இன்று சென்னையில் இருக்கும் மக்களில் பெரும்பான்மையோர், மற்ற ஊர்களில் இருந்து வந்து குடியேறியோர். அதனால், சென்னையின் ஏற்கனவே இருந்த(!) இயல்பான தமிழ்(!) வழக்கொழிந்து போய், எல்லாம் கலந்த சாக்கடை... ம்ஹூம்...பஞ்சாமிர்தமாகி விட்டது. ஆனாலும், வந்து குடியேறுவோரின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. 'மெட்ராஸ்' என்பது சென்னையின் பழைய பெயர். எப்போ அரசாங்கம் Madras-ஐ சென்னை-னு மாத்திடுச்சோ, அப்பவே நாமெல்லாம் அந்த பெயரை மறந்திட்டோம். அதான் நியாபகப்படுத்தவேண்டியுள்ளது. 'பாஷை' - சமஸ்கிருத பாஷையிலிருந்து...மன்னிக்க...சமஸ்கிருத மொழியிலிருந்து 'பாஷா' (பாட்ஷா அல்ல) என்ற வார்த்தையை ஸ்வீகரித்துக் கொண்டு, அது மருவி 'பாஷை' ஆனது. அன்று முதல் 'மெட்ராஸ் பாஷை' எங்களின் மொழியானது. 'மெட்ராஸ் பாஷை' - ஒரு வரலாற்று பார்வை மெட்ராஸ் பாஷையின் இலக்கணத்தில் முக்கிய பங்காற்றுவது, ஆங்கிலம் என்னும் மொழி. இந்த ஆங்கில மொழியானது இன்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மொழி. எம்.ஆர்.ராதா முதல் 'சின்ன(புத்தி) கலைவானர்' விவேக் வரை...
த னது நரைத்த மீசையைக் கம்பீரமாக நீவிக்கொண்டு - ''வண்டியா ஸார் வேணும்?'' என்று ஜட்காவுக்குள்ளே படுத்து இருந்த துரைசாமி மிகவும் மரியா தையாக வண்டியைவிட்டுக் கீழிறங்கி நின்றார். ''நீங்க எத்தனை வருஷமா ஜட்கா ஓட்டிக்கினு இருக்கீங்க?'' என்ற ஒரு கேள்விதான் நான் கேட்டேன். மனுஷன் ஒரு பேட்டிக்கு அல்ல - ஒரு சிறு கதைக்கு அல்ல - ஒரு நாவலுக்கு வேண்டிய விஷயங்களை ஓர் இலக்கியத்தில் வரும் குணச்சித்திரம் போன்று சொல்லஆரம் பித்துவிட்டார். அவ்வளவு சுவை யாக என்னால் அவற்றைத் திருப்பிச் சொல்ல முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ''அம்பது வருஷத்துக்கு மேலே ஆயிடுச்சி ஸார், நானும் ஜட்கா ஓட்ட ஆரம்பிச்சு'' என்று தொடங்கியவுடன், தொடக்கத்திலேயே உதடு பிதுக்கலுடன் ஒரு (ஜீணீusமீ) நிதானம். ''அப்போஎல்லாம் ஸார்'' என்று சொல்லி, ஒரு சிறு மௌனம்... அப்புறம் மீசை நீவல்... உதடுகளுக்குள் ஓர் ஏலாமைச் சிரிப்பு... பின்னர் ஒரு பெருமூச்சு! ''ம்... இப்பத்தானே டாக்சிங்க, காருங்க எல்லாம் வந்துடுச்சு. இந்தத் தொயிலுக்கு மரியாதியே பூடிச்சு ஸார்... அந்தக் காலத்திலே வண்டிகளு...
பொழுது போகாமல் விட்டத்தைப் பார்த்து யோசித்துக்கொண்டிருந்த போது தோன்றிய திட்டம் இது. உடனடியாக செயல் படுத்திப்பார்க்க, முதல் நாள் இரவே பட்டினப்பாக்கத்தில் ஒரு நண்பரின் வீட்டில் போய் 'டேரா' போட்டாகி விட்டது. முதல் பேருந்து அதிகாலை 5.15க்கு என்று முன்னமே விசாரித்து வைத்து விட்டதால் இரவு கைப்பேசியில் அலாரம் வைத்து படுத்து விட்டேன். எப்போதும் படுத்தவுடனே சுழல் மறந்து கனவுகளில் கிழவிகளுடன் (வயசாகிடுச்சுல்ல!) கொஞ்சப் போய் விடுவது வழக்கம். ஆனால்.. அன்றைய இரவு ஏனோ உறக்கம் பிடிக்கவே இல்லை. புதிய இடம் என்பதால் இருக்கலாம். இப்படியும், அப்படியுமாக புரண்டு படுத்ததிலேயே அதிகாலை நான்கு மணியாகி விட்டது. எழுந்து காலைக்கடனை முடித்து, குளிர்ந்த நீரில் குளியல் (நம்புங்க! நெசமாத்தாங்க!!) போட்டு, பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் வந்து விட்டேன். திட்டம் இது தான். நான் தினமும் வேலைக்கு போகும் (வித்லோகா-மைலாப்பூரில் இருக்கிறது) பேருந்து 27D. பட்டிணப்பாக்கம் T0 வில்லிவாக்கம். வட சென்னையையும் தென்சென்னையையும் இணைக்கும் பேருந்துகளில் இதுவும் ஒன்று. இதில் முதல் இரு ரவுண்ட் பயணத்தில் பயணிக்க வேண்டும். அதை பதி...
Comments