Posts

Showing posts with the label போக்குவரத்து

சென்னை படம் காட்டறாங்க...

Image
சென்னை பல விசயங்களுக்கு நல்லதா பட்டாலும், பெரும்பாலும் வெளியே எங்கயாவது போகனும் என்றால் டிராபிக் என்ற கொடுமையை சந்திக்க வேண்டியுள்ளது!!! முக்கியமா கத்திப்பாரா ஜங்ஷன், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அடையாறு & திருவான்மியூர் ஏரியா பக்க போனும் என்றாலே ஒரு அலர்ஜி போல ஆயிடுச்சு!!! நான் பெரும்பாலும் Peak hoursல் வெளியே செல்வதை தவிர்த்துவிடுவேன், வேற வழியே இல்லை என்றால் குறுக்குவழி, ஒண்டிச்சந்து என பல தேடி சேரவேண்டிய இடத்தை அடைவது வழக்கம். சிஃபி.காம் ஒரு சிறப்பு இணைய தளம் அமைத்திருக்காங்க, இது போன்ற ட்ராபிக் பிரச்சனையை அவாய்டு செய்து செல்ல... இப்பொழுது சென்னையின் மூன்று இடங்களில் லைவ் வீடியோ இணைய தளம் மூலம் காண்பிக்கப்படுது! (Traffic Live video feed- Kathipara, Kilpauk, Thiruvanmiyur), இனி மேலும் பல இடங்கள் இதில் சேரலாம் என்று நினைக்கிறேன்! இந்த இணையத்தை பயன்படுத்தி எங்க ட்ராபிக் இருக்கு, எங்க இல்லை என்பதை அறிந்து அதற்கேற்றார் போல உங்கள் பயனத்தை திட்டமிட உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். லைவ் கேமேரா Feeds பார்க்க இங்கே சொடுக்கவும் . முதலில் படங்கள் வர கொஞ்சம் தாமதமாகும் அட்ஜஸ்ட் பண்ணிக்க்க...

புறநகர் போக்குவரத்து நிலையம் - சில படங்கள்

Image
சமீபத்தில் புறநகர் போக்குவரத்து நிலையம் சென்றிருந்தபோது எடுத்த சில படங்கள் எல்லாம் சரி.. இந்த அம்பேத்கார் எந்த இடத்தில் இருக்கார்னு சொல்லுங்க பார்ப்போம்:

ஒரு வழிப்பாதை

கிண்டி ரயில் நிலையம் அருகில் பாலம் ஏறி இறங்கி, போராடி சர்தார் படேல் சாலையில் திரும்ப வலது புறம் ஒதுங்கினால் செல்லம்மாள் கல்லூரி அருகில் வலது புறம் திரும்ப முடியாது என்று பலகை. சில நாட்கள் முன்பு நாளிதழில் படித்திருந்த ஒரு வழிப்பாதை ஏற்பாடு மங்கலாக நினைவு வந்தது. கிண்டியிலிருந்து அடையாறு செல்ல வேண்டுமானால் செல்லம்மாள் கல்லூரியின் எதிரில் காத்திருந்து திரும்பாமல், ஒரு வழிப்பாதையாகி விட்ட அடுத்த பகுதியில் சின்னமலை வரை போக வேண்டும். சின்ன மலையிலிருந்து வலது புறம் திரும்பி ராஜ்பவன் நோக்கிப் போகும் போது சைதாப்பேட்டையிலிருந்து கிண்டி போக வேண்டிய வண்டிகளும் சேர்ந்து கொள்கின்றன. ராஜ்பவன் எதிரில் இடது புறம் திரும்பி அடையாறு. வலது புறம் திரும்பி சர்தார் படேல் சாலையிலிருந்து வரும் வாகனங்களுடன் சேர்ந்து கொண்டு வேளச்சேரி சாலைக்குப் போக வேண்டும் வேளச்சேரி நோக்கிப் போக வேண்டியவர்கள். சில கிலோமீட்டர்கள் கூடுதலாக சுற்ற வேண்டியிருந்தாலும், எங்கும் தேங்காமல், காத்திருக்காமல் நான்கு சாலை நிறுத்தங்களை முற்றிலும் ஒழித்து விட்ட இந்த ஏற்பாடு ஏதோ கனவுலகம் போலத் தோன்றியது. வேளச்சேரியிலிருந்து வந்து அடையாறு போக ...

