குறும்பட விழா -செ.பு.க 3

சென்னை புத்தக கண்காட்சியின் பிரிவாக, சர்வதேச-தேசிய குறும்படம் மற்றும் ஆவணப் படத் திரைவிழா நேற்று புத்தக கண்காட்சியின் மூன்றாவது நாளில் தொடங்கியது. பபாசி மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருக்கும் இந்தத் திரைவிழா, புத்தக கண்காட்சி அரங்கத்துக்கு வெளியே, சுட்டிவிகடனின் குழந்தைகள் அரங்கத்தை அடுத்து A.K. செட்டியார் அரங்கத்தில் நடக்கிறது

செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வந்திருந்து தொடங்கி வைத்தார்.

திரையிடப்படும் படங்கள் பற்றிய விவரம்:






முழுமையாக பார்க்க

இயக்குனர் சிவக்குமார் பேசுகையில், த.மு.எ.சங்கத்தினரின் முயற்சியில் தமிழக எழுத்தாளர்கள் பலரும் பங்குபெற்ற குறும்பட பயிற்சிப் பட்டறை போன வருட இறுதியில் நிகழ்ந்தது என்றும், அதன் தொடர்ச்சியாக, இளம் தமிழ் எழுத்தாளர்கள் பலரும், குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் எடுக்கும் வேலையில் தற்போது மும்முரமாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டார். மீண்டும் பிப்ரவரியில் கூடி இப்படி எடுக்கப்பட்ட குறும்படங்கள் குறித்த விவாதங்கள் நடைபெறப் போவதாகவும் தெரிவித்தார்.

[கண்காட்சி அரங்கத்திற்கு வெளியில் இருப்பதால், அநேகமாக இந்தத் திரைவிழாவுக்கு எந்தக் கட்டணமும் இல்லை என்று நினைக்கிறேன். ;)]

Comments

தகவலுக்கு நன்றிங்க பொன்ஸ்
தகவலுக்கு நன்றிங்க பொன்ஸ்
தகவல் பயனுள்ளதாக இருந்தது பொன்ஸ், நன்றி.

அனைத்து தலைப்புகளையும் பார்த்துவிட ஆசை.

பணிச்சுமையும் மிக அதிகமாக உள்ளது. குறைந்தபட்சம் எவ்வளவு முடியுமோ பார்த்துவிட வேண்டும்.

கண்காட்சி அரங்கம் எனது வசிப்பிடத்திலிருந்து வெகு அருகாமை என்பது நல்லதாய் போய்விட்டது.
பொன்ஸ், திரைப்படங்கள் குறித்த விபரங்களுக்கு நன்றி. 'பதேர் பாஞ்சாலி'பார்க்க வேண்டுமென்றிருந்தேன். உங்கள் தொலைபேசி ஏன் மெளனமாக இருக்கிறது?
"பிடில் காஸ்ட்ரோ" ??

;-))
ஆஹா, இந்த மாதிரி எக்ஸெல் ஷீட்டை எப்படி எம்பெட் பண்ணுவது? அதைக் கொஞ்சம் சொல்லிக் குடுங்களேன்... :)
-/பெயரிலி,
இந்தக் குறுஞ்சிரிப்புக்கு என்ன பொருள்? ஏதும் தப்பா எழுதிட்டேனா? :)
நீங்கள் ஒன்றும் தவறாக எழுதவில்லை; சொல்லப்போனால், எவருமே தவறாக எழுதவில்லை.
நீங்கள் படவிவரம் சுட்டிய கூகுல் விரிதாளிலே அப்படியாக எழுதப்பட்டிருந்தது.
பிடிலுக்கும் காஸ்ட்ரோவுக்கும் இடையே இழையும் பிணைப்பினை எண்ணிச் சொன்னேன்.
"நான் சொல்வேன் ரொமாற்றோ; நீர் சொல்வீர் டொமாட்டோ" கதைதான் என்றாலுங்கூட, fidel என்பதை பிடில் என்று வாசிக்கும்போது, வந்த குறுஞ்சிரிப்பே அது.
வேறொன்றுமில்லை.
//fidel என்பதை பிடில் என்று வாசிக்கும்போது, வந்த குறுஞ்சிரிப்பே அது.
வேறொன்றுமில்லை.//
கரெக்ட்தான்.. அப்படியே சொல்லிப் பழகிவிட்டது :) இப்போது படிக்கும்போது எனக்கும் சிரிப்பு வருகிறது :))))

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

எழுத்தறிய நூலகங்கள்