குழந்தை எழுத்தாளர் திருவிழா - சென்னை

சென்னையில் குழந்தை எழுத்தாளர் திருவிழா என்ற அறிவிப்பு எங்கள் அலுவலக மடலில் வந்த போதே இதற்குப் போயே தீர்வது என்று முடிவெடுத்துவிட்டேன்.

சென்னை ராணி மேரி கல்லூரியில் சனி ஞாயிறு என்று இரண்டு நாள் திருவிழாவாக நடந்த இந்த நிகழ்ச்சி, குழந்தை இலக்கியம் எழுதும் எழுத்தாளர்களுக்கான விழா அல்ல.


கதை எழுதுபவர்களே, 8 முதல் 14 வயதான குழந்தைகள் தான் - தமிழகத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சின்னஞ் சிறு குழந்தைகள்.

மூன்று மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டின் கிராமங்களிலும் சேரிகளிலும் கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடும் தன்னார்வ அமைப்பான எய்ட் இந்தியா, குழந்தைகளுக்கான சிறுகதைப் போட்டிகளை நடத்தியது.

தமிழ்நாட்டின் ஆயிரக்கணக்கான கிராமங்கள் தோறும், சுமார் 15000 குழந்தைகள் போட்டிகளில் கலந்து கொண்டனர். கிராமம், வட்டாரம், மாவட்டம் என்று பல நிலைகளில் வெற்றி பெற்ற சுமார் 180 குழந்தைகளுக்கு சென்னை ராணி மேரி கல்லூரியில் இரண்டு நாள் பயிலரங்கங்கள் கடந்த சனி, ஞாயிறில் நடந்தன.



பொம்மை செய்தல், கணித விளையாட்டுக்கள், எளிய அறிவியல் பரிசோதனைகளைப் பற்றிய விளக்கங்கள், காகித மடிப்புக் கலை, இசையும் இசை சார்ந்த விளையாட்டுக்களும், கேலிச் சித்திரம் வரையும் பயிற்சி, களிமண் சிற்பம் செய்தல், அட்டை பொம்மை செய்தல் முதலிய பல விளையாட்டு சார்ந்த கல்வி வகுப்புகளில் குழந்தைகள் பங்கு பெற்றனர். இவை தவிர மந்திரக் காட்சிகள், கடற்கரைப் பயணம், தொலைநோக்கி மூலம் வானத்தைப் பார்ப்பது, பாம்பு மற்றும் முதலைப் பண்ணை சுற்றுலா, புதையல்வேட்டை என்று பல நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன.




பல்வேறு கிராமங்களிலிருந்தும் வந்திருந்த சின்னச் சின்னக் குழந்தைகள் பொம்மைகள் செய்வதும், காதிங்களை மடித்து யானை முகங்கள் செய்தலும் பார்க்க மிக அழகான காட்சி. (இன்னும் நிறைய முகங்கள் செய்திருந்தார்கள்.. நம்ம கண்ணுக்கு வேறே ஏதாவது பட்டால் தானே :) )

எழுத்தாளர்கள் யூமா வாசுகியும், கூத்தலிங்கமும் வந்திருந்து குழந்தைகளுக்கு கதைப் பயிலரங்கங்களும் நடத்தினர்.

குழந்தை எழுத்தாளர்கள் மிகவும் பிஸியாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே படித்துக் கொண்டிருந்ததால், யாரையும் பேட்டி காண அவகாசம் வாய்க்கவில்லை.



எய்ட் இந்தியா சத்தமில்லாமல் செய்துவரும் இன்னுமொரு விஷயம் யுரேகா என்னும் நடமாடும் புத்தக நிலையம். சிறுவர் புத்தகங்கள் அதிகம் இருந்தாலும், கிராமப்புறக் குழந்தைகளுக்கு இவை கிடைப்பது அபூர்வம். அப்படியே கிடைக்கும் ஒன்றிரண்டு புத்தகங்களையும் இந்தச் சிறுவர்கள் ஏனோ படிக்க ஆர்வம் காட்டுவதில்லை. இந்தக் குறைகளைக் களைய வந்தது தான் யுரேகா புத்தக நிலையம்.




