Posts

Showing posts with the label சந்திப்பு

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு..

Image
என்றைக்கு: ஞாயிறு 26-ஆகஸ்ட்-2007 எப்போ: மாலை 5 முதல் 7 வரை எங்கே: வுட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னின் விழாக்களுக்கான ஹால்(Conference Hall), கதீட்ரல் ரோடு நிகழ்ச்சி நிரல்: * பதிவர் பட்டறையின் அடுத்த நகர்வு குறித்து விவாதித்தல் - மா.சிவகுமார் * டி.எம்.ஐ நிறுவனத்தின் பணிகள் குறித்த அறிமுகம் - டி.எம்.ஐ சார்பாக நண்பர்கள் சொர்ணம் சங்கரபாண்டி மற்றும் சுந்தரவடிவேல் * மேலும், இணையத்தமிழ் வளர்ச்சியில் முக்கியமான பங்குக்கு சொந்தக்காரரான நண்பர் சுரதா யாழ்வாணனும் இந்த சந்திப்பில் கலந்து கொள்கிறார். தொடர்புக்கு: மா.சிவகுமார்(98840 70556)- பாலபாரதி (99402 03132) மிக குறைந்த இடைவெளியில் அறிவிக்க நேர்ந்துவிட்டது.. நண்பர்களின் வருகையும் இடமும் உறுதி செய்ய நாளாகி விட்டது.. அல்லாரும் மறக்காம வந்துருங்கபா.. மேப் :

கோவை பதிவர் முகாம்: முடிந்தது.

Image
சிரில் அலெக்ஸ் உடன் நடந்த வீடியோ கான்பிரஸ்... நல்ல படியாக நிகழ்வு முடிந்தது. விரிவாக நண்பர்கள் பதிவு செய்வார்கள் என்று எதிர் பார்க்கிறேன்.

கோவை சந்திப்பு - 1

கோவை வலைப்பதிவர் பட்டறை ஆரம்பித்து விட்டது. அறிமுகங்கள் முடிந்து கூட்டம் களை கட்டுகிறது. --மா சிவகுமார் மே 20, 2007 - 10.40 am வந்திருப்பவர்கள (இது வரை) ் 1. பாலபாரதி 2. மா சிவகுமார் 3. வினையூக்கி 4. மோகன் தாஸ் 5. சென்ஷி 6. பாமரன் 7. முகுந்தராஜ் 8. உண்மைத் தமிழன் 9. எஸ் பி வி சுப்பையா 10. கோவை ரவி 11. பி வின்சென்டு 12. தாமோதரன் சந்துரு 13. சேகுவேரா 14. ஜெயகுமார் 15. லிவிங் ஸ்மைல் வித்யா 16. ராஜா வனஜ 17. பாரதி ராஜா

பதிவர் சந்திப்பு - சில பதிவுகள்

கண்ணதாசன் பதிப்பகம் என்ற பலகை வைத்திருந்த தெருவினுள் நுழைந்து வண்டியை பூங்காவின் பின் வாசலில் நிறுத்தி விட்டு நுழைந்தேன். வெயில் இன்னும் தாழ்ந்திருக்கவில்லை. சிமென்டு பாவியிருந்த நடைபாதை வழியே சுற்றிக் கொண்டு வந்தால், தூரத்தில் பளபளக்கும் மொட்டைத் தலை தென்பட பாலபாரதியின் இருப்புப் பளிச்சிட்டது. பாலா, சிறில் அலெக்ஸ், உண்மைத் தமிழன் உட்கார்ந்திருந்தார்கள். வழக்கமான இடத்துக்குச் சற்று தள்ளி நிழலில் இருந்தார்கள். சிறில், இப்போது பழகிப் போனபடி, உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். (அருகிலிருந்த நிழல் மேடையில் இன்னொரு குழுவின் சந்திப்பு நடந்து கொண்டிருந்தது.) வெயில் குறையும் வரை இங்குதான் உட்கார வேண்டும். பாலா சரியாக மூன்றரை மணிக்கு சந்திப்பை ஆரம்பித்து விட்டார். தனியாகப் பேசிக் கொண்டிருந்த போஸ்டன் பாலா, விக்கி, ஐகாரஸ் பிரகாஷும் சேர்ந்து கொள்ள அதற்குள் ராமகி ஐயா, தருமி ஐயா, பாலராஜன் கீதா, வந்து சேர்ந்து விட வட்டம் பெரிதாகியிருந்தது. அப்போதே பத்து பேருக்கு கிட்ட சேர்ந்து விட்டோம் என்று நினைவு. முதலில் சாகரனுக்கு அஞ்சலி செலுத்தும் சிறுமலர் வெளியீடு, நான் கொடுக்க பாலராஜன் கீதா பெற்றுக் கொண்டார்....

