முழு சென்னைவாசியாக 50 டிப்ஸ்

இன்னா நைனா? ஊருக்கு புச்சா? மொதல்ல இத படிச்சு கரீக்டா ஃபாலோ பன்னேன்னு வெச்சுக்க, நீ மெய்யாலுமே 100 பர்சன்ட் சென்னைவாசி ஆயிடலாம்...



1. சினிமா சூட்டிங்னு நின்னு வேடிக்கை பார்த்து தொலையாதீங்க. அது நிஜ என்கவுன்ட்டரா இருக்க போகுது.


2. "சென்னைக்கு வந்துட்டோம்டா" அப்படீன்னு ஒரு பெருமிதம் உங்களோட வந்து ஒட்டிக்கும் (ஹி..ஹி..எனக்கு ஒட்டிகிச்சு இல்ல), அந்த பெருமிதத்தோட சென்னைல கால் வைக்கவும். முடிஞ்சா வலது கால வைக்கவும் (BTW, இப்படி யோசிக்கிற நேரத்துல ஏதாவது ஒரு பிக்பாக்கெட் உங்ககிட்ட வேலையை காட்டிடலாம், உசார் மாமே).


3. ஊருக்கு வந்து இறங்கி சென்ட்ரலோ அல்லது கோயம்பேடிலோ வெளியே வந்ததும், மேலே ஏதாவது ஏரோப்ளேன் சத்தம் கேட்டா அங்கேயே நின்னு வானத்தையே அன்னாந்து பார்க்கனும். (எப்படி அவ்ளோ பெரிய ஏரோப்ளேனுக்கு பெயின்ட் அடிப்பாங்கன்னு கேக்கக்கூடாது).


4. "மெட்ராஸ்லல்லாம் ஆட்டோகாரங்க நல்லா ஏமாத்திடுவாய்ங்கடா"-ன்னு எவனாச்சு ஒரு ஃபிரென்டு கண்டிப்பா உங்ககிட்ட சொல்லியிருப்பான். அதனால் கோயம்பேடிலோ, சென்ட்ரலிலோ இறங்கியதும், ஆட்டோ பிடிக்கிறத நிப்பாட்டனும். எவ்ளோ தூரமானாலும் நடராஜா சர்வீஸ், இல்ல அடிச்சு புடிச்சு மூட்டை முடிச்சோட பஸ் தான்.


5. இல்ல, உங்கள வரவேற்கரத்துக்குன்னே ஒரு இளிச்சவாயன் வந்து காத்திட்டிருப்பான். அவன பஸ்/இரயில் டிக்கெட் எடுக்க விட்டுடனும், ஏன்னா, அடுத்த நாள்ளேருந்து நீங்க தானே அவனுக்கும் சேர்த்து செலவு செய்யப் போறீங்க...("ப்ச், இரு மாப்ளே. நான் கொடுத்திருப்பேன் இல்ல").


6. வந்த மொத நாள் கண்டிப்பா பீச்சுக்கு போயிடனும், ஆமாம். உங்க பிரண்டோட போனீங்கன்னா அங்க 'எப்போ எப்போ என்னென்ன எங்கெங்கே' நடக்கும்ன்னு டூரிஸ்ட் கைடாட்டம் எக்ஸ்பிளெய்ன் பன்னுவார்.


7. கூட வந்தவன் இந்த ஊருல எப்படியெல்லாம் நடந்துக்கனும்னு கிளாஸ் வேற எடுப்பான். கவனமா கேட்டுக்கோங்க.


8. ஊருல பாக்க முடியாத 'படங்கள்' எல்லாத்தையும், இங்கன ஃப்ரீயா (டிக்கெட்டோடத்தான்) பாத்துடலாம்.


9. உச்சா போக இடமெல்லாம் தேடிக்கொண்டிருக்க அவசியமில்லை, இந்த சிங்கார சென்னையில். யாதும் டாய்லட்டே. ஜஸ்ட் ஜமாய்.


10. ரோட்டுல இருக்கிற சிக்னல் எல்லாம் வண்டியில போறவங்களுக்குத் தான். அதனால எப்போ வேணும்னாலும் ரோட்ட க்ராஸ் பன்னலாம். வண்டிகளும் க்ராஸ் பன்னும், உங்க மேல. (அதுகென்ன, ஒரு இன்சூரன்ஸ் எடுத்திட்டாப் போச்சு).


