மைலாப்பூர் திருவிழா சில காட்சிகள்

சென்னை மைலாப்பூர் பகுதியில் இயங்கி வரும் மைலாப்பூர் டைம்ஸ் பத்திரிக்கையும், சுந்தரம் பைனான்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய மைலாப்பூர் திருவிழா ஜனவரி 4 முதல் 7ம் தேதி வரை சிறப்பாக நடந்து முடிந்தது.

கரகாட்டம், பொய்க்கால் ஆட்டம், நாடகம், இசை விழா, குழந்தைகளுக்கான போட்டி மட்டுமன்றி, இல்லாத்தரசிகளுக்கான போட்டிகள், கோலப்போட்டி, சமையல் போட்டி என நான்கு நாட்கள் ஒரே ஜமாய் தான்.

தினமும் அத்திருவிழாவினை கவர் செய்து செய்திகள் தர திட்டமிட்டிருந்தோம். ஆனால் அது நிறைவேறாமல் போனது. தனிப்பட்ட பணிகளினால் குழு உறுப்பினர்கள் அனைவருமே சிக்குண்டு போனோம்.

அதனால் முழுவிழாவினையும் கவர் செய்ய முடிய வில்லை. அவ்வப்போது எட்டிப்பார்த்து எடுத்த படங்களுடன் இந்த பதிவு.




மைலாப்பூர் நினைவு படுத்தும் புகைப்பட கண்காட்சி நடந்தது. கடந்த வருட புகைப்படத்தில் ஆர்வத்துடன் தன்னைத் தேடும் தேடும் ஒருவர்.




புகைப்படங்களை பார்வையிடும் மக்கள்.




அதே மக்கள் தான் வேறு நிமிடங்களில்.. :)




கட்டைகால் நடனம். படம் உதவி தினமலர்.





கோலம் போடும் வெளிநாட்டுப் பெண்மணி. படம் உதவி: தினமலர்




கோலமிடும் அழகு. லாங்க் ஷாட்!




சின்னசிறு கைவினைப் பொருட்களுக்காக கடைதிறந்திருந்த ஸ்டெல்லமேரிஸ் மாணவிகள்.



மருதாணியில் (கைகளில்) கோலம் போட்டு விழாவினை சிறப்பித்த ஸ்டெல்லாமேரிஸ் மாணவிகள். படம் உதவி: தினமலர்.

Comments

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

எழுத்தறிய நூலகங்கள்