ஒரு வழிப்பாதை
கிண்டி ரயில் நிலையம் அருகில் பாலம் ஏறி இறங்கி, போராடி சர்தார் படேல் சாலையில் திரும்ப வலது புறம் ஒதுங்கினால் செல்லம்மாள் கல்லூரி அருகில் வலது புறம் திரும்ப முடியாது என்று பலகை. சில நாட்கள் முன்பு நாளிதழில் படித்திருந்த ஒரு வழிப்பாதை ஏற்பாடு மங்கலாக நினைவு வந்தது. கிண்டியிலிருந்து அடையாறு செல்ல வேண்டுமானால் செல்லம்மாள் கல்லூரியின் எதிரில் காத்திருந்து திரும்பாமல், ஒரு வழிப்பாதையாகி விட்ட அடுத்த பகுதியில் சின்னமலை வரை போக வேண்டும். சின்ன மலையிலிருந்து வலது புறம் திரும்பி ராஜ்பவன் நோக்கிப் போகும் போது சைதாப்பேட்டையிலிருந்து கிண்டி போக வேண்டிய வண்டிகளும் சேர்ந்து கொள்கின்றன. ராஜ்பவன் எதிரில் இடது புறம் திரும்பி அடையாறு. வலது புறம் திரும்பி சர்தார் படேல் சாலையிலிருந்து வரும் வாகனங்களுடன் சேர்ந்து கொண்டு வேளச்சேரி சாலைக்குப் போக வேண்டும் வேளச்சேரி நோக்கிப் போக வேண்டியவர்கள். சில கிலோமீட்டர்கள் கூடுதலாக சுற்ற வேண்டியிருந்தாலும், எங்கும் தேங்காமல், காத்திருக்காமல் நான்கு சாலை நிறுத்தங்களை முற்றிலும் ஒழித்து விட்ட இந்த ஏற்பாடு ஏதோ கனவுலகம் போலத் தோன்றியது. வேளச்சேரியிலிருந்து வந்து அடையாறு போக ...