11. இங்க சிக்னல்ல தனக்கு பச்சை விழுந்ததும் நகர ஆரம்பிக்கறத விட, அடுத்தவனுக்கு மஞ்சள் விழ ஆரம்பித்ததும் பாதி ரோட்டுக்கு வந்துடுறவங்கதான் ஜாஸ்தி.


12. அட! இவங்களாவது பரவாயில்ல, மஞ்சள் விழுந்ததும் ஸ்லோ ஆகிடனும்ங்கிற தப்பான ரூல ஒடைக்க, சிகப்பு விழுந்த பிறகும் ரோட்ட க்ராஸ் பன்னுறவங்க தான் அதிகம். இதுக்கு எங்க ஊருல சொல்லுற டெக்னிகல் வேர்டு 'சிக்னல் ஜம்ப்'. (ஒருவேளை, ரெட்டுக்கு மேல நாலாவதா ஒரு கலர எதிர்பாக்குறாங்களோ?).


13. க்ரீன் விழுந்ததும், பத்து வண்டிக்கு பின்னால இருக்கிறவனும் ஹாரன் அடிச்சுட்டே இருப்பான், என்னவோ அவனுக்கு முன்னால நிக்கிறவனெல்லாம் வேண்டுதலுக்காக நிக்கிறவன் மாதிரி. கண்டுக்காத.


14. டிராஃபிக் போலீஸ்காரங்க வண்டிய நிப்பாட்டுனா, 'லொள்ளு சபா' மனோகர் ஸ்டைல்ல 'நாங்கல்லாம் ஐ.ஜி.யோட ஒன்னுவிட்ட சித்தப்பாக்கு ரெண்டாவது சம்பந்திக்கு வேண்ண்ண்ண்ண்டியவங்க'-ன்னு கையை ஆட்டிட்டே சொல்லிப்பாருங்க. 10/- ரூ வரை ரிடக்க்ஷன் கிடைக்கும்.


15. தலைகவசம் உயிர்கவசம்னு என்னதான் கவர்மென்ட் கத்தினாலும், இரண்டு கவசமும் போடாம போறது தான் எங்க ஸ்டைலு. இத கரெக்டா ஃபாலோ பன்னிட்டீங்கன்னா 'அந்த நாள் மட்டும் தான் உனக்கு கடைசி நாள்'.


16. எங்க எங்க ட்ராபிக் ஜாஸ்தியா இருக்குன்னு ரேடியோ மிர்ச்சி சுசித்ரா கரெக்டா சொல்லுவாங்க. ஏன்னா, ஜாம் பன்னினவனும் ரேடியோ மிர்ச்சி கேட்டுட்டு தான் ஜாம் பன்னியிருப்பான்.


17. படம் பாக்க தியேட்டர் போறீங்கன்னு வெச்சிக்கங்க, டிக்கெட் 40 ரூபான்னா கையில 80 ரூபாவாவது இருக்கனும். ஏன்னா, color படம்னாலும், டிக்கெட் Black தானே.


18. என்னதான் லைன்ல நின்னு டிக்கெட் வாங்கினா சீக்கிரம் வாங்கிடலாம்னாலும், முண்டி அடித்து வாங்குதல் சென்னைவாசிக்கு அழகு.


19. 'எச்சில் துப்பும் பழக்கம் உள்ளவர்கள், தியேட்டரின் இரு பக்கமும் இருக்கும் கடைசி இருக்கைக்கு போகவும்'-ன்னு போர்டெல்லாம் எதிர்பார்க்க கூடாது. நாமளே புரிஞ்சிக்கனும்.


20. சென்னைல பான்பராக்கெல்லாம் தடை செய்யப்பட்டது. அதனால ஹான்ஸ் மட்டுமே யூஸ் பன்னுங்க. ஆங்காங்கே பெயின்ட் பன்னுங்க.


21. முக்கியமா நம்ம சீட்டுல கரெக்டா உக்காரக்கூடாது. அடுத்தவன் வந்து உங்களுக்கு உங்க சீட்டை கரெக்டா காட்டுவான்.


