Posts

Showing posts with the label விழா

சென்னைக்குப் பொறந்த நாளு

Image
168 ஆண்டுகளுக்கு முன்பாக, சென்னைப்பட்டினமாக உருவெடுத்த தினம் இன்று.. சென்னை தினத்தை முன்னிட்டு லலித் கலா அகாதமியுடன் இணைந்து இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவுக் களஞ்சியம் என்ற பெயரில் ஒரு கண்காட்சியை நடத்துகிறது. இக்கண்காட்சி வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெற இருக்கிறது. லலித் கலா அகாதமி சேர்மன் பேராசிரியர் பாஸ்கரன் குத்துவிளக்கேற்றி நிகழ்வைத் துவங்கிவைத்தார். பல்வேறு கால கட்டத்தைச் சேர்ந்த இந்திய ரூபாய்களையும் காசுகளையும் இங்கே காட்சிப் படுத்தி உள்ளனர் கள்ள நோட்டுகளை அடையாளம் காட்டும் ரசாயன பயிற்சிகளையும் இலவசமாக செய்து காட்டுகின்றனர் பார்வை பறிபோன பிறகு ஓவியர் மனோகர் வரைந்த சென்னை குறித்த சித்திரங்களையும் காட்சிப் படுத்தி யுள்ளனர் சென்னை தினம் குறித்த பிற தளங்கள். 1. விருபாவின் சென்னை வாரம் 2. சென்னை தின நிகழ்வுகள்

சென்னை சங்கமம் – பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சி!

Image
சென்னை மக்களின் கலை, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் தலங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக "தமிழ் மய்யம்" அமைப்பு "சென்னை சங்கமம்" என்ற ஒருவார விழாவினை நடத்த முன்வந்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் உதவியும் இவ்விழாவிற்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இளைய தலைமுறையினருக்கு அறிமுகமில்லாத தமிழகத்தின் பண்பாட்டுக் கலைகளையும், கிட்டத்தட்ட அழிந்துப்போன தமிழின அடையாளங்களையும் மீட்டெடுக்கும் விதத்தில் இந்நிகழ்ச்சிகள் அமையும் என நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள் உறுதியளித்திருக்கிறார்கள். 200க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் சென்னையின் பல்வேறு இடங்களில் பெப்ருவரி 21 முதல் 26 வரை நடத்தப்படும் எனத் தெரிகிறது. தமிழக அரசும் இந்நிகழ்ச்சியை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்த உறுதி அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இக்கலாச்சார நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேவாரமும், திருப்புகழும் சென்னையின் புகழ்பெற்ற பூங்காக்களில் பாடப்படும் என்றும், தமிழர்களின் இசைக்கலாச்சார அடையாளமான நாதஸ்வர நிகழ்ச்சிகளும் அவற்றோடு ஒன்றிணைந்து நடத்தப்படும் என்று விழா பொறுப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மரங்கள் ...

குறும்பட விழா -செ.பு.க 3

சென்னை புத்தக கண்காட்சியின் பிரிவாக, சர்வதேச-தேசிய குறும்படம் மற்றும் ஆவணப் படத் திரைவிழா நேற்று புத்தக கண்காட்சியின் மூன்றாவது நாளில் தொடங்கியது. பபாசி மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருக்கும் இந்தத் திரைவிழா, புத்தக கண்காட்சி அரங்கத்துக்கு வெளியே, சுட்டிவிகடனின் குழந்தைகள் அரங்கத்தை அடுத்து A.K. செட்டியார் அரங்கத்தில் நடக்கிறது செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வந்திருந்து தொடங்கி வைத்தார். திரையிடப்படும் படங்கள் பற்றிய விவரம்: முழுமையாக பார்க்க இயக்குனர் சிவக்குமார் பேசுகையில், த.மு.எ.சங்கத்தினரின் முயற்சியில் தமிழக எழுத்தாளர்கள் பலரும் பங்குபெற்ற குறும்பட பயிற்சிப் பட்டறை போன வருட இறுதியில் நிகழ்ந்தது என்றும், அதன் தொடர்ச்சியாக, இளம் தமிழ் எழுத்தாளர்கள் பலரும், குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் எடுக்கும் வேலையில் தற்போது மும்முரமாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டார். மீண்டும் பிப்ரவரியில் கூடி இப்படி எடுக்கப்பட்ட குறும்படங்கள் குறித்த விவாதங்கள் நடைபெறப் போவதாகவும் தெரிவித்தார். [கண்காட்சி அரங்கத்திற்கு வெளியில் இருப்பதால், அநேகமாக இந்தத் திரைவ...

சென்னை புத்தகத் திருவிழா Day - 2

Image
முதல் நாள் படங்கள் இங்கே இரண்டாவது நாள் செய்திக்கு இங்கே

மைலாப்பூர் திருவிழா சில காட்சிகள்

Image
சென்னை மைலாப்பூர் பகுதியில் இயங்கி வரும் மைலாப்பூர் டைம்ஸ் பத்திரிக்கையும், சுந்தரம் பைனான்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய மைலாப்பூர் திருவிழா ஜனவரி 4 முதல் 7ம் தேதி வரை சிறப்பாக நடந்து முடிந்தது. கரகாட்டம், பொய்க்கால் ஆட்டம், நாடகம், இசை விழா, குழந்தைகளுக்கான போட்டி மட்டுமன்றி, இல்லாத்தரசிகளுக்கான போட்டிகள், கோலப்போட்டி, சமையல் போட்டி என நான்கு நாட்கள் ஒரே ஜமாய் தான். தினமும் அத்திருவிழாவினை கவர் செய்து செய்திகள் தர திட்டமிட்டிருந்தோம். ஆனால் அது நிறைவேறாமல் போனது. தனிப்பட்ட பணிகளினால் குழு உறுப்பினர்கள் அனைவருமே சிக்குண்டு போனோம். அதனால் முழுவிழாவினையும் கவர் செய்ய முடிய வில்லை. அவ்வப்போது எட்டிப்பார்த்து எடுத்த படங்களுடன் இந்த பதிவு. மைலாப்பூர் நினைவு படுத்தும் புகைப்பட கண்காட்சி நடந்தது. கடந்த வருட புகைப்படத்தில் ஆர்வத்துடன் தன்னைத் தேடும் தேடும் ஒருவர். புகைப்படங்களை பார்வையிடும் மக்கள். அதே மக்கள் தான் வேறு நிமிடங்களில்.. :) கட்டைகால் நடனம். படம் உதவி தினமலர். கோலம் போடும் வெளிநாட்டுப் பெண்மணி. படம் உதவி: தினமலர் கோலமிடும் அழகு. லாங்க் ஷாட்! சின்னசிறு கைவினைப் பொருட்களுக்காக கடைதிற...