Posts

Showing posts with the label வாழ்த்துக்கள்

ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

Image
இனிய வலைப்பதிவர்கள் அனைவருக்கும் எங்கள் குழுவின் சார்பாக '2007 ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!' நாட்காட்டி உதவி:- இங்கேயிருந்து..

சென்னைக்கு பர்த் டே

Image
இன்று, சென்னையின் வயது 367 இன்னும் சில ஆண்டுகளில் சிலிகான் நகரமாக மாறிவிடும் என்று சொல்லும் அளவுக்கு மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது சென்னை நகரம். நீண்ட வரலாறு பழைய சினிமா படங்களில் சென்னையைக் காண்பிக்கும்போது சென்டிரல் ரெயில் நிலையத்தையும் அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தையும் காட்டுவார்கள். இன்று எல்.ஐ.சி. கட்டிடத்தை விட உயரமான பெரிய பெரிய கட்டிடங்களையும், கம்ப்ïட்டர் நிறுவனங்களையும் ஆங்காங்கே பார்க்கலாம். குதிரை வண்டிகள் ஓடிய அண்ணா சாலையில் இன்று விதவிதமான வெளிநாட்டு சொகுசு கார்கள் சீறிப்பாய்ந்து செல்கின்றன. வானளாவிய உயர்ந்த கட்டிடங்களையும், நவீன வசதிகளையும் கொண்டுள்ள செனëனை நகரம் உருவான வரலாறு நீண்ட நெடியது. ஆகஸëட் 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சென்னைக்கு 367 வயது ஆகிறது. சென்னையை உருவாக்கியவர்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, ஆண்ட்ரு கோகன் ஆகிய இருவரும்தான் சென்னையை உருவாக்கியவர்கள். இப்போதைய சென்னை அந்த காலத்தில் `சென்னப்பட்டினம்' என்றும், `மெட்ராஸ்பட்டினம்' என்றும் அழைக்கப்பட்டு வந்தது. இதற்கு முன்பு மைலாப்பூர், எழும்பூர், திருவல்லிக...