சென்னையில் ஒரு கண்காட்சி



விதவிதமான கலைகளை மனிதன் கண்டுபிடித்து விட்டாலும், ஆதி கலையான ஓவியக் கலையின் சிறப்புகள் தனி தான்.

கற்காலம் தொட்டே மனிதன் தான் தங்கி இருந்த குகைகளில் எல்லாம் சித்திரங்களால் தங்கள் அடையாளத்தை விட்டு வந்துள்ளான்.ஓவியக்கலை கொஞ்சம் கொஞ்சமாய் மனிதனோடு வளர்ந்தே வந்துள்ளது.

பல்வேறு வளர்ச்சி கண்ட ஓவியக்கலை நவீன ஓவியமாக மாறிய போது, சித்திரக்காரனுக்கு மட்டுமல்லாது அதைப் பார்க்கும் பார்வையாளனுக்குள்ளும் பரவசத்தை ஏற்படுத்த தொடங்கியது.

அதுவரை வரையப்பட்ட சித்திரங்களின் உணர்வுகள் அப்படியே சித்திரக்காரனின் உணர்வுகளை கடத்தி வந்திருந்தன.

அந்நிலையை மாற்றி பார்வையாளனையும், சித்திரக்காரனையும் ஒரே நாற்காலியில் அமரச்செய்த பெருமை நவீன ஓவியத்திற்கு மட்டுமே உண்டு.


இன்று பல பத்திரிக்கைகளில் நவீன ஓவியங்கள் மிகச் சாதாரணமாய் வரத்தொடங்கி விட்டது.



ஆனந்த விகடனில் தொடராக வந்த எஸ்ராவின் துணையெழுத்துக்கு கிடைத்த அதே வரவேற்பு அத்தொடருக்கு படம் வரைந்த 'டிராஸ்கி'மருது ஓவியத்திற்கும் இருந்தது எல்லோருக்கும் தெரியும்.





கடந்த வாரம் மூன்று ஓவியர்கள் ஒன்று சேர்ந்து நடத்திய ஓவியக்கண்காட்சி நடந்தது; அதற்கு போகும் வாய்ப்பும் கிடைத்தது.கண்காட்சியை திறந்து வைத்து பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு.






ஓவியக்கல்லூரியில் பயின்ற மார்ஸ்கண்ணா, புகழேந்தி, வேல்முருகன் என்ற அந்த ஓவியர்கள் மூவரும் அதே தொழிலில் வெவ்வெறு இடங்களில் பணிபுரிந்து வருகின்றார்கள்.

பத்து நாட்கள் நடைபெற்ற கண்காட்சிக்கு பெரியவர் முதல் சிறுவர்கள் வரை நிறைய பார்வையாளர்கள் வந்திருந்தது நவீன ஓவியத்தின் மேல் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தையே காட்டியது.

Comments

புகழேந்தியின் ஓவியங்களை ஆங்காங்கே பார்த்திருக்கிறேன். அவருடைய ஓவியங்களையும் மார்ஸ்கண்ணா & வேல்முருகன் ஆகியோரது ஓவியங்களையும் பார்க்க வாய்ப்புக் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி!

சென்னை - கூட்டுவலைப்பதிவில் இதைப்பகிர்ந்துகொண்டமை நல்லதொரு தொடக்கமாக இருக்க வாழ்த்துகள்.
சென்னைவாசிக்கு வணக்கம்..கண்காட்சியை நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்திய நல்ல பதிவு...தொடர்ந்து செய்யுங்கள்..
நிறைய அன்புடன்
வீரமணி

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

27D