சென்னை சந்திப்பு - 22 ஏப்ரல் - 2

சென்னபட்டினம் குழுவின் மூலம் இதுவரை மூன்று வலைபதிவர் சந்திப்புகள் நிகழ்த்தியுள்ளோம். நாகேஸ்வர ராவ் பூங்காவில் ஆகஸ்ட் 2006 இல் முதல் சந்திப்பு நிகழ்ந்த போது, முத்து தமிழினி, முத்துகுமரன், பரஞ்சோதி, வரவனையான் உள்ளிட்ட வெளியூர்/வெளிநாடு வாழ் பதிவர்கள் கலந்து கொண்டார்கள். அனானி பின்னூட்டங்களால் உருவாகிக் கொண்டிருந்த பிரச்சனை பற்றிய விவாதங்களின் முடிவில் அனானி முன்னேற்றக் கழகம் உருவாக முதலடி இந்தச் சந்திப்பில் தான் எடுத்து வைக்கப்பட்டது. நவம்பர் 2006இல் நிகழ்ந்த அடுத்த சந்திப்பு, தேனாம்பேட்டை பார்வதி ஹாலில் நிகழ்ந்தது. (வி)யெஸ்கே, அகிலன், நிலவன், தமிழ்நதி போன்ற வெளிநாடுவாழ் பதிவர்கள் தவிரவும் பல புதிய பதிவர்கள் கலந்து கொண்ட சந்திப்பு அது. தமிழ்வலைபதிவர் உதவிக் குழு இந்தச் சந்திப்பில் உருவம் பெற்றது. தற்போது புதிய பதிவர்களுக்கு உதவியாக செயல்பட்டு வரும் இந்தக் குழுவில் சென்னை பதிவர்கள் மட்டுமல்லாமல் உலகளாவிய பதிவர்கள் பலரும் இருந்து உதவி வருகின்றனர். டிசம்பர் 2006 இல், நடேசன் பார்க்கில் திரு அவர்களின் சென்னை வருகையை ஒட்டி நடைபெற்றது அடுத்த சந்திப்பு. இந்தச் சந்திப்பில் நிகழ்ந்த கருத்துப் பரி...

சென்னை சந்திப்பு - 22 ஏப்ரல் - 1

போன ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ம் தேதி நடேசன் பூங்காவில் ஒரு வலைப் பதிவர் சந்திப்பு நடந்தது. கவிஞர் மதுமிதாவைச் சந்திக்க சில பதிவர்கள் போயிருந்தோம். அருள் குமார், வீரமணி, ஜெய்சங்கர், நான், பாலபாரதி, ப்ரியன், சிங் ஜெயகுமார் எல்லோரும் இந்தச் சந்திப்பு முடிந்ததும் அருள் குமாரின் தூண்டுதலால் இரு சக்கர வண்டிகளில் மாமல்லபுரம் போக முடிவு செய்தோம். அந்தப் பயண விபரங்களை ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொருவர் எழுதி பதிவு செய்தோம். அதைப் படித்த நண்பர்கள் இது போல சென்னையின் வெவ்வேறு பகுதிகளை படம் பிடித்து போடலாம், சென்னை குறித்து எழுத ஒரு கூட்டு பதிவு உருவாக்கலாம் என்று சொன்னார்கள். (சொன்னது மதி கந்தசாமி). பாலபாரதி, பொன்ஸ், அருள் குமார், ஜெய்சங்கர், பிரியன் இவர்களுடன் என்னையும் சேர்த்து ஒரு கூட்டு வலைப்பதிவை உருவாக்கி விட்டார்கள். சென்னப் பட்டிணம் என்று இந்தக் குழுவினர் சேர்ந்து செயல்பட பல திட்டங்களை சொல்வார் பாலபாரதி. அவரது புத்தகக் கடையில் எல்லோரும் சந்தித்தோம். ஒருவர் ஒரு நாள் வீதம் வாரம் ஆறு பதிவுகள் என்று நான் சொன்ன அதி ஆர்வத் திட்டத்தைக் கைவிட்டு மாதம் ஆறு பதிவுகளாவது போடுவது என்று குறைந்த பட்ச செயல் திட்...