குழந்தை இலக்கிய எழுத்தாளர்களை வைத்து கதை அட்டைகள் உருவாக்கப் படுகின்றன. இவை, குழந்தைகளின் வீடுகளுக்கே கொடுத்தனுப்பப் படுகின்றன. குழந்தைகள் கதை அட்டைகளைப் படித்துவிட்டு அடுத்த குழந்தைக்குக் கொடுத்துவிட வேண்டும். இது போன்ற நடமாடும் நூலகங்களால், கிராமப்புறக் குழந்தைகளுக்கும் கதைகளைப் பற்றி அறிய ஒரு வாய்ப்பு கிட்டுகிறது.

இன்று தமிழகத்து கிராமங்களில் 1800 யூரேகா நூலகங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு மட்டுமன்றி, பெரியவர்களுக்கும் இந்த நூலகங்கள் தொடர் கல்விக் கூடங்களாகும்.

"ஸ, ரி, க," என்று விளையாட்டாய் இசை கற்றுக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்துக் கொண்டே படியிறங்கியபோது, அதே கல்லூரி வளாகத்தின் பாதி கட்டி முடிந்த புதிய கட்டிடத்தின் தளத்துக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த பத்து வயது நிரம்பாத சிறுமியின் உருவம் நாம் இன்னும் போக வேண்டிய தூரத்தை நினைவுப்படுத்துவது போல் மனதை என்னவோ செய்தது.

Comments

//"ஸ, ரி, க," என்று விளையாட்டாய் இசை கற்றுக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்துக் கொண்டே படியிறங்கியபோது, அதே கல்லூரி வளாகத்தின் பாதி கட்டி முடிந்த புதிய கட்டிடத்தின் தளத்துக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த பத்து வயது நிரம்பாத சிறுமியின் உருவம் நாம் இன்னும் போக வேண்டிய தூரத்தை நினைவுப்படுத்துவது போல் மனதை என்னவோ செய்தது//

இது தானேங்க நம் நாட்டின் நிலை. பெத்தப் படித்தவங்க பலரும் தான் வாழும் சமூகம் குறித்த அக்கரையின்றி.. வங்கிக் கணக்கில் பதிவேடுகுறித்து மட்டும் அக்கரை கொண்டு இருப்பதால்.. தான், இந்நிலை குறித்து நம் மனதை என்னவோ தான் செய்தது என்றுதான் நம்மால் சொல்ல முடிகிறது. வருத்தமளிக்கிறது/ கோபம் ஏற்படுத்துகிறது என்று சொல்ல முடிவதில்லை.
நம்மக்கள் "உச்" கொட்ட மட்டும் தயங்காதவர்கள்.
அரசியல் மட்டும் வேண்டாம் இவர்களுக்கு!
அடுத்தவனை நோக்கி ஒரு விரல் நீட்டும் போது தன்னை நோக்கி தன் கையிலேயே மூன்று விரல்கள் இருப்பதை மறந்து போகும் அறிவாளிகள்.
வேறு என்ன சொல்ல.. "ம்ச்.."
நமக்கு கிடைக்காத வாய்ப்புகள் இக்கால குழந்தைகளுக்கு! நல்ல விஷயம்தான்.

முன்பே அறிவித்திருந்தால் நாங்களும் வந்திருப்போம். பேசாமல் சென்னைப்பட்டினம் வலைப்பூவிலேயே "நிகழ்வுகள்" என்று ஒரு பகுதி ஆரம்பித்துவிட வேண்டியதுதான். இதுபோன்ற நிகழ்ச்சி பற்றிய அறிவிப்புகளை எப்போதும் பார்த்துக்கொள்ள வசதியாக இருக்கும்.
நான் கூட நம்ம சந்திப்பதான் எழுதிட்டிங்கன்னு அடிச்சு பிடிச்சு வந்து படித்தேன்...............


