122 ஆண்டு பழமையான வாத்தியகருவி!

சென்னை கோட்டை கிறிஸ்தவ கோவிலில் 122 ஆண்டு பழமையான வாத்திய கருவி மீண்டும் இசைக்கப்படுகிறது இங்கிலாந்தில் இருந்து நிபுணர் வந்து சரி செய்தார் சென்னை, ஜன.4- சென்னை கோட்டை கிறிஸ்தவ கோவிலில் 122 ஆண்டு பழமையான இசைக் கருவி பழுது பார்க்கப்பட்டு மீண்டும் இசைக்கப்படுகிறது. உலகமெங்கும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கீர்த்தனை, பாமாலை, சங்கீத பாடல்கள் பாடப்படுவது வழக்கம். பாடல்களை பாடும் போது பின்னணி இசைக்கு ஆர்கன் என்ற வாத்தியக் கருவி பயன்படுத்தப்படுகிறது. தேவாலயங்களில் ஆர்கனுக்கு என்று தனி இடம் தரப்படுகிறது. அதுவும் மிகப் புனிதமாக கருதப்படும் `ஆல்டர்' பகுதிக்கு அருகே ஆர்கன் வைக்கப்பட்டு இருக்கும். அதன் முன்னால் பாடகர் குழுவுக்கு இடம் ஒதுக்கப்படுவது வழக்கம். சென்னை கோட்டையில் மிகப் பழமையான தேவாலயம் உள்ளது. செயின்ட் மேரிஸ் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த தேவாலயம் 1680-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த தேவாலயத்துக்கு இங்கிலாந்தில் இருந்து ஆர்கன் அனுப்பப்பட்ட வரலாறும் சுவையானது. ஏற்கனவே உள்ள பழைய ஆர்கனை தவிர்த்து விட்டு, செயின்ட் மேரிஸ் தேவாலயத்திற்கென்று புதிய ஆர்கனை வாங்க வேண்டும் என்று 1883-ம் ஆண்டு ம...