இன்று சென்னையில் இருக்கும் மக்களில் பெரும்பான்மையோர், மற்ற ஊர்களில் இருந்து வந்து குடியேறியோர். அதனால், சென்னையின் ஏற்கனவே இருந்த(!) இயல்பான தமிழ்(!) வழக்கொழிந்து போய், எல்லாம் கலந்த சாக்கடை... ம்ஹூம்...பஞ்சாமிர்தமாகி விட்டது. ஆனாலும், வந்து குடியேறுவோரின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. 'மெட்ராஸ்' என்பது சென்னையின் பழைய பெயர். எப்போ அரசாங்கம் Madras-ஐ சென்னை-னு மாத்திடுச்சோ, அப்பவே நாமெல்லாம் அந்த பெயரை மறந்திட்டோம். அதான் நியாபகப்படுத்தவேண்டியுள்ளது. 'பாஷை' - சமஸ்கிருத பாஷையிலிருந்து...மன்னிக்க...சமஸ்கிருத மொழியிலிருந்து 'பாஷா' (பாட்ஷா அல்ல) என்ற வார்த்தையை ஸ்வீகரித்துக் கொண்டு, அது மருவி 'பாஷை' ஆனது. அன்று முதல் 'மெட்ராஸ் பாஷை' எங்களின் மொழியானது. 'மெட்ராஸ் பாஷை' - ஒரு வரலாற்று பார்வை மெட்ராஸ் பாஷையின் இலக்கணத்தில் முக்கிய பங்காற்றுவது, ஆங்கிலம் என்னும் மொழி. இந்த ஆங்கில மொழியானது இன்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மொழி. எம்.ஆர்.ராதா முதல் 'சின்ன(புத்தி) கலைவானர்' விவேக் வரை...
Comments
- சுட்டியில் போய் பாருங்கள். அலுவலகக் கணிணியாக இருந்தால்.. யூடியூப் பார்க்கும் வசதி தடை பட்டிருக்கலாம்.
:(
எங்கயோ போயிட்டீங்க(டோம்).
ஆமா, கவிஞர் பாலபாரதின்னு போட்டாங்களே? கவிஞரா நீங்க மெய்யாலுமே? லிங்க் குடுங்களேன் உங்க கவுஜய படிக்கறேன். நன்றி.
தூயா, இது உண்மைதானே.. அந்த மொட்டைத் தலையில் நீங்க உங்களைப் பார்த்தால், குட் லுக்காக பளிச்சென்று தெரியும்.. ;)
மக்கள் தொலைக்காட்சியின் ரிப்போர்ட்டரிடம் கவிஞர் போட சொன்னது நான் தான்.
குயில் தோப்பு வெளியிட்டிருக்கும் அவரின் கவிதைத் தொகுப்புகளை காசு கொடுத்து வாங்கிப் படிக்கவும். ஓசியில் கும்மி அடிக்க நினைக்க வேண்டாம்.
தூயா, இது உண்மைதானே.. அந்த மொட்டைத் தலையில் நீங்க உங்களைப் பார்த்தால், குட் லுக்காக பளிச்சென்று தெரியும்.. ;)//
நீங்கள் அனுபவப்பட்டிருப்பிங்க..கேட்டு தானே ஆகணும் பொன்ஸ்..(அதிகம் எழுதினால் பாலாண்ணா திட்டுவார்..அப்புறமா ரகசியமா பேசலாம் பொன்ஸ்)
ஆபிஸ்ல யூடியுப் கட்டூ :((((((
சென்ஷி
ஒரே பொறாமையா இருக்கு :)))))
வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் - மக்கள் தொலைக்காட்சி குழுமத்தினருக்கு
;)
ஆமா, எல்லோரும் வட்டமா இருக்கறப்ப ஒருத்தர் ( சிகப்புச்சட்டைக்காரர்)
சுத்தி சுத்தி வராறே..'குலகுலயா( கொலை கொலையா) முந்திரிக்கா' விளையாட்டா? :-)))))