"..திருவல்லிக்கேணியில் வசித்த ஒருவர் வேறு வீடு போகவேண்டும் என்றாலும் திரும்பத் திரும்பத் திருவல்லிக்கேணிக்கே வந்துவிடுவான். அவனுக்கு இந்த உலகத்திலேயே வேறெந்த இடமும் மனதுக்குகந்ததாக இருக்காது.." - கு.அழகிரிசாமி, எழுத்தாளர். சென்னையில் வாழ்வது ஒரு சுகமென்றால், சென்னையில் பேச்சிலராக இருப்பதும் 'ஒரு வகையில்' சுகமே??? இதற்கு முன் பெங்களூரு, பெங்களூர்-ஆக இருந்த பொழுது அங்கே ஒரு 15 மாதங்கள் குப்பை கொட்டியிருக்கிறேன். அப்பொழுது பல விஷயங்களில் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறோம். Cost of living, போக்குவரத்து நெரிசல் முக்கியமாக உணவு. இரவு 8.30-க்குள் சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையென்றால் அவ்வளவு தான், வண்டியை எடுத்துக் கொண்டு அலையவேண்டியிருக்கும். அதுவும் 'அந்த' சாப்பாட்டுக்கே! சாம்பாரில் அதிகமான மிளகாய் பொடியும் பின் அதனை ஈடுகட்ட இனிப்பான பூசணிக்காய் அல்லது வெல்லம் கரைத்திருப்பார்கள். ஒரே இரத்த நிறமாக இருக்கும். வட இந்திய உணவு வகைகள் இருக்கும், ஆனால் இட்சி, தோசை, சாதம் சாப்பிட்டு பழக்கம் ஆனதால் லேசில் பிடிக்காது. சுனாமி வந்து மூன்றாவது நாள், நண்பர்களின் பயமுறுத்தலையும் மீறி(?)...
Comments
தமிழ்மணமும் மாறிடுச்சுன்னு நெனைக்கிறேன்.