சென்னை : சிலிகான் சமவெளி

சென்னை கடந்த நான்கு வருடங்களாக ஒரு மிகப்பெரிய சிலிகான் புரட்சியை அமைதியாக செய்து வருகிறது... ஆறு மாதங்களுக்கு முன் எடுத்த ஒரு சர்வேயில் 2005-2006 ஆண்டில் மட்டும் நம் சென்னையில் மென்பொருள் நிறுவனங்களுக்கு சுமார் ஒரு கோடியே பத்து லட்சம் சதுர அடி அளவுக்கு கட்டமைப்பு தேவைகள் என CMDAவிடம் விண்ணப்பித்துள்ளன. அனைத்து விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டு இடம் ஒதுக்கப்பட்டு, தற்சமயம் சென்னை மற்றும் அதைச் சுற்றி உள்ள இடங்களில் அவை விண்ணைத் தொடும் கட்டிடங்களாக வளர்ந்துவருகிறன. இன்று சென்னையில் வளர்ந்துவிட்ட மென்பொருள் நிறுவன கட்டிடங்களும், கட்டப்பட்டுவரும் மென்பொருள் நிறுவன கட்டிடங்களும் மேலே உள்ள சென்னை வரைபடத்தில் பார்க்க முடியும்.

இனி சென்னையில் வானளாவிய, விண்ணைத் தொடும் கட்டிடங்களும் (Skyscrappers) சாதாரண விசயமாக விரைவில் ஆகக்கூடும். CMDAவிடம் அனுமதி பெற்று கட்டப்பட்டு வரும் பலவற்றில் ஒரு சில வரைவு படங்கள் எனக்கு சிக்கின. அவை உங்கள் பார்வைக்கு. ஒரு ஹைடெக் நகரமாக மாறப்போகும் சென்னை, இனி நம்மை மட்டும் அல்ல, அனைத்து மென்/கணிப்பொறி நிறுவனங்களை தன் வசபடுத்தப்போகிறது என்பதில் எனக்கு ஐயமில்லை.

குறிப்பிடும் படியான சில விவரங்கள்:

CTS தன் பங்குக்கு சுமார் பத்து லட்சம் சதுர அடி அளவுக்கு தன் அலுவலகத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

IBM தன் அலுவலக பரப்பளவை சென்னையில் சுமார் ஒன்பது லட்சம் ச.அடி வளர்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

TCS மற்றும் சத்யம் தலா எட்டு லட்சம் ச.அடி அளவுக்கு சென்னையில் தங்களை விரிவாக்க திட்டமிட்டு அதற்கான இடம் மற்றும் கட்டுமான பணியும் முடிவடையும் தருவாயில் உள்ளது.

இன்போசிஸ்க்கு சுமார் ஏழு லட்சம் ச.அடி அலுவலக கட்டிடம் உருவாகி வருகிறது.




மற்ற நிறுவனங்களின் தேவைகள் : 2005- 2006 எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு:

ABN AMRO - நான்கு லட்சம் ச.அடி
Accenture - ஆறு லட்சம் ச.அடி
Alcatel - ஒரு லட்சம் ச.அடி
Alstom - ஒரு லட்சம் ச.அடி
American Express - இரண்டு லட்சம் ச.அடி
CMC - இரண்டு லட்சம் ச.அடி
Convergys - மூன்று லட்சம் ச.அடி
Convansys - மூன்று லட்சம் ச.அடி
EDS - மூன்று லட்சம் ச.அடி
Flextronics - ஆறு லட்சம் ச.அடி
Ford - மூன்று லட்சம் ச.அடி
Goldman Sachs - 4 லட்சம் ச.அடி
HP - மூன்று லட்சம் ச.அடி
IGATE - இரண்டு லட்சம் ச.அடி
Mastek - மூன்று லட்சம் ச.அடி
Merrill Lynch - இரண்டு லட்சம் ச.அடி
Nokia - இரண்டு லட்சம் ச.அடி
Sidemen's - ஒரு லட்சம் ச.அடி
Sify - இரண்டு லட்சம் ச.அடி
Sintel - இரண்டு லட்சம் ச.அடி
Slash Support - இரண்டு லட்சம் ச.அடி
Sutherland - இரண்டு லட்சம் ச.அடி
Verizon - இரண்டு லட்சம் ச.அடி
Wipro - ஆறு லட்சம் ச.அடி

இவை அனைத்தும் 2005-2006 எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு. இன்று தேவைகள் மேலும் உயர்ந்து வருகிறது.