22. 'முன் சீட்டில் காலை வைக்காதே' அப்படீன்னு கரெக்டா தியேட்டர் நிர்வாகம் 'நியாபகப்படுத்திடும்'. கவலயேபடாதீங்க.


23. நாளைக்கு என்னென்ன படம் ரிலீஸ் ஆகுதுன்னு தெரிஞ்சுக்கனும்னா இன்னைக்கு ரிட்சி ஸ்ட்ரீட் போனீங்கன்னா தெரிஞ்சுக்கலாம். அங்கே தான் ரிலீஸ் ஆகப் போற படத்தோட ஒரிஜினல் டி.வி.டி கிடைக்கும்.


24. கடைசி ரெண்டு நாள் மட்டும் ஈ.பி. பில், டெலிஃபோன் பில் போன்ற இத்யாதிகளை கட்டவும். ஏன்னா, மத்த சொச்ச நாளுக்கு அங்க இருக்கிறவங்களுக்கு ரெஸ்ட் கொடுக்கலாம் இல்ல.


25. பாரதியார், காமராசர் வீடு எங்க இருக்குன்னு தெரிஞ்சுக்கிறத விட, பரங்கிமலை ஜோதி எங்க இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு உங்க ஜெனரல் நாலட்ஜ இம்புரூவ் பன்னிக்கோங்க. (என்னது? பாரதியார், காமராசர்லாம் யாரா?)


26. கையில ஒரு மார்க்கர் இருந்தா போதும், யாருமில்லாத நேரத்துல இரயில் பூரா உங்க so called கவிதய செதுக்கலாம்.


27. கூடவே ஒரு ப்ளேடு இருந்தா போதும், தையல் போடுறவங்களுக்கு வேலை போட்டு கொடுக்கலாம், இரயில் சீட்டை கிழித்து. ('என்னது? கட்டை சேர் போட்டிருந்தாவா? ஒரு சுத்தியல் எடுத்திட்டு போங்க...')


28. 'வழியில் சுமைகளை வைக்காதீர்கள்' அப்படீன்னு இருக்கிறதை மறைத்து அவனையே சுமையாக்கி இருப்பான். கண்டுக்காதீங்க. அவன் இறங்கியதும் அந்த இடம் உங்களுக்கு தான்.


29. டி.டி.ஈ டிக்கெட் கேட்கும் போது தான் உங்க பாக்கெட்டையே சுத்தம் பன்னனும். உங்க பாக்கெட் உள்ளார இருக்கிற எல்லா பழைய டிக்கெட்டையும் அவர்கிட்ட கொடுத்து சரியானதை தேர்வு செய்ய சொல்லுங்க. (இந்த விஷயத்துல பொன்னுங்க தான் ஹான்ட் பேக் எக்ஸ்பர்ட்ஸ்)


30. பஸ்ஸிலோ/டிரெனிலோ கடைசி நிறுத்தத்துல இறங்கிறதா இருந்தாலும், உள்ளார நெரிய்ய எடம் விட்டுட்டு, புட்ஃபோர்டு பக்கத்துல தான் முண்டியடுச்சு நிக்கனும் (கேட்டா, காத்து வாங்கன்னு சொல்லிறலாம்).


31. மழ காலத்துல சப்-வே எல்லாம் வாட்டர் டாங்கா மாறிடும். வெயில் காலத்துல உள்ளார ரொம்ப புழுக்கமா இருக்கும். 6 மணிக்கு மேல பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்ல. அதனால, லெவெல் கிராசிங்க குணிஞ்சு தான் க்ராஸ் பன்னனும்.


32. குளிக்கனும்னு ஆசை இருந்தா, ஒரு தண்ணி வண்டி பக்கத்துலேயே போங்க. அஞ்சு நிமிசம் போனாலும் அதுல இருந்து சிந்துற தண்ணீலயே குளிச்சுடலாம் (பாத்துப்பா, அது கழிவுநீர் வண்டியா இருந்து தொலச்சிட போகுது).


33. எதுக்கும் பஸ் ஸ்டாஃபுக்கு 50 அடி தள்ளியே நில்லுங்க. எல்லா பஸ்ஸும் அங்க தான் நிக்கும் (அண்ணன் விவேக்கை கேளு, சொல்வார்).