இருந்தாலும் நல்ல பதிவு படித்த திருப்தி கிடைத்தது
நான் கூட நம்ம சந்திப்பதான் எழுதிட்டிங்கன்னு அடிச்சு பிடிச்சு வந்து படித்தேன்...............


இருந்தாலும் நல்ல பதிவு படித்த திருப்தி கிடைத்தது
தகவலுக்கு நன்றி.
"நிகழ்வுகள்" குறித்த அருள்குமாரின் யோசனை நல்ல பலனைத் தரும் என நம்புகிறேன். வலைப்பதிவர் சந்திப்பு மட்டும் என்றில்லாமல் நல்ல நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளும் வாய்ப்புக்களும் உருவாகும்.
//நான் கூட நம்ம சந்திப்பதான் எழுதிட்டிங்கன்னு அடிச்சு பிடிச்சு வந்து படித்தேன்...............
//

:-)

அட! செந்திலுக்கு காமடி கூட வருதே!

;-))))
நல்லதொரு நிகழ்ச்சி நடந்திருக்கிறது அதுவும் சென்னையில் அதுவும் விடுமுறை நாளில் எங்களுக்கு சொல்லமலேயே சென்று வந்திருக்கிறீர்கள் நல்லா இருங்க :)

சரி இனி பதிவினைப் பற்றி : நல்லதொரு அனுபவக்கட்டுரை படிக்கும் உணர்வு உண்டானது உங்கள் பதிவைப் படிக்கையில் நன்றி பொன்ஸ்.சின்ன வயதில் நமக்கு கிடைக்காத பல நல்ல விசயங்கள் இன்றைய குழந்தைகளுக்கு கிடைப்பது நல்ல விசயம்.குழந்தைகளை நல்ல திசையில் வழிகாட்டி நின்றால் வரும் சமூகம் நல்லதாய் அமையும்.

/*"ஸ, ரி, க," என்று விளையாட்டாய் இசை கற்றுக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்துக் கொண்டே படியிறங்கியபோது, அதே கல்லூரி வளாகத்தின் பாதி கட்டி முடிந்த புதிய கட்டிடத்தின் தளத்துக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த பத்து வயது நிரம்பாத சிறுமியின் உருவம் நாம் இன்னும் போக வேண்டிய தூரத்தை நினைவுப்படுத்துவது போல் மனதை என்னவோ செய்தது.*/

இதுதான் இந்தியாவா என எண்ணத் தோன்றுகிறது.ஒரு பக்கம் எல்லாமே எளிதில் கிடைக்கும் சமூகம் அதே சமயம் இன்னொருபக்கம் அடிப்படைகள் ஏதும் கிடைக்கா சமூகம் :(
ஊக்கப்படுத்தி பாராட்டப்பட வேண்டிய முயற்சி .
தகவலுக்கு நன்றி பொன்ஸ்
இன்றைய சிறு துளிகள் நாளை பெருவெள்ளத்திற்கு அடிகோலிடும்.
//.......அதே கல்லூரி வளாகத்தின் பாதி கட்டி முடிந்த புதிய கட்டிடத்தின் தளத்துக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த பத்து வயது நிரம்பாத சிறுமியின் உருவம் நாம் இன்னும் போக வேண்டிய தூரத்தை நினைவுப்படுத்துவது போல் மனதை என்னவோ செய்தது.//
நேற்றுவரை கண்ணிற்கே படாதது இன்று மனதை பாதிக்கும் நிலை நாளை இதற்கு முடிவு காண இருப்பதை கட்டியம் கூறுகிறது.

நல்ல பதிவிற்கு நன்றி.
அருமையான செய்தியை அழகான உங்கள் நடையில் எழுதியுள்ளீர்கள்.

வாழ்த்துகள் போன்ஸ்.

இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறோம்.

