சென்னை சந்திப்பு - 22 ஏப்ரல் - 2

சென்னபட்டினம் குழுவின் மூலம் இதுவரை மூன்று வலைபதிவர் சந்திப்புகள் நிகழ்த்தியுள்ளோம். நாகேஸ்வர ராவ் பூங்காவில் ஆகஸ்ட் 2006 இல் முதல் சந்திப்பு நிகழ்ந்த போது, முத்து தமிழினி, முத்துகுமரன், பரஞ்சோதி, வரவனையான் உள்ளிட்ட வெளியூர்/வெளிநாடு வாழ் பதிவர்கள் கலந்து கொண்டார்கள். அனானி பின்னூட்டங்களால் உருவாகிக் கொண்டிருந்த பிரச்சனை பற்றிய விவாதங்களின் முடிவில் அனானி முன்னேற்றக் கழகம் உருவாக முதலடி இந்தச் சந்திப்பில் தான் எடுத்து வைக்கப்பட்டது.

நவம்பர் 2006இல் நிகழ்ந்த அடுத்த சந்திப்பு, தேனாம்பேட்டை பார்வதி ஹாலில் நிகழ்ந்தது. (வி)யெஸ்கே, அகிலன், நிலவன், தமிழ்நதி போன்ற வெளிநாடுவாழ் பதிவர்கள் தவிரவும் பல புதிய பதிவர்கள் கலந்து கொண்ட சந்திப்பு அது. தமிழ்வலைபதிவர் உதவிக் குழு இந்தச் சந்திப்பில் உருவம் பெற்றது. தற்போது புதிய பதிவர்களுக்கு உதவியாக செயல்பட்டு வரும் இந்தக் குழுவில் சென்னை பதிவர்கள் மட்டுமல்லாமல் உலகளாவிய பதிவர்கள் பலரும் இருந்து உதவி வருகின்றனர்.

டிசம்பர் 2006இல், நடேசன் பார்க்கில் திரு அவர்களின் சென்னை வருகையை ஒட்டி நடைபெற்றது அடுத்த சந்திப்பு. இந்தச் சந்திப்பில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றத்தால் ஈழத் தமிழர்களுக்காக திரு உருவாக்கி இருந்த இணைய முறையீட்டை இன்னும் அதிகம் பேருக்குக் கொண்டு சேர்க்க முடிந்தது. இந்த பெட்டிசன் தற்போது ஐநாவுக்கு அனுப்பப்பட்டும் விட்டது.

ஏப்ரல் 2007, 22ஆம் தேதி நடேசன் பார்க்கில் மற்றுமொரு சந்திப்பு நடத்த சென்னபட்டினம் குழு தயாராகிக் கொண்டிருக்கிறது. சிறில் அலெக்ஸ், பாஸ்டன் பாலா, தருமி, ஓசை செல்லா, உங்கள் நண்பன் சரவணன், செந்தழல் ரவி, மகேஸ், துபாய் ராஜா, லியோ சுரேஷ், நாமக்கல் சிபி என்று பல வெளியூர்/வெளிநாடு வாழ் பதிவர்கள் முதன்முறையாகக் கலந்து கொள்ளும் இந்தச் சந்திப்பில் உத்தேசித்திருக்கும் முக்கிய நிகழ்ச்சி நிரல்:

1. தேன்கூடு பெட்டகம் இயங்கும் விதம் பற்றி பகிர்ந்து கொள்கிறார் சிறில்.
2. மே மாதத்தில் யோசனையில் இருக்கும் ப்ளாக் கேம்ப் பற்றிய விவரங்களை ஓசை செல்லா சொல்வார்.
3. வலைபதிவர் உதவிக் குழு தொடங்கி கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் ஆன நிலையில், அந்தக் குழுவின் சாதனைகள் - செயல்பாடுகள் பற்றி விக்கி பேசுவார்
4. கூகிள் ரீடர், விக்சனரி, மாற்று போன்ற செயல்பாடுகள் பற்றி பொன்ஸ் பேசுவார்
5. வலைபதிவுகளில் கற்றுக் கொண்டவை - பேராசியர் தருமியின் சிற்றுரை.

இடம்: நடேசன் பார்க், தி.நகர்.
நேரம்: சரியாக மதியம் 3.30 முதல் மாலை: 7.30 வரை.
நாள்: ஏப்ரல்.22'2007, ஞாயிற்றுக்கிழமை.

மேல் விவரங்களுக்கு

Comments

நிகழ்ச்சி நிரல் பட்டியலை இங்கே பார்க்கிற வரைக்கும், சந்திப்புக்கு வரதாதான் இருந்தேன் :-):-):-)
Prakash,
We have some more topics, ungkalukkum oNNu anuppava? ;))))))
தாயே... என்னை உட்ருங்க :-) நமக்கு இந்த ஃபார்மல் மீட்டிங், அஜெண்டா, சிற்றுரை, பேருரை, நன்றி நவிலல், மாலை மரியாதை, சோடா எல்லாம் கொஞ்சம் அலர்ஜி.. புல்தரையிலே உக்கார்ந்து மக்கள்ஸோட 'மொக்கை' போடறதுக்கு அலௌ பண்ணுவீங்களான்னு மட்டும் சொல்லுங்க :-)
அதே புல்தரை மொக்கை போடுவதுதான் பிரகாஷ். இடையிடையே தொய்வு ஏற்படாமல் சில பொருள்களை வைத்துக் கொள்ளலாம் என்று இந்த ஏற்பாடு. யாரும் மைக் பிடித்து சோடா குடித்து அரை மணி நேரம் பேசப் போவதில்லை. அதே வட்டமாக உட்கார்ந்து பேசும் சூழல்தான்.

அன்புடன்,

மா சிவகுமார்

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

எழுத்தறிய நூலகங்கள்