34. 13Bக்கு வெயிட் பன்னுரீங்கன்னா, மொத பஸ்ஸ மிஸ் பன்னவும். ஏன்னா பின்னாடியே காலியா இன்னொரு 13B வரும்.


35. 2 ரூ டிக்கெட்டுக்கு 100 ரூ கொடுங்க. அப்போ தான் கண்டக்டருக்கும் கொஞ்சம் போல வேல கொடுத்தா மாதிரி இருக்கும்.


36. புட்போர்டு அடிக்கிறதுக்கு ஸ்பெஷல் ட்ரெய்னிங் வேணும் இல்லியா? அப்படியே பஸ்ஸ தள்ளுறதுக்கும் கொஞ்சம் ட்ரெய்னிங் எடுத்துக்கோங்க. ஏன்னா, எங்க ஊரு பஸ்ஸு அப்போ அப்போ மக்கர் பண்ணும்.


37. புட்போர்டு அடிக்கரீங்கன்னா நீல நிற / கருப்பு நிற சட்டை அனியவும். போலீஸ்காரங்ககிட்ட அந்த ரெண்டு கலர்ல தான் இங்க் இருக்கு.


38. எடம் புடிக்க எதை வேணும்னாலும் யூஸ் பன்னலாம். கர்ச்சீப், செருப்பு, ஃபைல் இப்படி. எக்ஸ்ட்ராவா ஒரு இடம் போட்டு, உங்க பக்கத்துல டீஸன்டானவருக்கு மட்டும் உட்கார இடம் கொடுக்கலாம். (அவர் பிக்பாக்கட்டா கூட இருக்கலாம், யாருக்கு தெரியும்)


39. வீட்டுல போர் அடிக்குதுன்னு வாக்கிங் எல்லாம் கிளம்பிடாதீங்க. வரும் போது 'புழுதி தான் நம்ம சட்டை'-ன்னு பாடிகிட்டே வரவேண்டியிருக்கும்.


40. ஓட்டல்ல சாப்பிடரீங்கன்னா அந்த ஓட்டல் தண்ணீரையே குடிக்கவும் பயன்படுத்தவும். வாட்டர் பாக்கெட்டை விட அது தான் உங்களுக்கு ஸேப்.


41. ஓட்டல்ல பில் கட்ட பணம் இல்லைன்னா 'கிரண்டர் ஸ்விட்ச் எங்கே?'-ன்னு அப்பிரானியா கேக்காதீங்க. அப்புறம் அதுக்கும் சேத்து(?) உங்கள மாவா ஆட்டிடுவாங்க.


42. உங்ககிட்ட யாராச்சும் வழி கேட்டாங்கன்னா தெரியலைன்னு மட்டும் சொல்லாதீங்க. சென்னை மக்கள பத்தி தப்பா இல்ல நெனப்பாங்க. அதனால ஏதாவது ஒரு வழி சொல்லி அனுப்புங்க. மறுபடியும் வழி கேட்டவர பாக்கவா போரீங்க?


43. திடீர்னு ட்ராஃபிக் ஜாம் ஆகிடுச்சுன்னு வெச்சுக்கங்க, உடனே உங்க வண்டிய ஒன்வேயில ஓட்டிட்டு போனீன்னா, ஜாமுக்கு கூட எக்ஸ்டிராவா டொமேட்டோ சாஸ் சேர்த்த மாதிரி இருக்கும்.


44. உங்க பக்கத்துல போற ஆட்டோ திடீர்ன்னு ஒரு 'S' அடிப்பான். அவன் ஸேப்பு. பயத்துல நீங்க தான் உங்க வண்டிய விட்டுடுவீங்க. அதனால, வண்டு ஓட்டுறதுன்னா கண்ண மூடிகிட்டு ஓட்டினாதான் பொழைக்க முடியும்.


45. என்னதான் டாக்குமென்ட்ஸை பக்காவா வெச்சிருந்தாலும் எப்படியும் போலீஸுக்கு பணம் கட்டித்தான் ஆகனும். ஸோ, எதுக்கு டாக்குமென்ட்ஸை பத்தி கவலைப்படுறீங்க?