Siruseri Techno Park:













டாடா கன்சல்டன்சி தன் பங்கிற்கு சுமார் இருபத்தி எட்டு ஏக்கர் பரப்பளவில் பன்னிரண்டு கட்டிடங்களை கொண்ட ஒரு கணிபொறிப் பூங்காவை 2007-ல் துவக்க திட்டமிட்டு, சிறுசேரியில் Siruseri Techno Park என்று பெயரிட்டு கட்டி வருகிறது. இதில் 20,000 கணிப்பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்புள்ளதாகவும் TCS தகவல் வெளியிட்டுள்ளது.

இவை அல்லாமல் Dell, Microsoft, Sun Microsystems என அனைத்து பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களும் சென்னையை நோக்கி வருகிறது. இன்றைய சென்னையின் உள்கட்டமைப்பு, மனித வளம், அரசின் ஆதரவு என பல காரணங்கள் இந்த மென்பொருள் நிறுவனங்களை சென்னையை பார்க்க உறுதுணையாக இருந்திருக்க வேண்டும்.

உயர்ந்து வரும் இந்த IT கட்டிங்கள் நமக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கக் கூடும். அதே சமயம் சில பிரச்சனைகளும் வரக்கூடும். இந்த IT கம்பெனிகளின் வளர்ச்சியால் உயர்ந்து வரும் ரியல் எஸ்டேட் விலை மற்றும் வீட்டு வாடகை, சாதாரண மக்களை பாதிக்ககூடும். உதாரணத்துக்கு, சென்னையின் suburb என்று கருதப்பட்ட துரைப்பாக்கத்தில் நான்கு - ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு 1000 ச.அடி வீட்டு வாடகை சுமார் ரூ 1000 இருந்தது, இன்று ரூ 5000 - 7000 வரை எட்டிவிட்டது. ஒரு Ground நிலம் இரண்டு லட்சம் கூட இல்லாமல் இருந்தது. இன்று பன்மடங்காக உயர்ந்து சுமார் இருபது லட்சம் என்ற அளவுக்கு வளர்ந்துவிட்டது. இதே நிலைதான் சென்னையை சுற்றியுள்ள மற்ற இடங்களிலும் காணப்படுகிறது. இதே போல் தனி மனித வருமானம், செலவு திறன் என்பவை இதற்கு அனுசரித்தாற் போல் உயர்ந்தால் இது ஆரோக்கியமானதாக இருக்ககூடும். எனினும் இதன் உண்மையான தாக்கம் என்பது, போக போகதான் நமக்குத் தெரியவரும். அரசு இது போன்று எழும் சில பிரச்சனைகளை ஆராய்ந்து, இதற்கான கட்டுப்பாட்டு வரைமுறை இயந்திரத்தை இன்றே இயக்கத் துவங்கினால், வரும் காலத்தில், சாதாரண நடுத்தர மக்கள் எதிர்நோக்க உள்ள பிரச்சனைகள் கட்டுப்படுத்தபடலாம்.

இவையன்றி இத்தனை அலுவலகங்கள் வருமாயின், அவற்றுக்குத் தேவையான தண்ணீர், மின்சாரம், சாலை மற்றும் போக்குவரத்து போன்ற வசதிகளைப் பெருக்குவதற்கான வழிவகைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தி, அதை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

எது எப்படியோ இன்று, படித்து, சுமாரான ஆங்கிலத்தில் பேச்சுத் திறன் பெற்ற இளைஞர்களுக்கு வேலையில்லை என்ற குறை கண்டிப்பாக இல்லாமல் செய்துவிடும் இந்த IT நிறுவனங்களின் அசுரவளர்ச்சி என்பது நிதர்சனமான உண்மை. தமிழகத்தில் வருடத்துக்கு சுமார் ஒரு லட்சம் பொறியியல் பட்டதாரிகளும், பல லட்சம் ஏனைய பட்டதாரிகளும் உருவாக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் இதனால் நன்கு பயன் பெறுவார்கள்.


