சென்னைக்கு பர்த் டே

இன்று, சென்னையின் வயது 367



இன்னும் சில ஆண்டுகளில் சிலிகான் நகரமாக மாறிவிடும் என்று சொல்லும் அளவுக்கு மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது சென்னை நகரம்.

நீண்ட வரலாறு

பழைய சினிமா படங்களில் சென்னையைக் காண்பிக்கும்போது சென்டிரல் ரெயில் நிலையத்தையும் அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தையும் காட்டுவார்கள்.

இன்று எல்.ஐ.சி. கட்டிடத்தை விட உயரமான பெரிய பெரிய கட்டிடங்களையும், கம்ப்ïட்டர் நிறுவனங்களையும் ஆங்காங்கே பார்க்கலாம். குதிரை வண்டிகள் ஓடிய அண்ணா சாலையில் இன்று விதவிதமான வெளிநாட்டு சொகுசு கார்கள் சீறிப்பாய்ந்து செல்கின்றன.

வானளாவிய உயர்ந்த கட்டிடங்களையும், நவீன வசதிகளையும் கொண்டுள்ள செனëனை நகரம் உருவான வரலாறு நீண்ட நெடியது. ஆகஸëட் 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சென்னைக்கு 367 வயது ஆகிறது.

சென்னையை உருவாக்கியவர்கள்

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, ஆண்ட்ரு கோகன் ஆகிய இருவரும்தான் சென்னையை உருவாக்கியவர்கள். இப்போதைய சென்னை அந்த காலத்தில் `சென்னப்பட்டினம்' என்றும், `மெட்ராஸ்பட்டினம்' என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

இதற்கு முன்பு மைலாப்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, திருவானëமிïர், திருவொற்றிïர் என்று பல்வேறு சிறுசிறு கிராமங்களாகவும், குட்டி குட்டி நகரங்களாகவும் செனëனப்பட்டினம் காட்சி அளித்தது. புதர்கள், காடுகள், மரங்கள் சூழ்ந்த இந்த ஊர்களுக்கு இடையே கூவம், அடையாறு போன்ற ஆறுகள் பாய்ந்து ஓடின.

ஆங்கிலேயர்கள் வருகை

சென்னப்பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாசனை திரவியம் மறëறும் ஜவுளி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தது. போர்ச்சுக்கீசியர்களின் வருகைக்குப் பின்னரே அது வளர்ச்சி அடையத் தொடங்கியது. கி.பி. 1552-ம் ஆண்டில் போர்ச்சுக்கீசியர்கள் சாந்தோமில் குடியேறி வியாபாரம் செய்தனர்.

சென்னப்பட்டினத்தில் விலை உயர்ந்த ஜவுளி மூலப்பொருட்கள் கிடைத்தன. இதை குறிவைத்து இங்கு கால்பதிக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். இதற்காக கிழக்கிந்திய கம்பெனி பிரான்சிஸ் டே, ஆண்ட்ரு கோகன் என்ற 2 வியாபாரிகளை சென்னப்பட்டனத்திற்கு அனுப்பி வைத்தது. சென்னப்பட்டினத்துக்கு வந்த அவர்கள் இருவரும் வணிக மையம் கட்டுவதற்காக இடம் பார்த்தனர்.

ஜார்ஜ் கோட்டை

அதற்காக பூந்தமல்லி நாயக்கர் மன்னரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்தை வாங்கினார்கள். அந்த இடத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் வணிக மையத்தையும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் 22.8.1639-ல் கட்டினர். இதுதான் சென்னை உருவாக பிள்ளையார்சுழி போட்டது.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. வணிக வளாகம் கட்டப்பட்டதால் ஐரோப்பியர்கள் நிறைய பேர் வந்தனர். அவர்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை சுற்றிலும் வீடு கட்டி குடியேறினர். அந்த பகுதி வெள்ளை பட்டினம் என்று அழைக்கப்பட்டது. அதற்கு வெளிப்புற பகுதியில் ஆந்திராவில் இருந்து வந்த ஏராளமான நெசவாளர்கள் குடியேறினர். இது கறுப்புபட்டினம் என்று அழைக்கப்பட்டது. இந்த பகுதிதான் பின்னர் ஜார்ஜ் டவுண் ஆனது.

