யாராச்சும் லாலுவுக்கு சொல்லுங்கப்பா..!

சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பார்சல் குடோன் சூளை பகுதியில் அமைந்துள்ளது. அதன் மொத்தப் பரப்பளவு நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் அளவு இருக்கும்.



ஆங்கிலேய அரசுகாலத்தில் ரேசன் பொருட்களுக்கான குடோனாக பயன் படுத்தப்பட்டு வந்த இடம், இன்று மத்திய ரயில்வேயின் பொருட்கள் பாதுகாப்பு இடமாக மாறிப்போய் இருக்கிறது.



இப்போதும் கூட இரண்டு பகுதிகளாகவே செயல் பட்டு வருகிறது. ஒரு பகுதி ரேசன் பொருட்களின் பாதுகாப்பிற்கும், மற்றொரு பகுதி நாட்பட்டுப்போன ரயிவே பார்சல்களை பாதுகாக்கவும்.



சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் பார்சல்கள் இருபது நாட்களுக்கு மேல் டெலிவரி எடுக்காமல் இருந்தால் இந்த குடோனுக்கு அனுப்பப்படுகின்றன. மெயின் கேட்டில் இருந்து ஐநூறு அடிகள் கடந்து வந்தால் தான் இந்த பார்சல் குடோனை அடைய முடியும். சமீபத்தில் பெய்த மழையால் இந்த பகுதி நீச்சல் குளம் போல காட்சி தருகிறது. கால் முழங்கால் முட்டி வரை சேற்றில் இறங்கி நடக்க வேண்டியும் உள்ளது.



உள்ளே போக வேறு வழிகள் இருப்பதாகவும் தெரியவில்லை. தவிரவும் பத்துக்கும் அதிகமான ப்ரோக்கர்கள் உள்ளுக்குள்ளேயே இருக்கிறார்கள். நாம் போய் நின்றால் போதும், கையில் இருக்கும் ரசீதைப் பிடுங்கி, பார்சல் எங்கே இருக்கிறது என்று பார்த்து, மின்விசிறியின் கீழ் அமர்ந்து இருக்கும் அரசு அதிகாரியிடம் (அவருடைய வேலையைத்தான் இந்த ப்ரோக்கர் செய்கிறாரே..!) காட்டுகிறார். அவர் குறித்துக்கொண்டு அடுத்த அறையில் இருப்பவரிடம் லேட் டெலிவரிக்கான அபராதத்தொகையினை செலுத்தச்சொல்லுகிறார்.

எல்லாப் பணியும் முடிந்த பின் ரசீதை சரிபார்த்த அந்த அதிகாரி ப்ரோக்கரிடம் சைகை காட்ட அவர் நம்மிடம் வந்து, "சார் இருபது ரூபா தாங்க! ரெண்டு ஆபிஸருங்களுக்கும் சேர்த்து" என்று கேட்கிறார். நாம் மறுத்தோமானால் அங்கிருக்கும் காவலரின் உதவியோடு, நம் பார்சலில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, நமக்கான பார்சலை திறக்கிறேன் பேர்வழி என்று அலங்கோலப்படுத்தி விடுகின்றனர். அப்புறம் உடைந்து போன பார்சலை அள்ளிக்கொண்டா வரமுடியும்? மாற்று அட்டைப்பெட்டிக்கு அதே ப்ரோக்கரிடம் ஐம்பது ரூபாய் அழவேண்டும். இது தவிர, அவருக்கும் தனியாக கையூட்டு கொடுக்கவேண்டியதும் நம் கடமையாகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் எனக்கு வந்திருந்த ஒரு புத்தக அட்டைப்பெட்டியை எடுக்கப்போன போது நடந்த அனுபவமிது. குளங்கட்டி கிடக்கும் குடோனையும், கொள்ளையடிக்கும் அதிகாரிகள் குறித்தும் லாலுவுக்கு யாராச்சும் சொல்லுங்கப்பா...!

(ஆங்கில அறிவு கொண்ட புண்ணியவான்கள் இச்செய்தியை ஆங்கிலத்தில் வெளியிடுங்கள்.)

Comments

//ஆங்கில அறிவு கொண்ட புண்ணியவான்கள் இச்செய்தியை ஆங்கிலத்தில் வெளியிடுங்கள்.)//

லாலுவுக்கு எல்லாம் சொல்லத் தேவையில்லை. சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பக்கத்தில் இருக்கும் தென்னக ரயில்வே தலைமையகத்துக்குச் சென்றால் அங்கே தென்னக ரயில்வேயின் மக்கள் தொடர்பு அலுவலர் இருப்பார். அவரிடம் உங்கள் புகாரை தெரிவிக்கலாம்.
லதா said…
நம்ப கடல் கணேசன் இதை இன்னும் படிக்கவில்லையா ? :-)))
இன்னத்துக்கு.. ஒதைபட்டு சாவுறதுக்கா..
நாங்களெல்லாம் வெள்ளைக்காலர் ஆசாமிங்க.. இப்படித்தான் இணையத்துல எழுதறதோட வேலை முடிஞ்சது.
:-)))))))))))))))

ஸ்மைலி போட விட்டுப்போச்சு.
:-)))
//நாங்களெல்லாம் வெள்ளைக்காலர் ஆசாமிங்க.. இப்படித்தான் இணையத்துல எழுதறதோட வேலை முடிஞ்சது.//

தி ஹிந்துவுக்கு லெட்டர்ஸ் டூ தி எடிட்டர் பகுதிக்கு எழுதவும் :-)
//தி ஹிந்துவுக்கு லெட்டர்ஸ் டூ தி எடிட்டர் பகுதிக்கு எழுதவும்//

தமிழில் எழுதுனா போடுவாங்களா என்ன?
:-)))
//தமிழில் எழுதுனா போடுவாங்களா என்ன?//

அப்போ தினமலருக்கு எழுதி அனுப்புங்க. முடிஞ்சா வேலுவையும், ராமதாஸையும் திட்டி எழுதி அனுப்புங்க. கண்டிப்பா பிரசுரம் ஆகும் :-)
Anonymous said…
one smiley....

......allowed?!


: )

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

27D