சென்னை படம் காட்டறாங்க...

சென்னை பல விசயங்களுக்கு நல்லதா பட்டாலும், பெரும்பாலும் வெளியே எங்கயாவது போகனும் என்றால் டிராபிக் என்ற கொடுமையை சந்திக்க வேண்டியுள்ளது!!! முக்கியமா கத்திப்பாரா ஜங்ஷன், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அடையாறு & திருவான்மியூர் ஏரியா பக்க போனும் என்றாலே ஒரு அலர்ஜி போல ஆயிடுச்சு!!!

நான் பெரும்பாலும் Peak hoursல் வெளியே செல்வதை தவிர்த்துவிடுவேன், வேற வழியே இல்லை என்றால் குறுக்குவழி, ஒண்டிச்சந்து என பல தேடி சேரவேண்டிய இடத்தை அடைவது வழக்கம்.


சிஃபி.காம் ஒரு சிறப்பு இணைய தளம் அமைத்திருக்காங்க, இது போன்ற ட்ராபிக் பிரச்சனையை அவாய்டு செய்து செல்ல... இப்பொழுது சென்னையின் மூன்று இடங்களில் லைவ் வீடியோ இணைய தளம் மூலம் காண்பிக்கப்படுது! (Traffic Live video feed- Kathipara, Kilpauk, Thiruvanmiyur), இனி மேலும் பல இடங்கள் இதில் சேரலாம் என்று நினைக்கிறேன்! இந்த இணையத்தை பயன்படுத்தி எங்க ட்ராபிக் இருக்கு, எங்க இல்லை என்பதை அறிந்து அதற்கேற்றார் போல உங்கள் பயனத்தை திட்டமிட உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

லைவ் கேமேரா Feeds பார்க்க இங்கே சொடுக்கவும். முதலில் படங்கள் வர கொஞ்சம் தாமதமாகும் அட்ஜஸ்ட் பண்ணிக்க்கோங்க :)

பி.கு:
இந்த இணைய தளத்தில் சென்னையை சுற்றியுள்ள உணவு விடுதிகள், சுற்றுலா தளங்கள், சென்னை நிகழ்வுகள் என பல விசயங்கள் இருக்கு! என்ஜாய்!!!

Comments

Anonymous said…
Useful info
thanks
Anonymous said…
thanks for the info...
Anonymous said…
சிபி இணையதள லைவ் செய்தி குறித்து பதிவில் அறிவித்தற்கு மிக்க நன்றி. அதே போல், ரேடியோ மிர்சியிலும் காலை மற்றும் மாலை, போக்குவரத்து நெரிசல் நகரை எங்கு ஸ்தம்பிக்க வைக்கிறது என்று அறிவிப்பார்கள். நீங்களும் கேட்டிருப்பீர்கள் அல்லவா?

தீபக் வாசுதேவன்
ஆதவன் said…
Hi please visit our website for thamizh short film and give your feedback... if possible please give a link in your block for us..

like that..
tamil short film website:
www.thamizhstudio.com

thanks,
thamizhstudio.com

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

27D