சென்னை:புராதன முருகன் ஆலயம் கண்டுபிடிப்பு


தமிழகத்தில் சங்க காலத்தில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் முருகன் கோயில் ஒன்றின் இடிபாடுகளை இந்திய அகழ்வாரய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நிலத்துக்குக் கீழ் ஆலயம்

மகாபலிபுரத்துக்கு வடக்கே சாலாவான் குப்பம் என்னும் இடத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்த ஆய்வாளர்கள் அங்கு சுனாமி தாக்குதலுக்கு பின்னர் மண்ணின் அடியில் இருந்து வெளிவந்து காணப்பட்ட ஒரு கல்வெட்டை கண்டுள்ளனர்.


அகழ்வு வேலைகள் தொடருகின்றனஅதில் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு படையெடுத்து வந்து, ஆட்சி செய்த இராஷ்டிரகூடர்கள் அங்கிருந்த ஒரு கோயிலுக்கு மானியங்கள் வழங்கியதாகக் கூறப்பட்டிருந்தது.


அதனை அடுத்து அங்கு ஆய்வு நடத்திய போது, அந்தப் பகுதிக்கு அருகிலே மண்ணில் புதைந்த நிலையில் ஒரு முருகன் ஆலயத்தைக் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

அகழ்வு வேலைகள் தொடருகின்றன

அகழ்வுப் பணியில் மும்முரம்ஆனால் ஆய்வுகளை அவர்கள் தொடர்ந்த போது, அந்த கோயிலின் அடியில் மேலும் மண்ணில் புதைந்த நிலையில் மற்றொமொரு கோயிலும் காணப்பட்டுள்ளது.


அகழ்வுப் பணியில் மும்முரம்

அதாவது முதலில் பல்லவர்களால் சங்க காலத்தில் கட்டப்பட்ட ஒரு கோயில், சுனாமி அலைகளால் சேதமடையவே, அதன் மீது மீண்டும் மற்றுமொரு கோயில் பின்னர் ஆண்ட மன்னர்களால் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று கூறுகிறார் சென்னை அகழ்வாராய்ச்சித் துறையைச் சேர்ந்த டி. சத்யமூர்த்தி அவர்கள்.


மீட்கப்பட்ட சில தூண்கள்பின்னர் இரண்டாவது கோயிலும்(மேலே இருந்த கோயில்) சுனாமியால் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


இந்தக் கோயில் கி.மு 2வது நூற்றாண்டுக்கும் கி.பி முதலாவது நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கருதப்படுவதாகவும் ஆய்வுகள் தொடர்வதாகவும் சத்யமூர்த்தி கூறினார்.


மீட்கப்பட்ட சில தூண்கள்

நன்றி: பி.பி.சி

Comments

பாலபாரதி ...!

பயனுள்ள தகவல். நன்றி
தகவலுக்கு நன்றிங்க.

அப்ப சுனாமி நமக்கு ஒண்ணும் புதுசு இல்லே?
G.Ragavan said…
முருக வழிபாடு தமிழ் வழக்கோடு ஒன்றிய வழிபாடு என்பதற்கு மற்றொரு சான்று. அடுத்த முறை சென்னை வருகையில் மாமல்லபுரம் சென்று பார்க்க வேண்டும்.
பாலபாரதி,
தகவலுக்கு மிக்க நன்றி. தமிழனத்தின் பழமையையும் எம்மினத்தின் நாகரீகங்களையும் பறைசாற்றும் ஆதாரங்கள் இவை.
கோயில கண்டுபிடிச்சாச்சு. அந்த கோவில்ல தமிழ் இருந்ததா என்று எப்படி கண்டுபிடிப்பது?
நல்ல பயனுள்ள செய்தி. சுனாமியால் அழிந்தவை அதே சுனாமியால் மீண்டும் வந்ததும் தமிழ் வரலாறு அறிய ஏதுவானது.
ENNAR said…
ஆமம் நல்ல தகவல் ஏற்கனவே பார்த்ததுதான்
செய்திக்கு நன்றி பாலபாரதி. பல்லவர்களால் கட்டப்பட்டக் கோவிலா? 2ம் நூற்றாண்டு என்றால் சங்க காலம் தான். ஆனால் பல்லவர்கள் சங்க கால மன்னர்கள் இல்லையே? கொஞ்சம் குழப்பமா இருக்கே?

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

27D

வாராரு ஆட்டோகாரரு....