46. நம்ம வீட்ட நாம தான் சுத்தமா வெச்சுக்கனும். அதனால குப்பையெல்லாம் தெருவில கொட்டிடுங்க.


47. உங்க வீட்டுக்கு பக்கத்து வீடு காலியா இருந்துச்சுன்னா, யூ ஆர் லக்கி. உங்களுக்கு பெரிய குப்பைதொட்டி கிடைச்சுதுன்னு அர்த்தம். ஜமாய்.


48. ஒரு எடத்துல மட்டும் நிறைய வண்டிங்க + மக்கள் கூடியிருந்தாங்கன்னா, அது நிச்சயம் கல்யாண மண்டபம் அல்லது டாஸ்மாக். இந்த ரெண்டுல ஒன்னு தான் இருக்க முடியும்கிறது நீயூட்டனின் நான்காவது விதி.


49. புதுசா சிமென்ட் ரோடு போடுறாங்கன்னு வெச்சுக்கங்க, அது காயுரதுக்கு முன்ன மொத வேலையா, உங்க அழகான கால் தடத்தை பதிஞ்சு அமிர்தலிங்கம்...ஐ ஆம் ஸாரி ஆர்ம்ஸ்ட்ராங் ரேஞ்சுக்கு ஒரு கலக்கு கலக்குங்க.


50. இதையெல்லாம் விட முக்கியமானது, மெட்ராஸ் எல்லை வரைக்கும் இப்படி நான் மேலே சொன்ன மாதிரி தான் டமில் பேசனும். எழுதும் போது, ஸ்பெல்லிங் மிஸ்டீக் இருந்தாலும் கண்டுக்கப்படாது. ஓ.கே?



இந்த அனைத்து டிப்ஸ்களையும் கரீக்டா ஃபாலோ பன்னினா, இந்த நாள் மட்டும் அல்ல, வருடத்தின் எல்லா நாட்களும் உங்களுக்கு இனிய நாளாகவும், சென்னைக்கு கேடுகாலமாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. இன்னா நாஞ்சொல்றது?

Comments

SP.VR. SUBBIAH said…
//48. ஒரு எடத்துல மட்டும் நிறைய வண்டிங்க + மக்கள் கூடியிருந்தாங்கன்னா, அது நிச்சயம் கல்யாண மண்டபம் அல்லது டாஸ்மாக். இந்த ரெண்டுல ஒன்னு தான் இருக்க முடியும்கிறது நீயூட்டனின் நான்காவது விதி.//

அதே போல் காலையில் குளித்து முடி்த்தவுடன் (அதுவும் கோவை, ஊட்டி போன்ற இட்ங்களில் இருந்து வருபவர்களுக்கு) பயங்கரமாக
வியர்த்துக் கொட்டும்.
அது என்ன விதி என்று கேட்காதீர்கள்
அது சென்னையின் தலைவிதி!
G.Ragavan said…
மொத்தத்துல யாதும் டாய்லெட் யாவரும் போவீர்-னு சொல்றீங்க. ஹம்ம்ம்..

இன்னொன்னையும் சேத்துக்கோங்க. சரவணபவன், முருகன் இட்லிக்கடை, சங்கீதா மாதிரி ஓட்டல்களுக்குப் போனீங்கன்னா.....ஒடனே உக்கார எடம் கெடைக்கனும்னு ஆசைப்படக் கூடாது.

பழைய மகாபலிபுரம் ரோடு இன்னமும் பழைய ரோடாவே இருக்குன்னும் கேக்கக் கூடாது.

பஸ்சுல கடைசி சீட்டு பொம்பளைங்க சீட்டு. நீங்க உக்காந்து யாரும் எழுப்புனா "நாங்களும் அவங்கதான்"னு சொல்லுங்க.
சீனு said…
சுப்பையா சார்,

//அதே போல் காலையில் குளித்து முடி்த்தவுடன் (அதுவும் கோவை, ஊட்டி போன்ற இட்ங்களில் இருந்து வருபவர்களுக்கு) பயங்கரமாக வியர்த்துக் கொட்டும்.//

இதுக்கும் இரு வழி இருக்கு. ஹி...ஹி...குளிக்காம இருக்கிறது தான். வேற வழி.