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு

Image
சரியாக நான்கு மணிக்கு, இராம.கி அவர்களின் தலைமையில் பாலபாரதியின் முன்னுரையுடன் இனிதே தொடங்கியது சென்னை வலைபதிவர் சந்திப்பு. சந்தித்தவர்கள் விவரம் பின்வருமாறு: அருள்குமார் we the people இராம.கி ஜெ.சந்திரசேகரன் லக்கிலுக் த.அகிலன் தே. நிலவன் வினையூக்கி ஓகை நடராஜன் யெஸ். பாலபாரதி ப்ரியன் தமிழ்நதி பா.ஜெயகமல் கோ. சரவணன் இரா.சமு.ஹமீது எச்.எஸ்.முகமது ரஃபி ரோசாவசந்த் சிமுலேஷன் எஸ்கே பொன்ஸ் மிதக்கும்வெளி தங்கவேல் டிபிஆர் ஜோசப் சிவஞானம் ஜி செந்தில் கௌதம் விக்னேஷ் மரவண்டு கணேஷ் (சந்திப்புப் பதிவேட்டின் வரிசைப்படியே..) பதிவேட்டில் பெயர் எழுதாமல் விட்டுப் போனவை:) டோண்டு பூபாலன் விஜய் - இட்லிவடையின் நிழற்பட வல்லுனர் வலைதிரட்டிகளின் அடுத்த நகர்வு என்ற தலைப்பில் மா.சிவகுமாரின் கட்டுரை வாசிப்பைத் தொடர்ந்து அது குறித்தான ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டன. கணினித் தொழிற்நுட்பம் தெரிந்த பதிவர்கள் சேர்ந்து உதவி மையம் ஒன்று தொடங்கலாம் என்றார் விக்கி. அது குறித்த அறிவிப்பொன்று விக்கியின் பதிவில் விரைவில் வரும். சுமார் நாற்பதைம்பது பேரை எதிர்பார்த்து தேநீருக்குச் சொல்லி இருந்தபடியால், முதல் சுற்றுத் தேநீர் வினியோகம் ...

இணையம் குறித்து சென்னையில் மாநாடு

Image
இணையம் குறித்து சென்னையில் மாநாடு இணையத்தில் தகவல் பரிமாற்றம் நடைபெறும் முறையினை பிரதிபலிக்கும் வகையில் மாநாடு பிளாக்கிங் தகவல் பரிமாற்ற முறை வேகமாக பரவி வருகின்றது இணையதளத்தில் தகவல்பரிமாற்றம் நடைபெறும் முறையின் எதிர்காலநிலையை பிரதிபலிக்கும் விதமாக, தமிழகத் தலைநகர் சென்னையில் செப்டம்பர் மாதம் ஒன்பது மற்றும் பத்தாம் தேதிகளில் தேசிய அளவிலான இரண்டு நாள் மாநாடு ஒன்று நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய புரட்சியாக கருதப்படும் இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் முறைகளில் பிளாக்கிங் என்கிற நடைமுறை தற்போது அதிவேகமாக பிரபலமடைந்துவருகிறது. இதை தமிழில் வலைப்பதிவுகள் என்றும் வலைப்பூக்கள் என்றும் வலைப்பின்னல்கள் என்றும் பல பெயர்களில் அழைக்கிறார்கள். பத்திரிகைத்துறையின் ஆரம்பகாலகட்டத்தில் கையெழுத்துப்பிரதிகள் நடத்தப்பட்டன. அதாவது தனிமனிதர் ஒருவர் தனக்கு பிடித்த விடயங்கள் பற்றிய தனது கருத்துக்களை கையால் எழுதி தனிச்சுற்றுக்கு விடுவது கையெழுத்துப்பிரதியாக விளங்கிவந்தது. ஏறக்குறைய அதேபோன்றதொரு விடயம் தான் இணையத்தில் வலைப்பதிவுகளாக உருவெடுத்திருக்கிறது. இந்திய அளவி...

உறவின் அழைப்பு!!!

Image
நாகேஸ்வர ராவ் பூங்கா, மயிலாப்பூர் ஊரல்ல, உறவாகவே கலந்துவிட்ட சென்னையின் இதயப் பகுதியில் வலைபதிவர் சந்திப்பு... மயிலையின் நாகேஸ்வர ராவ் பூங்காவில் மாலை 5.45 மணி முதலே உங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறோம்.. முன்னறிவிப்புகளும், வார இறுதி நாட்களிலும் வைத்திருக்கலாம் என்னும் நண்பர்களின் வருத்தங்கள் புரிந்தாலும், திடீரென ஏற்பாடாகி விட்டன எல்லாமும்... வழியும், பிற விவரமும் வேண்டுமெனின், நண்பர்களைத் தொடர்பு கொள்ளலாம் : பாலபாரதி - 99400 45507 குப்புசாமி - 98409 84328 போன அறிவிப்புப் பதிவில் நேர்ந்துவிட்ட தவறுகள் இந்த முறையும் நேராமல் இருக்க, அனானி பின்னூட்டங்கள் அறவே நிறுத்திவைக்கப் படுகின்றன. அனானி பின்னூட்டங்களினால் மனம் வருந்திய அன்பர்களுக்கும் எங்கள் மன்னிப்புகள்.