Posts

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

Image
த னது நரைத்த மீசையைக் கம்பீரமாக நீவிக்கொண்டு - ''வண்டியா ஸார் வேணும்?'' என்று ஜட்காவுக்குள்ளே படுத்து இருந்த துரைசாமி மிகவும் மரியா தையாக வண்டியைவிட்டுக் கீழிறங்கி நின்றார்.  ''நீங்க எத்தனை வருஷமா ஜட்கா ஓட்டிக்கினு இருக்கீங்க?'' என்ற ஒரு கேள்விதான் நான் கேட்டேன். மனுஷன் ஒரு பேட்டிக்கு அல்ல - ஒரு சிறு கதைக்கு அல்ல - ஒரு நாவலுக்கு வேண்டிய விஷயங்களை ஓர் இலக்கியத்தில் வரும் குணச்சித்திரம் போன்று சொல்லஆரம் பித்துவிட்டார். அவ்வளவு சுவை யாக என்னால் அவற்றைத் திருப்பிச் சொல்ல முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ''அம்பது வருஷத்துக்கு மேலே ஆயிடுச்சி ஸார், நானும் ஜட்கா ஓட்ட ஆரம்பிச்சு'' என்று தொடங்கியவுடன், தொடக்கத்திலேயே உதடு பிதுக்கலுடன் ஒரு (ஜீணீusமீ) நிதானம். ''அப்போஎல்லாம் ஸார்'' என்று சொல்லி, ஒரு சிறு மௌனம்... அப்புறம் மீசை நீவல்... உதடுகளுக்குள் ஓர் ஏலாமைச் சிரிப்பு... பின்னர் ஒரு பெருமூச்சு! ''ம்... இப்பத்தானே டாக்சிங்க, காருங்க எல்லாம் வந்துடுச்சு. இந்தத் தொயிலுக்கு மரியாதியே பூடிச்சு ஸார்... அந்தக் காலத்திலே வண்டிகளு

முதியோர் கொடுமை: சென்னை முதலிடம்-கருத்தரங்கில் தகவல்

Image
நெல்லை: முதியோர்க்கு கொடுமைகள் இழைக்கப்படும் இடங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது என நெல்லையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. நெல்லையில் ஹெல்பேஜ் இந்தியா சார்பில் பள்ளி மாணவர்கள் மத்தியில் முதியோர் பராமரிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து பள்ளி முதல்வர்கள், தளாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.   அப்போது ஹெல்பேஜ் இந்தியா நிறுவனத்தின் சிறப்பு ஆலோசகர் இந்திராணி ராஜதுரை பேசியதாவது, முதியோர்களை மதிக்காத போக்கு அதிகரித்து வருகிறது. பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது, சொத்துகளை எழுதிவாங்கிவிட்டு விரட்டி அடிப்பது, அடிப்படைத் தேவைகளைக் கூட கவனிக்காமல் புறக்கணிப்பது அதிகரித்துள்ளது.   கடந்த 2004-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது நாடு முழுவதும் 80 மில்லியன் முதியோர்கள் இருந்தனர். 2025-ம் ஆண்டில் 160 மில்லியன், 2040-ம் ஆண்டில் 324 மில்லியன் முதியோர்கள் இருப்பர் என கணக்கிடப்பட்டுள்ளது. முதியோர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வி்ல் முதியோர்களுக்கு கொடுமைகள் இழைக்கப்படும

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

இன்று சென்னையில் இருக்கும் மக்களில் பெரும்பான்மையோர், மற்ற ஊர்களில் இருந்து வந்து குடியேறியோர். அதனால், சென்னையின் ஏற்கனவே இருந்த(!) இயல்பான தமிழ்(!) வழக்கொழிந்து போய், எல்லாம் கலந்த சாக்கடை... ம்ஹூம்...பஞ்சாமிர்தமாகி விட்டது. ஆனாலும், வந்து குடியேறுவோரின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. 'மெட்ராஸ்' என்பது சென்னையின் பழைய பெயர். எப்போ அரசாங்கம் Madras-ஐ சென்னை-னு மாத்திடுச்சோ, அப்பவே நாமெல்லாம் அந்த பெயரை மறந்திட்டோம். அதான் நியாபகப்படுத்தவேண்டியுள்ளது. 'பாஷை' - சமஸ்கிருத பாஷையிலிருந்து...மன்னிக்க...சமஸ்கிருத மொழியிலிருந்து 'பாஷா' (பாட்ஷா அல்ல) என்ற வார்த்தையை ஸ்வீகரித்துக் கொண்டு, அது மருவி 'பாஷை' ஆனது. அன்று முதல் 'மெட்ராஸ் பாஷை' எங்களின் மொழியானது. 'மெட்ராஸ் பாஷை' - ஒரு வரலாற்று பார்வை மெட்ராஸ் பாஷையின் இலக்கணத்தில் முக்கிய பங்காற்றுவது, ஆங்கிலம் என்னும் மொழி. இந்த ஆங்கில மொழியானது இன்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மொழி. எம்.ஆர்.ராதா முதல் 'சின்ன(புத்தி) கலைவானர்' விவேக் வரை