27D

Image
பொழுது போகாமல் விட்டத்தைப் பார்த்து யோசித்துக்கொண்டிருந்த போது தோன்றிய திட்டம் இது. உடனடியாக செயல் படுத்திப்பார்க்க, முதல் நாள் இரவே பட்டினப்பாக்கத்தில் ஒரு நண்பரின் வீட்டில் போய் 'டேரா' போட்டாகி விட்டது. முதல் பேருந்து அதிகாலை 5.15க்கு என்று முன்னமே விசாரித்து வைத்து விட்டதால் இரவு கைப்பேசியில் அலாரம் வைத்து படுத்து விட்டேன். எப்போதும் படுத்தவுடனே சுழல் மறந்து கனவுகளில் கிழவிகளுடன் (வயசாகிடுச்சுல்ல!) கொஞ்சப் போய் விடுவது வழக்கம். ஆனால்.. அன்றைய இரவு ஏனோ உறக்கம் பிடிக்கவே இல்லை. புதிய இடம் என்பதால் இருக்கலாம். இப்படியும், அப்படியுமாக புரண்டு படுத்ததிலேயே அதிகாலை நான்கு மணியாகி விட்டது. எழுந்து காலைக்கடனை முடித்து, குளிர்ந்த நீரில் குளியல் (நம்புங்க! நெசமாத்தாங்க!!) போட்டு, பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் வந்து விட்டேன். திட்டம் இது தான். நான் தினமும் வேலைக்கு போகும் (வித்லோகா-மைலாப்பூரில் இருக்கிறது) பேருந்து 27D. பட்டிணப்பாக்கம் T0 வில்லிவாக்கம். வட சென்னையையும் தென்சென்னையையும் இணைக்கும் பேருந்துகளில் இதுவும் ஒன்று. இதில் முதல் இரு ரவுண்ட் பயணத்தில் பயணிக்க வேண்டும். அதை பதி...

யாராச்சும் லாலுவுக்கு சொல்லுங்கப்பா..!

Image
செ ன்ட்ரல் ரயில் நிலையத்தின் பார்சல் குடோன் சூளை பகுதியில் அமைந்துள்ளது. அதன் மொத்தப் பரப்பளவு நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் அளவு இருக்கும். ஆங்கிலேய அரசுகாலத்தில் ரேசன் பொருட்களுக்கான குடோனாக பயன் படுத்தப்பட்டு வந்த இடம், இன்று மத்திய ரயில்வேயின் பொருட்கள் பாதுகாப்பு இடமாக மாறிப்போய் இருக்கிறது. இப்போதும் கூட இரண்டு பகுதிகளாகவே செயல் பட்டு வருகிறது. ஒரு பகுதி ரேசன் பொருட்களின் பாதுகாப்பிற்கும், மற்றொரு பகுதி நாட்பட்டுப்போன ரயிவே பார்சல்களை பாதுகாக்கவும். சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் பார்சல்கள் இருபது நாட்களுக்கு மேல் டெலிவரி எடுக்காமல் இருந்தால் இந்த குடோனுக்கு அனுப்பப்படுகின்றன. மெயின் கேட்டில் இருந்து ஐநூறு அடிகள் கடந்து வந்தால் தான் இந்த பார்சல் குடோனை அடைய முடியும். சமீபத்தில் பெய்த மழையால் இந்த பகுதி நீச்சல் குளம் போல காட்சி தருகிறது. கால் முழங்கால் முட்டி வரை சேற்றில் இறங்கி நடக்க வேண்டியும் உள்ளது. உள்ளே போக வேறு வழிகள் இருப்பதாகவும் தெரியவில்லை. தவிரவும் பத்துக்கும் அதிகமான ப்ரோக்கர்கள் உள்ளுக்குள்ளேயே இருக்கிறார்கள். நாம் போய் நின்றால் போதும், கையில் இருக்கும் ரசீதைப்...