Jokes apart. கோவை, ஊட்டி மட்டும் இல்லை சார். என் ஊர் வேலூர் மாவட்டத்தில் உள்ளது. சென்னையை விட அங்கு வெயில் பயங்கரமாக இருக்கும். ஆனால், அதன் கொடுமை தெரியாது. காரணம், மற்ற நகரங்களைப் போல இல்லாமல் சென்னையில் வெயில் என்பதை விட, வெக்கை தான் என்பேன். அருகில் கடல் இருப்பதும் ஒரு காரணம். அதனால், காற்றில் ஈரப்பதம் அதிகமாகும். வெக்கை தானாக அதிகமாகும். குளியல் அறையில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுதே வியர்த்துக் கொட்டும்.

ராகவன்,

//பஸ்சுல கடைசி சீட்டு பொம்பளைங்க சீட்டு. நீங்க உக்காந்து யாரும் எழுப்புனா "நாங்களும் அவங்கதான்"னு சொல்லுங்க.//

ம்ம்...என் நண்பனோட தம்பி ஒரு முறை (சிறிய வயதில்) வந்திருந்தான். பேருந்தில் கடைசி சீட்டில் உட்கார்ந்து இருந்தான். அப்பொழுது ஒரு பெண்மனி வந்தி எழுந்திருக்குமாறு சொல்ல அவன் ரூல்ஸ் பேச ஆரம்பித்துவிட்டான். காரணம், அந்த பெண்கள் கேட்ட தோரணை (மெட்ராஸ் பாஷையில்), அவனுக்கு கோபம் வந்துவிட்டது. கடைசி வரை விடவேயில்லையே.
சொல்லாமல் விட்ட சில முழு சென்னைவாசிகள் டிப்ஸ்: -

51. உங்கள் மேல் தவறு இருந்தாலும் கூட்டம் எதிராளிக்கு சாதகமாய் பேசும் வரை தாராளமாய் குற்றம் சாட்டுங்கள். (எதிர் ஆளு பவர் பார்ட்டின்னா கூட்டம் சேர்ற வரைக்கும் எதுக்கு நிக்கணும்.!)

52. உங்களை போல வரும் நண்பரிடம் மேலே கண்ட 51 விஷயங்களையும் மறவாமல் சொல்லவும்.

சென்ஷி
சீனு said…
//52. உங்களை போல வரும் நண்பரிடம் மேலே கண்ட 51 விஷயங்களையும் மறவாமல் சொல்லவும்.//

அடடா! infinite loop-ஆ இல்ல போயிடும்...
PRINCENRSAMA said…
//டி.டி.ஈ டிக்கெட் கேட்கும் போது தான் உங்க பாக்கெட்டையே சுத்தம் பன்னனும். உங்க பாக்கெட் உள்ளார இருக்கிற எல்லா பழைய டிக்கெட்டையும் அவர்கிட்ட கொடுத்து சரியானதை தேர்வு செய்ய சொல்லுங்க. (இந்த விஷயத்துல பொன்னுங்க தான் ஹான்ட் பேக் எக்ஸ்பர்ட்ஸ்) //

ரசிச்சனுப்பு...
53. Neengale innouru vandi mela modhina kooda avanathan thittanum. u should never allow him to start talking.
யப்பாடி, தல சுத்துதுங்கோவ் :-))))

<<>>

இதெயெல்லாம் தொகுத்து எழுதினதுக்கு ஒரு சபாஷ்ஷ்ஷ்ஷ்ஷ்!!!!
Anonymous said…
Eat at "Kaiyenthi Phavan" The very tasty place in madras.

At night time they sell "Biriyani" also. very tasty.
But I ate only chicken. ( No worry it was really a chicken ).
சீனு said…
இந்த பதிவு இந்த வார விகடன் -ல் (செப். 03 - 2008) வந்துள்ளது.

http://www.vikatan.com/av/2008/sep/03092008/av0220.asp
சீனு said…
இந்த பதிவு இந்த வார விகடன் -ல் (செப். 03 - 2008) வந்துள்ளது.

http://www.vikatan.com/contest/b4av030908.asp
Anonymous said…
Well said.
coolzkarthi said…
கலக்கிட்டிங்க சகா.....

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

வாராரு ஆட்டோகாரரு....

27D