Thursday, August 09, 2007

பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு!

சென்னையின் முக்கியமான ஷாப்பிங் ஏரியா என்று சொல்ல வேண்டுமானால் அது டி.நகர் என்று தான் சொல்வோம், ஆனால் அங்க போனால் நம்மை வரவேற்கும் முக்கிய பிரச்சனை டிராபிக் அடுத்த விசயம் பார்க்கிங். இந்த பார்க்கிங் பிரச்சனைக்கு ஒரு தீர்வை நம்ம சென்னையை சேர்ந்த பொறியாளர் கண்பிடித்துவிட்டார் என்றே சொல்லலாம்! இன்று அதன் செலவு அதிகமாக இருக்கலாம் கொஞ்சம் காலத்தில் டெக்னாலஜி வளர்ச்சியால் மேலும் குறைந்த விலைக்கு அது வரக்கூடும். கீழே உள்ள வீடியோவை பாருங்க மேட்டர் புரியும்!3 comments:

மணியன் said...

இதுபோன்ற கார் நிறுத்தும் வசதி மும்பை பாந்த்ரா ஷாப்பர்ஸ் ஸ்டாப் வணிகவளாகத்தில் இயங்கி வருகிறது.

K.R.Athiyaman ;13230870032840655763 said...

போக்குவரத்து நெரிசலும், சோசியலிசமும்

பேருந்து வசதி போதுமானதாக இல்லாததால் தனியார் வண்டிகள் பெருகி நெரிசல் மிகுந்துள்ளது. Peak Hourல் எந்த வழித்தடத்திலும் பேருந்துக்குள் ஏற முடிவதில்லை. போதிய எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க அரசாங்கத்தால் இயலவில்லை. காரணம் நஷ்டம் மற்றும் ஊழல். 70களில் தேசிய மயமாக்கப்படுவதற்கு முன் TVSம், LGBயும் அருமையான சேவையினை செய்தன. சோசியலிசம் என்ற பெயரால் இன்று கடுமையான பற்றாக் குறை, ஊழல் மற்றும் நெரிசல். பேருந்தில் ஏற முடியாதவர்கள் இரு சக்கர வாகனங்களை வாங்க முயல்கின்றனர். அவை மலிந்து விட்டன.சென்னையில் ஒரு 700 மினி பஸ்களுக்கு permit வழங்கப்பட்டால் (ஏல முறையில்) பிரச்சனையைக் குறைக்கலாம். தனியார் பேருந்து மற்றும் parking மற்றும் bus stops அனுமதிக்கப்பட்டு, மினி வேன், ஷேர் ஆட்டோ, இரண்டு சக்கர டாக்ஸிகளும் அனுமதிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு மிகப் பயன்படும். நெரிசல் குறையும்.

இடது சாரிகளும், ஆட்டோ யூனியன்களும், எம் டி சி பஸ் யூனியன்களும் ஊழல் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். முதலாளி வளர்ந்து விடுவானாம். மோனோபோலி வந்து விடுமாம். டெலிகாம்மில் நடந்துள்ள புரட்சி இந்த வாதங்களைத் தகர்க்கிறது. BSNLன் மோனோபோலி உடைந்தவுடன் சேவை மலிவாகவும், சிறப்பாகவும் ஆனது. அனைத்துத் துறைகளிலும் இதே கதைதான்.

ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது? எங்கள் ஊரான கரூரில் பஸ் கட்டுமான தொழில் பெருகியுள்ளது. பல முக்கிய தடங்கள் (உம்; சேலம் - ஈரோடு) பல கோடி ரூபாயில் கைமாறுகின்றன. (பெர்மிட்டின் விலை, கருப்பு பணத்தில்). மேலும் புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப் படவேயில்லை. கேரளாவில் புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதற்கு விடிவு காலம் என்றோ? அதுவரை மக்கள் மிருகங்களை விடக் கேவலமான முறையில் பஸ்களில் திணிக்கப்பட்டு தொங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும்..

http://nellikkani.blogspot.com/

வவ்வால் said...

இது போன்ற பார்க்கிங் வசதி சென்னையிலும் உள்ளது தனிப்பட்ட ஒரு சில கடைகளில் அமைத்துள்ளார்கள், வாலெட் பார்க்கிங் என்று பெயர்.தி.நகர் நாதெல்லா நகை கடை, கோடம்பாக்கதில் ஒரு நகை கடை இது போன்று வசதி செய்துள்ளார்கள்.