வாராரு ஆட்டோகாரரு....

Image
சென்னைக்கு போறோம் என்று முன்பெல்லாம் சொன்னதும் "அங்க தண்ணி பிரச்சனை ஆச்சே??!!" என்று பயப்படுத்துவது அதிகம் இருந்தது. இப்ப அந்த பிரச்சனை ஓர் அளவுக்கு முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் உண்மையில் இன்று நம்ம சென்னைவாசிகளுக்கு பிரச்சனையாக உருவாகிவருவது சென்னைக்குள் சுழன்று வரும் பொது போக்குவரத்து சாதனங்கள்தான்னு சொல்லணும். சென்னைக்குள் எந்த பகுதிக்கு செல்வதானாலும் பஸ், ரயில், MRTS (Mass Rapid Transit System) என பல வழிகள் இருந்தாலும், அதன் கூட்ட நெரிசல், சரியான நேரத்துக்கு வருவதில்லை, பஸ் ஸ்டாண்டுகளில் நிற்காமல் செல்வது போன்ற பல காரணங்களால் நடுத்தர மக்கள் பெரும்பாலும் ஆட்டோ என்னும் வசதியை நாட நினைக்கிறார்கள். அந்த வசதி எப்படி நமக்கு உபயோகமாயிருக்கு, அதன் நன்மைகள், அதன் பிரச்சனைகள், ஆட்டோ ஓட்டுனர்களின் நிலை என சில விசயங்களை இங்கு பார்ப்போம். மற்ற பொது போக்குவரத்து வசதிகளை பற்றி அடுத்து வரும் பதிவில் பார்ப்போம். ஆட்டோ: இந்த வசதியை ஆச்சர்யமாக பார்க்கும் வெளிநாட்டினர், சென்னை வந்தால் ஒரு முறையாவது இதில் ஏறி ஒரு சவாரி( பயணம் - சென்னை வட்டாரப் பேச்சு) போக வேண்டும் என்று ஆசைப்படுவர். ஆனால் அ...

கோயம்பேடு - the buzz(s) world..

Image
"சென்ட்ரலில் இறங்கி, CMBT என்று போட்டிருக்கும் பேருந்தில் ஏறி வந்துவிடு". 2002இல் அப்பா சொன்ன போது பேருந்து நிலையத்தைப் பற்றிய பெரிய யோசனை ஏதுமில்லை. அப்போது தான் நாங்கள் கோயம்பேட்டுக்குக் குடிவந்த புதிது. ஒரு மாதம் முன்னால் புது வீட்டுக்கு வருவதற்கு பேருந்துகள் அதிகம் இல்லாமல், ஆட்டோ பிடித்துப் போக வேண்டியது போலவே இப்போதும் இருக்கும் என்று நினைத்துக் கொண்டே தான் இறங்கினேன். CMBT என்பது அப்போது ஒரு புதுமாதிரியான மாயாஜால வார்த்தையாகத் தோன்றியது. பேருந்து மெல்ல அந்த வளாகத்துக்குள் நுழையும் வரை இத்தனை பெரியதாக இருக்கும் என்று எண்ணக் கூட இல்லை. 37 ஏக்கர் பரப்பில் விரிந்து கிடக்கும் புறநகர் பேருந்து நிலையம் நாட்டின் முக்கிய விமான நிலையங்களைப் போல் பளபளவென்று மின்னிக் கொண்டிருந்தது. சினிமாக்களில் வரும் ஆஸ்பத்திரிகள், கதாநாயகன் நாயகிக்குத் தயங்கிக் கொண்டே பூ கொடுத்து வழியனுப்பும் விமான நிலையங்கள் போல மொசைக் தரையும் சுமார் 100 பேர் அமரக் கூடிய காத்திருக்கும் இடமும், முன்புறத்தில் புல்வெளியும் ஏதோ புது யுகத்துக்குக் கடத்திப் போவது போலிருந்தது. முன் ஹாலைத் தாண்டி உள்ளே போனபோது கூட பேரு...