நன்றியுடன் முத்தமிழ் குழுமத்திலும் வெளியிட்டுள்ளேன்.

http://groups.google.com/group/muththamiz
//நான் கூட நம்ம சந்திப்பதான் எழுதிட்டிங்கன்னு அடிச்சு பிடிச்சு வந்து படித்தேன்...............
//

:-)

அட! செந்திலுக்கு காமடி கூட வருதே!

;-))))

//



நானும் உங்கார்ந்து கவிதையெல்லாம் எழுதிப்பார்த்தேன். ......முடியல
அதான் லேட்டஸ்ட் டிரண்டுக்கு மாறிட்டேன் :)))
//நான் கூட நம்ம சந்திப்பதான் எழுதிட்டிங்கன்னு அடிச்சு பிடிச்சு வந்து படித்தேன்...............
//

:-)

அட! செந்திலுக்கு காமடி கூட வருதே!

;-))))

//



நானும் உங்கார்ந்து கவிதையெல்லாம் எழுதிப்பார்த்தேன். ......முடியல
அதான் லேட்டஸ்ட் டிரண்டுக்கு மாறிட்டேன் :)))
பொன்ஸ்,
தகவல்களுக்கு நன்றிகள்.

//"ஸ, ரி, க," என்று விளையாட்டாய் இசை கற்றுக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்துக் கொண்டே படியிறங்கியபோது, அதே கல்லூரி வளாகத்தின் பாதி கட்டி முடிந்த புதிய கட்டிடத்தின் தளத்துக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த பத்து வயது நிரம்பாத சிறுமியின் உருவம் நாம் இன்னும் போக வேண்டிய தூரத்தை நினைவுப்படுத்துவது போல் மனதை என்னவோ செய்தது. //

உண்மைதான்.
என்ன அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியாச்சா??
ஸ்மைலி, சுந்தரவடிவேல், கார்த்திக் வேலு, நிர்மல், மஞ்சூர் ராசா நன்றிகள்.

அருள், ப்ரியன், நாங்களே முன்னறிவிப்பில்லாமல் போய்விட்டோம்.. இத்தனை பேரும் போய் நின்றால் பயந்து போயிருப்பார்கள் :)

நிகழ்வுகள் பற்றிய யோசனை உண்மையில் அற்புதமாக இருக்கிறது.. அறிவிப்புப் பலகை/நிகழ்வுகள் என்று ஒரு பகுதி உருவாக்கிவிடுவோம்..

செந்தில், நான் எழுதாதது நல்லது.. நீங்க தான் கலக்கறீங்களே!!

மணியன்,
//நேற்றுவரை கண்ணிற்கே படாதது இன்று மனதை பாதிக்கும் நிலை நாளை இதற்கு முடிவு காண இருப்பதை கட்டியம் கூறுகிறது.
//
ம்ம்.. உண்மைதான்..
முத்தமிழ் மன்றத்தில் இட்டமைக்கு மஞ்சூர் ராசாவுக்கு நன்றிகள் பல. அதைப் பார்த்துவிட்டு, உமாநாத் எய்ட் இந்தியாவைப் போன்றே பணியாற்றி வரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குறித்த செய்திகளை இட்டிருக்கிறார். அந்த விவரங்கள் இங்கே:

இதை போன்ற பணிகளை 1990களின் ஆரம்பம் முதலே தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
பணியாற்றி வருகின்றது.


குழந்தை அறிவியல் விழாக்கள் வருடந்தோரும் நடந்து வருகின்றது. யுரேகா என்னும்
வருடாந்திர அறிவியல் வினாடி வினா நடக்கின்றது.


"துளிர்" - குழந்தைகளுக்கான அறிவியல் மாத இதழ் வெளியாகின்றது.


இந்த நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பாரதி புத்தகாலயம்
சுமார் 1000 இடங்களில் புத்தக கண்காட்சி நடந்த திட்டமிட்டுள்ளது.


நன்றி உமாநாத்
வெற்றி, நன்றி,


வெளிகண்ட நாதர் உதயகுமார், வந்துட்டோம்ல..

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

27D

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்