சென்னை : சிலிகான் சமவெளி
சென்னை கடந்த நான்கு வருடங்களாக ஒரு மிகப்பெரிய சிலிகான் புரட்சியை அமைதியாக செய்து வருகிறது... ஆறு மாதங்களுக்கு முன் எடுத்த ஒரு சர்வேயில் 2005-2006 ஆண்டில் மட்டும் நம் சென்னையில் மென்பொருள் நிறுவனங்களுக்கு சுமார் ஒரு கோடியே பத்து லட்சம் சதுர அடி அளவுக்கு கட்டமைப்பு தேவைகள் என CMDAவிடம் விண்ணப்பித்துள்ளன. அனைத்து விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டு இடம் ஒதுக்கப்பட்டு, தற்சமயம் சென்னை மற்றும் அதைச் சுற்றி உள்ள இடங்களில் அவை விண்ணைத் தொடும் கட்டிடங்களாக வளர்ந்துவருகிறன. இன்று சென்னையில் வளர்ந்துவிட்ட மென்பொருள் நிறுவன கட்டிடங்களும், கட்டப்பட்டுவரும் மென்பொருள் நிறுவன கட்டிடங்களும் மேலே உள்ள சென்னை வரைபடத்தில் பார்க்க முடியும். இனி சென்னையில் வானளாவிய, விண்ணைத் தொடும் கட்டிடங்களும் (Skyscrappers) சாதாரண விசயமாக விரைவில் ஆகக்கூடும். CMDAவிடம் அனுமதி பெற்று கட்டப்பட்டு வரும் பலவற்றில் ஒரு சில வரைவு படங்கள் எனக்கு சிக்கின. அவை உங்கள் பார்வைக்கு. ஒரு ஹைடெக் நகரமாக மாறப்போகும் சென்னை, இனி நம்மை மட்டும் அல்ல, அனைத்து மென்/கணிப்பொறி நிறுவனங்களை தன் வசபடுத்தப்போகிறது என்பதில் எனக்கு ஐயமில்லை. குறிப்பிடும் ...