடும் என்ற அச்சம் மேலிடுகின்றபோதிலும் பிரியத்திற்குரியவர்கள் கேட்கும்போது மறுக்க முடியவில்லை. இந்த வரியை எழுதும்போது அடுத்த வரி என்ன எழுதப்போகிறேன் என்று எனக்குத் தெரியாது. எந்த நகரமாக இருப்பினும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் அப்போதைய மனோநிலையைப் பொறுத்தே பார்வைகளும் அமையும். மரணங்கள் மலிந்த பூமியில் சவப்பெட்டிகள் செய்பவன் மகிழ்ச்சியாக இருப்பதைப் போலொத்ததெனும் குரூரமான உதாரணத்தையே இங்கும் சுட்டவேண்டியிருக்கிறது. இரக்கமேயில்லாமல் வெயில் எறித்து எரிக்கும் கொடுங்கோடை நாட்களில் சென்னையைச் சபித்திருக்கிறோம். அதிலும் க்குவரத்து நெரிசலுள் மாட்டிக்கொள்ள நேரும்போது உடல் கொதித்துப் போகிறது. மனம் கோபத்தினால் செய்யப்பட்டதாகிவிடுகிறது. உரசினால் பற்றிக்கொள்ளுமோ என்றஞ்சுமளவிற்கு உடல்கள் வெயிலை வேண்டுமளவிற்குக் க...

சென்னை/ பக்கத்துவீட்டு ஜன்னல் புன்னகை - த. அகிலன் (விருந்தினர் பத்தி)

சென்னை என்கிற வார்த்தை எனக்குத் தெரிகிறபோது. ஒரு 8 வயதிருக்கும். கட்டுங்கடங்காமல் காட்டுக்குள் குகைகளிற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் விசத்திரக்குள்ளர்களையும், முகமூடி வீரர் மாயாவியையும் அவரது காதலி டயானாவையும் ராணி காமிக்ஸ் புத்தகத்தில் புரட்டி முடிந்து ஆவலடங்காமல் கடைசி மட்டைவரை படித்துவிடுகிறபோது எனக்கு தெரிந்த வார்த்தை சென்னை- 600018 என்று நினைக்கிறேன். பிறகு சென்னை இந்திய புத்தகங்கள் வழியாகவும் சினிமா வழியாகவும் மிகவும் பரிச்சயமான பக்கத்து வீட்டு ஜன்னலில் ஒளிர்கிற புன்னகை போலாகிவிட்டது. நான் சென்னையில் வசிக்கநேரிடும் என்று அப்போதெல்லாம் நான் நினைத்து பார்த்தது கிடையாது. இப்போது நான் ஒரு சென்னை வாசி. அதன் பிரமிப்புக்களை எல்லாம்தாண்டி அதன் வாழ்வியலுக்குள் என்னை நுழைத்துக்கொண்டு விட்ட சராசரி நகரவாசியான பின்பு எனது கற்பனையில் இருந்த சென்னை கொஞ்ச இடங்களில் தகர்ந்து போய்விட்டிருக்கிறது. கொஞ்ச இடங்களில் இன்னும் ஒரு பெரிய நாற்காலி போட்டு உட்கார்ந்து கொள்கிறது. ஒரு திசை தெரியாப் பயணியைப்போல் நான் நுழைந்த ஆரம்பங்களில் சென்னை என்னை திக்குமுக்காட வைத்திருக்கிறது. இந்தப் பெருநகரின் வாய் எங்கே...