ஹலோ! சென்னை கால் டாக்ஸி!

Image
ஒரு காலத்தில் சொந்த வாகனமில்லாத சென்னை மக்கள், தனியார் போக்குவரத்துக்கு ஆட்டோக்களை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தர். ஆனால் சென்னை நகரை இன்று ஆள்வது கால் டாக்ஸிக்கள். ட்ராவல்ஸ் கார்கள் போல் அல்லாமல், கூப்பிட்ட இடத்துக்கு கூப்பிட்ட நேரத்துக்கு வந்து நிற்கும் கால் டாக்ஸி சேவைகள் தொடங்கியது 2000த்தில் தான். வியாபார நிலையங்கள், ஆபரணங்கள், மருந்து விற்பனை என்று பல தளங்களிலும் கால் பதித்திருந்த பாரதி(BARATHI) நிறுவனம் தான் சென்னையின் முதல் கால் டாக்ஸி நிறுவனம். 2000ல் 36 கார்களுடன் தொடங்கிய இந்த நிறுவனத்துக்கு இன்று இருநூறுக்கும் அதிகமான சிற்றுந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறன. பாரதி நிறுவனத்தின் கார்கள் எல்லாமே மாருதி ஆம்னி மட்டுமே. சிறு இடைவெளிகளிலும் புக முடிந்த அமைப்பு, நான்கு பயணிகள் வரை இருக்கை வசதி, பொருட்களை அதிகம் எடுத்துச் செல்ல முடிந்த வசதி, என்பதோடல்லாமல், ஆம்னி வண்டிகளில் வயர்லெஸ் வகைக் கருவிகள் பொருத்தவும் வசதி இருப்பது ஒரு காரணம். சென்னையின் மற்றொரு குறிப்பிடத் தகுந்த கால் டாக்ஸி நிறுவனம் பாஸ்ட் ட்ராக்(Fast Track). 2001இல் செயல்படத் துவங்கிய இந்த நிறுவனத்தின் மேலாளர் துரைராஜனுக்கு,...

Sub-way கலாட்டா

இரு வாரங்களுக்கு முன்பு, வார விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டு கோவை விரைவுவண்டியில் கிளம்பி சென்னை வந்து சேர்ந்தேன். இரவு சுமார் 9:45 மணி இருக்கும். சென்னை மத்திய இரயில் நிறுத்தத்தில் இருக்கும் சுரங்க வழியில் புகுந்து, சுரங்கத்தில் சாலையை கடந்து, தாம்பரம் நோக்கிச் செல்லும் இரயில் பிடிக்க சுரங்க பாதையை உபயோகித்தேன். சுரங்கப்பாதையை உபயோகித்து சாலையை கடக்க வேண்டும் என்பது இலக்கு. நடந்தது? அன்று என்ன ஆயிற்றோ? சுரங்கப்பாதை உள்ளே மின்சாரம் இல்லை. ஒரே (ஒரு?) இருட்டு. சுரங்க பாதையை உபயோகிப்பவர்கள் உள்ளே தங்கள் கைபேசியில் இருக்கும் சிறு வெளிச்சத்தின் மூலம் கடந்தார்கள். கைபேசி இல்லாதவர்கள், அடுத்தவர் வெளிச்சத்தை இரவல் வாங்கி உபயோகித்தார்கள். அதுவும் உள்ளே கடப்பவர்களைப் பார்க்க வேண்டுமே. உள்ளே இறங்கியதும் வேக வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள். எல்லாம் திருட்டு பயம் தான். அது அவர்கள் நடையில் நன்றாகவே தெரிந்தது. எனக்கோ geographical பிரச்சினை. கண்ணை கட்டி ஒரு சுற்று சுற்றி விட்டால் எந்த திசையில் இருக்கிறோம் என்பதே தெரியாது. (இந்த பிரச்சினை பெரும்பாலும் பெண்களுக்கு அதிகமாம்). சுரங்க அமைப்புப் படி, நான் ச...