Posts

Showing posts with the label சென்னை சாலைவிபத்து

சென்னைவாசிகளே! பாத்து போங்கப்பா...!!

போன வாரம் இரவு சுமார் 11:30 அளவில் அலுவலில் இருந்து வீட்டிற்கு (அலுவல்) காரில் திரும்பி வந்து கொண்டிருந்தேன். விமான நிலையம் தாண்டி அடுத்து வந்த பழவந்தாங்கல் சிக்னல் அருகே வண்டி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எங்கள் வண்டியை வெள்ளை மாருதி ஸ்விஃப்ட் ஒன்று ஓவர் டேக் செய்தது. வழக்கமாக இப்படி இன்னொரு வண்டி ஓவர் டேக் செய்யும் பொழுது வண்டியின் வேகத்தை கணிப்பேன். எங்கள் வண்டியில் 80 காட்டியது. அவன் ஓவர் டேக் பன்னின விதத்தை பார்த்தால் எப்படியும் கண்டிப்பாக 110க்கு மேல் தான் சென்றிருக்க வேண்டும். அவன் எங்களை மட்டும் ஓவர் டேக் செய்யவில்லை. ரோடில் இருக்கிற எல்லா வண்டியையும் ஓவர் டேக் செய்துகொண்டு தான் சென்றது. அதுவும் அப்படி ஒரு ராஷ் ட்ரைவ். எங்கள் வண்டிக்கு முன்னால் ஒரு கன ரக சுமையூந்து, அதாவது லாரி (நன்றி மக்கள் தொலைக்காட்சி) சென்றது. அது சாதாரன லாரி கிடையாது. பாறைகளையும் ஜல்லிக்கற்களையும் ஏற்றிச் செல்லும் லாரி. அந்த லாரி சற்றே உயரமுடனும் அதன் சக்கரம் அகலமாகவும் இருக்கும். அடுத்து அந்த லாரியையும் ஓவர் டேக் செய்ய முயன்றது. அந்த காருக்கு இடதுபுறம் மற்றொரு காரும் வலது புறத்தில் அந்த லாரியும். இடையி...