Posts

Showing posts with the label சென்னை சங்கமம்

ஆர்ப்பரிக்கும் கடலலை - Fusion

Image
அந்திவானத்தில் சூரியன் நிகழ்த்திய நிற வேடிக்கைக்கு போட்டியாய் மேடையில் வர்ண ஒளிவிளக்குகள் ஜாலம் காட்டிக் கொண்டிருந்தன. என்றும் கடல் அலையின் சத்தம் ஓங்கி இருக்கும் இடத்தில், மக்களின் சத்தத்தில் கடல் அடங்கி இருந்தது. இடம் கண்டுபிடித்து மண்ணில் கால் புதைய நடைக்கையிலேயே கணீரென ஒரு பெண் குரல் பாட்டு பாடியபடி இருந்தது. அடடா நேரமாச்சோ என்றபடி ஓடிப்போனால், அட அது ஒலிப்பெருக்கிச் சோதனை. ஆம், நீங்கள் நினைப்பது சரிதான் அது பெசன்ட் நகர் கடற்கரையில் 'சென்னை சங்கமத்தின்' நிறைவுநாள் நிகழ்ச்சியேதான். இனி நேரடி ரிப்போட். மாலை 6 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் எனச் சொல்லியிருந்தார்கள். சரியாக 6.10 க்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. அப்போதே அநேக முக்கிய விருந்தினர்களும் வந்துவிட்டிருந்தார்கள். இந்த பத்து நிமிட தாமதம் கூட ஒலி ஒளி அமைப்பு ஏற்பாடு தாமதத்தினால்தான். முதலில் 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் (அவர் தன் பெயரை குறிப்பிடவில்லை) சிறப்பு விருந்தினர் அமைச்சர் பரிதி இளம்வழுதி, இறையன்பு I.A.S, அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி, இந்திரகுமாரி, ராஜாமணி அம்மையார், மலேசிய அமைச்சர் ச...

சென்னை சங்கமம் - பார்க்க வாங்க!

Image
மக்களே! பட்டினக்காரர்களின் கவனக்குறைவால் சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் செய்தியை நீங்க மிஸ் பண்ணியிருப்பீங்க! அந்த குறையை சரி செய்ய, இன்று நிறைவு நாள் நிகழ்ச்சிகள் கலை கட்டப்போகுது, அதையாவது அனைவரும் போய் பார்ப்போம்! இன்று மாலை 6 மணியளவில் பெசன்ட் நகர் கடற்கரையில், சென்னை கூத்து என்ற பெயரில் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நடைப்பெற உள்ளன! சென்னை கூத்தில் ராக் வகை பாடல்களை நம் தமிழ் கலாச்சாரத்துடன் இணைத்து ஒரு Fusion நிகழ்ச்சியாக தமிழகத்தின் தமிழகத்தின் தலை சிறந்த ராக் பாடல் குழுக்களும், தலை சிறந்த கிராமிய நடன குழுக்களும் ஒன்றாக சேர்ந்து , ஒரு புது வகை அனுபவத்தை தரப்போகிறார்கள்! வானவேடிக்கை, வானவெடி நிகழ்ச்சிகள் என்று அசத்தப்போகிறார்கள்! இந்த நிகழ்ச்சி இனிமையான மாலை நேரத்தில், அலைகடல் அருகே தூள் கிளப்பபோகுது! இதற்கு அனுமதி முற்றிலும் இலவசம்! குடும்பத்தோட போய் என்ஜாய் பண்ணுங்க சென்னைவாசிகளே! இடம்: பெசன்ட் நகர் கடற்கரை நேரம்: மாலை 6:00 மணி தேதி : பிப் 26, 2007 அனுமதி: இலவசம்

சென்னை சங்கமம் - நேரடி ரிப்போர்ட

Image
சென்னை சங்கமம் – பறையடி மற்றும் கோலாட்டம்! பெப்ருவரி 21 அன்று மாலை சென்னை கோட்டூர்புரத்தில் மாநகராட்சியால் புதியதாக அமைக்கப்பட்ட பூங்காவில் சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோலாட்டமும், பறையடியும் கோலாகலாமாக நடந்தது. அதற்கு முன்பாகவே புலிவேஷம் கட்டியவர் கலக்கிக் கொண்டிருந்தார். பூம் பூம் மாடு போன்று மனிதர்களே வேடம் அணிந்து குழந்தைகளை மகிழ்வித்துக் கொண்டிருந்தார்கள். எதிர்பார்ப்புக்கு மாறாக மக்கள் பெரும் கூட்டமாக கூடியிருந்தார்கள். சாலையோர சிறிய பூங்காவான அதிலேயே சுமார் 300 முதல் 350 பேர் வரை கூடியிருந்து நிகழ்ச்சிகளை ரசித்தார்கள். சுமார் 100 முதல் 150 குழந்தைகள் வரை வந்திருந்து அட்டகாசம் செய்து கொண்டிருந்தார்கள். கோலாட்டம் என்பது நாம் சினிமாவில் பார்த்து ரசிக்கும் "தாண்டியா" நடனம் போல இல்லாமல் மிக மிக வித்தியாசமாக இருந்தது. 20 வீரர்கள் வட்டமாக நின்றுக் கொண்டு சுமார் இரண்டரை அடி நீளம் கொண்ட மூங்கில் கழி வைத்து விளையாடினார்கள். இவர்களது ஆட்டத்துக்கேற்ப ஒரு கலைஞர் "உடுக்கை" எனப்படும் இசைக்கருவியை அசுரத்தனமாக வாசித்தார். இது வெறும் நடனமாக இல்லாமல் கோல் சண்டை...