இப்படி ஒரு அசத்தல் ரிப்போர்ட் பார்க்கும் போது இனி நம் சென்னைவாசிகளோ/ தமிழர்களோ வேலைக்காக பூனே, நொய்டா, பங்களூரு என பல நகரங்களுக்கு படை எடுக்க வேண்டிய தேவை எழாது என்பது நிச்சயம்.

இந்த வளர்ச்சி அடுத்த சில ஆண்டுகளில் நம் சென்னையை இந்தியாவின் சிலிகான் சிட்டியாக உருவெடுக்கும் என்று பெருமிதம் கொள்வோம்.

புள்ளிவிரங்களுக்கு நன்றி: MARG & Business Week.

Comments

ஆனா நல்லது தான் -எல்லோருக்கும்
நல்ல செய்தி. தமிழகம் பொருளாதாரத்தில் முன்னேறிச் செல்லும் செய்தியறிந்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தகவலுக்கு நன்றிகள்.
நடந்தா நல்லது தான். செய்திக்கு நன்றி.
RBGR said…
ஆனால்,அதிகரிக்கப் போகும் நமது டிராபிக் மற்றும் நெரிசலை நினைத்தால் குஷி-மும்தாஜ் ஸ்டைலில் சொன்னால் "
அய்யோப் பாவ்வ்வ்வம்"
டெல்லிப்பேரன் சாதனை தானே இது :)

-என்னையும் அரசியலுக்கு இழுத்தீட்டிங்களே!( முதல்வன் அர்ஜூன் ஸ்டைலில் படிக்கவும்)

என் ஸ்டைலில் சொன்னால் "நம் துறை வளர்வது நிச்சயம் மகிழ்வு தான். "
வாழ்க !
எல்லா கம்பெனிகளும் சென்னை வந்து குவிஞ்சா, சென்னை என்ன ஆகறது,
சென்னைல இப்பவே எவ்வளவு நெரிசல், இருக்குறவங்களுக்கு தெரியும், தமிழ் நாட்டில் மற்ற நகரங்ளும் இருக்கின்றன.

சென்னை Hi-Tech City ஆயிட்டா, சாமான்யர்கள் இங்கே வாழ முடியாது, Software-Engineer மட்டும் தான் வாழ முடியும்.

நம்ம அரசியல் வாதிகளுக்கு இது ஏன் புரியல.

மொருளாதாரம் நீர் போல் பரந்து விரிய வேண்டு, மலை போல் குவியக்கூடாது. அப்போதுதான் எல்லோரும் பயன் பெருவர்.
சீனு said…
ஒப்பீடில்லாமல் பார்த்தால் நாம் படுவேகமாக முன்னேறுவதாகத்தான் தெரியும். நான் அறிந்த வரை பெங்களூரு-வை ஒப்பிட்டால், நாம் இன்னும் அதல பாதாளா நிலையிலேயே இருக்கிறோம் என்பது தான் உண்மை. நெகடிவாக எல்லாம் சொல்லவில்லை. இது ஒரு பாசிட்டிவான நெகட்டிவ்.

