சென்னை சங்கமம் - பார்க்க வாங்க!

மக்களே!

பட்டினக்காரர்களின் கவனக்குறைவால் சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் செய்தியை நீங்க மிஸ் பண்ணியிருப்பீங்க! அந்த குறையை சரி செய்ய, இன்று நிறைவு நாள் நிகழ்ச்சிகள் கலை கட்டப்போகுது, அதையாவது அனைவரும் போய் பார்ப்போம்!

இன்று மாலை 6 மணியளவில் பெசன்ட் நகர் கடற்கரையில், சென்னை கூத்து என்ற பெயரில் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நடைப்பெற உள்ளன! சென்னை கூத்தில் ராக் வகை பாடல்களை நம் தமிழ் கலாச்சாரத்துடன் இணைத்து ஒரு Fusion நிகழ்ச்சியாக தமிழகத்தின் தமிழகத்தின் தலை சிறந்த ராக் பாடல் குழுக்களும், தலை சிறந்த கிராமிய நடன குழுக்களும் ஒன்றாக சேர்ந்து , ஒரு புது வகை அனுபவத்தை தரப்போகிறார்கள்! வானவேடிக்கை, வானவெடி நிகழ்ச்சிகள் என்று அசத்தப்போகிறார்கள்! இந்த நிகழ்ச்சி இனிமையான மாலை நேரத்தில், அலைகடல் அருகே தூள் கிளப்பபோகுது! இதற்கு அனுமதி முற்றிலும் இலவசம்! குடும்பத்தோட போய் என்ஜாய் பண்ணுங்க சென்னைவாசிகளே!

இடம்: பெசன்ட் நகர் கடற்கரை
நேரம்: மாலை 6:00 மணி
தேதி : பிப் 26, 2007
அனுமதி: இலவசம்

Comments

We The People said…
சார் நன்பர்களே! தேதி தவறாக எழுதிவிட்டேன், இப்போ திருத்திவிட்டேன்!

நிகழ்ச்சி நடக்கப்போவது பிப் 26 ஆம் தேதி, அதாவது இன்று தான், தவறுதலா 27 என்று எழுதிவிட்டேன்!

மனித்துக்கொள்ளுங்க!
அடிதடி அதிரடி பின்னூட்டக் கயமை :-)

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

27D