Posts

Showing posts with the label அறிமுகம்

முழு சென்னைவாசியாக 50 டிப்ஸ்

இன்னா நைனா? ஊருக்கு புச்சா? மொதல்ல இத படிச்சு கரீக்டா ஃபாலோ பன்னேன்னு வெச்சுக்க, நீ மெய்யாலுமே 100 பர்சன்ட் சென்னைவாசி ஆயிடலாம்... 1. சினிமா சூட்டிங்னு நின்னு வேடிக்கை பார்த்து தொலையாதீங்க. அது நிஜ என்கவுன்ட்டரா இருக்க போகுது. 2. "சென்னைக்கு வந்துட்டோம்டா" அப்படீன்னு ஒரு பெருமிதம் உங்களோட வந்து ஒட்டிக்கும் (ஹி..ஹி..எனக்கு ஒட்டிகிச்சு இல்ல), அந்த பெருமிதத்தோட சென்னைல கால் வைக்கவும். முடிஞ்சா வலது கால வைக்கவும் (BTW, இப்படி யோசிக்கிற நேரத்துல ஏதாவது ஒரு பிக்பாக்கெட் உங்ககிட்ட வேலையை காட்டிடலாம், உசார் மாமே). 3. ஊருக்கு வந்து இறங்கி சென்ட்ரலோ அல்லது கோயம்பேடிலோ வெளியே வந்ததும், மேலே ஏதாவது ஏரோப்ளேன் சத்தம் கேட்டா அங்கேயே நின்னு வானத்தையே அன்னாந்து பார்க்கனும். (எப்படி அவ்ளோ பெரிய ஏரோப்ளேனுக்கு பெயின்ட் அடிப்பாங்கன்னு கேக்கக்கூடாது). 4. "மெட்ராஸ்லல்லாம் ஆட்டோகாரங்க நல்லா ஏமாத்திடுவாய்ங்கடா"-ன்னு எவனாச்சு ஒரு ஃபிரென்டு கண்டிப்பா உங்ககிட்ட சொல்லியிருப்பான். அதனால் கோயம்பேடிலோ, சென்ட்ரலிலோ இறங்கியதும், ஆட்டோ பிடிக்கிறத நிப்பாட்டனும். எவ்ளோ தூரமானாலும் நடராஜா சர்வீஸ், இல்ல ...

ஏன் இந்த வலைப்பூ?

Image
செ ன்னை பற்றிய புள்ளிவிவரங்களும் தகவல்களும், எளிதில் பல இடங்களில் உங்களுக்குக் கிடைக்கலாம். அது மட்டுமல்ல எங்கள் நோக்கம். நாம் விரும்பும் சென்னையை, நாம் அறிந்த சென்னையை, உணர்வுபூர்வமாகச் சொல்ல ஆசைப்பட்டதன் விளைவே இந்த வலைப்பூ. பொதுவாக ஏதாவது வேலை விஷயமாக சென்னை வரும் நண்பர்கள், ஒன்றிரண்டு நாட்கள் சென்னையில் தங்கி, அதற்காக மட்டுமே அலைந்து திரிந்து, வந்தவேலை முடிந்தோ முடியாமலோ கிளம்பிப் போகும்போது சொல்லிவிட்டுப் போகும் ஒரு வசனம் - "ச்சே... ச்சே... எப்படித்தான் இந்த ஊர்ல இருக்கீங்களோ...?" அப்போதெல்லாம் அவர்களுக்கு என்ன சொல்லிப் புரியவைப்பதென்று தெரியாது. 'வந்த வேலையை முடிக்க மட்டுமே அலைஞ்சா, சென்னை மட்டுமல்ல, எல்லா ஊருமே இப்படித்தான் இருக்கும்...' - இது நான் என் நண்பர்களுக்குச் சொல்வது. இனி இதைமட்டும் சொல்லாமல் இந்த வலைப்பூவை அவர்களுக்குப் பரிந்துரை செய்யலாம்! சென்னை என்பது ஒரு ஊர் மட்டுமல்ல. அது ஒரு உறவு! இதனை இந்த வலைப்பூ உணர்த்தினால் அதுவே எங்கள் மகிழ்ச்சி :) இன்னதென்று வகைப்படுத்த முடியவில்லை. சென்னை தரும் அனுபவங்கள் அனைத்தும் இங்கு வரலாம். நல்ல விஷயங்கள் மட்டுமல்ல. ...