பெங்களூரு ஒரு தேக்க நிலையை அடைந்திருப்பதற்க்கு காரணம் அதன் உள்கட்டமைப்பிற்கு வீழ்ந்து விட்டது. அதாவது குருவி தலையில் பனங்காய். ஆனால் இன்ஃபோசிஸ், விப்ரோ, ஐ.பி.எம், ஃபிலிப்ஸ், தாம்ப்ஸன், மைன்ட்டிரீ போன்ற நிறுவனங்களை பார்த்தால் ஒன்று மட்டும் தெள்ளத் தெளிவாக விளங்கும். இவை ஒரு formality-க்காக மட்டுமே சென்னையில் தன் கிளைகளை வைத்திருக்கும். காரணம், personal-ஆ நாராயண மூர்த்திக்கும், அஸிம் பிரேம்ஜி-க்கும், ஃபிலிப்ஸ் அதிபர் (பெயர் தெரியவில்லை) சென்னை என்றாலே அலர்ஜி. சென்னையா அல்லது தமிழ் நாடா என்று தெரியவில்லை. அவர்கள் பெங்களூருவில் இடம் இல்லையென்றால் தூரத்தில் இருக்கும் மைசூருக்கு ஓடியோ (இன்ஃபோசிஸ்) அல்லது அடிக்கடி வேலை நிறுத்தம் நடக்கும் கம்யூனிச மே.வங்கத்துக்கு ஓடியோ (ஐ.பி.எம்) அங்கே தன் கிளைகளை விரிவுபடுத்துவார்களேயன்றி அருகில் இருக்கும் சென்னையை சீண்ட மாட்டார்கள். காரணம்? காரணம்? நான் ஊகிப்பது அவர்களுக்கு personal-ஆ சென்னையையோ அல்லது தமிழ்நாட்டையோ அல்லது த.நா. அரசியலையோ அல்லது திராவிட கொள்கைகளையோ பிடிக்காமல் ஒதுக்குபவர்கள். பெங்களூருவில் நான் இருந்த பொழுது இது நான் கண்ட உண்மை. இத்தனைக்கும் சென்னை உள்கட்டமைப்பில் கொல்கத்தாவை விட பல மடங்கு முன்னேறிய நிலையில் உள்ளது. நகரம் விரிவடைய தேவையான இடவசதியும் உண்டு (உதா, ECR).

சென்னை பிழைப்பது CTS, TCS போன்ற சென்னை based நிறுவனங்களால் தான். இதில் வேடிக்கை என்னவென்றால் நான் மேற்கூறிய நிறுவனங்களில் கணிசமான அளவில் தமிழர்கள் இருக்கிறார்கள். ஏன்! அவர்கள் பங்கும் அபாரமானது. "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை"-ன்னு நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டியது தான்.

//சென்னை Hi-Tech City ஆயிட்டா, சாமான்யர்கள் இங்கே வாழ முடியாது, Software-Engineer மட்டும் தான் வாழ முடியும்.//
பெங்களூரு-வில் இது தான் நிலை. Software-Engineer தவிர மற்றவர்கள் வாழ்வது மிகக் கடினம். Cost of living சென்னையை ஒப்பிடும் பொழுது 2-3 மடங்கு அதிகம். இப்பொழுதே என் நண்பர்கள் சிலர் (4-5 பேர்) பெங்களூரு-வை விட்டு வர ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், சென்னையும் அப்படி வீழும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஒரே ஆறுதல், சென்னை பெங்களூரு அளவிற்கு சிறியது இல்லை. அதனால் மிக மெதுவாகவே சாதிக்கும், வீழும்!!
//சென்னைவாசிகளோ/ தமிழர்களோ வேலைக்காக பூனே, நொய்டா, பங்களூரு என பல நகரங்களுக்கு படை எடுக்க வேண்டிய தேவை எழாது என்பது நிச்சயம்.
//

கேட்கவே இனிமையாக இருக்கிறது. நான் 25 வருடங்களுக்கு பின் பிறந்திருக்க வேண்டும்.

நான் படித்து முடித்த பிறகு பாம்பே மட்டும் தான் வேலை தரும் நகரமாக இருந்தது
Sivabalan said…
சூப்பர் பதிவு.. சதுர அடியுடன் விளக்கமாக பதிவை கொடுத்துள்ளீர்கள்.. எப்படி இவ்வளவு தகவல் சேகரிக்க முடிந்த்தது.. கலக்கல்.

நன்றி
மிக நல்ல செய்தி.
என்னைப்போல் சென்னைப்பற்று கொண்டவர்களுக்கு
இது போல கட்டுக்கோப்பான
தெளிவான கட்டுரை மிக உதவியாக இருக்கிறது.
நம்ம பட்டணம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
நன்றி.
தல கலக்கிட்டீங்க...........மிரட்டல் பகுதி.........சென்னைக்கு உங்களால் மிகப்பெரிய அடையாளம்....................
நிறைய அன்புடன்
வீரமணி
ரெம்ப நல்ல தகவல்கள். எப்படா சென்னை போய் செட்டில் ஆகலாம்னு தோண வச்சுட்டீங்க.

வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

27D

வாராரு ஆட்டோகாரரு....