கைமாறியது

செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே உள்ள பகுதி சென்னப்பட்டினம் என்றும், தெற்குப் பகுதி மதராஸ் பட்டனம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த இரண்டு பட்டணங்களையும் ஒன்றுசேர்த்து ஆங்கிலேயர்கள் மதராஸ் பட்டினம் என்றும், தமிழர்கள் சென்னப்பட்டினம் என்றும் அழைத்தனர்.

1,653-ல் சென்னப்பட்டினம் சென்னை மாகாணமாக மாறியது. அதன் பின்னர் 1,702-ல் முகலாயர்களாலும், 1741-ல் மராட்டியர்களாலும் அது தாக்குதலுக்கு உள்ளானது. 1,746-ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் கைவசமானது.

பெயர் மாற்றம்

பின்னர் ஆங்கிலேயர்களின் கைக்கு போனது. 1,758-ல் மீண்டும் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினர். ஆனால், 2 மாதங்களிலேயே ஆங்கிலேயர்கள் திரும்பவும் மீட்டனர். அன்றுமுதல் 1947-ம் ஆண்டுவரை செனëனை மாகாணம் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

சென்னை மாகாணம் 1,968-ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. அதுபோல, மெட்ராஸ் என்று இருந்த பெயர் 1997-ம் ஆண்டு சென்னை என்று மாற்றப்பட்டது. 30 ஆயிரம் மக்கள்தொகையுடன் உருவான சென்னை நகரின் மக்கள்தொகை தற்போது 60 லட்சத்தை தாண்டிவிட்டது. சென்னை நகரின் பரப்பும் விரிவடைந்து கொண்டே போகிறது.

`மெட்ராஸ் டே'

1,639-ம் ஆண்டு உருவான சென்னை நாளை (22-ந் தேதி) தன்னுடைய 367 வயதை அடைகிறது. சென்னை தோன்றிய தினத்தை கோலாகலமாக கொண்டாட சென்னைவாசிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக `மெட்ராஸ் டே' என்ற பெயரில் அந்த கொண்டாட்டத்தை ஒரு வார காலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையின் பாரம்பரிய சிறப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் இருக்கும். இதையொட்டி சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் பொதுமக்கள் பங்கேற்கும் நடைபயணம் தொடங்கியது. முதல் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், முதல் லைட் ஹவுஸ், முதல் வணிக வளாகங்கள், ஆரம்ப கால பள்ளி மற்றும் கல்லூரிகள் முதலில் ஜார்ஜ்டவுனில் தான் தொடங்கப்பட்டன.

பழைய கால சின்னங்களை பார்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நடை பயணத்தில் குறைந்த அளவே பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஆர்மேனியன் சர்ச், பின்னி அலுவலகம், கோகலே ஹால், ஐகோர்ட்டு கட்டிடங்கள், ஜார்ஜ் மன்னரின் சிலை, சென்னப்பட்டினம் என்ற பெயர் வரக்காரணமாக இருந்த பட்டணம் கோவில் உள்பட அந்த பகுதியில் உள்ள பழைய கட்டிடங்கள், நினைவு சின்னங்கள் போன்றவைகள் காண்பித்து விளக்கப்பட்டன.

ஒரு வாரம் கொண்டாட்டம்

இதேபோல் காலை 6.30 மணிக்கு மைலாப்பூர்-சாந்தோம் பகுதியிலும் ஒரு நடைபயணம் நடந்தது. இதில் லஸ் சர்ச், திருவள்ளுவர் கோவில், பஜார் பகுதி, பழமையான போலீஸ் நிலையம், கபாலீசுவரர் கோவில், போர்ச்சுகீசியர்கள் குடியேறிய சாந்தோம் ஆகிய பகுதிகள் காண்பிக்கப்பட்டு விளக்கப்பட்டன.

வருகிற 27-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் சென்னையின் பாரம்பரியத்தை நினைவுகூரும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
**************
நன்றி: தினத்தந்தி

படம் & சேதியை தேடும் சிரமத்தை நீக்கிய அண்ணன் பாலபாரதி க்கு நன்றி!

Comments

அடப்பாவீகளா... எனக்கேவா...?
நல்லது எங்கே இருந்தாலும் ஏத்துக்க வேணும் அப்படிங்குறது எங்க 'பாலா' பாடம் தல ;)

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

27D