ஏன் இந்த வலைப்பூ?

சென்னை பற்றிய புள்ளிவிவரங்களும் தகவல்களும், எளிதில் பல இடங்களில் உங்களுக்குக் கிடைக்கலாம். அது மட்டுமல்ல எங்கள் நோக்கம். நாம் விரும்பும் சென்னையை, நாம் அறிந்த சென்னையை, உணர்வுபூர்வமாகச் சொல்ல ஆசைப்பட்டதன் விளைவே இந்த வலைப்பூ.

பொதுவாக ஏதாவது வேலை விஷயமாக சென்னை வரும் நண்பர்கள், ஒன்றிரண்டு நாட்கள் சென்னையில் தங்கி, அதற்காக மட்டுமே அலைந்து திரிந்து, வந்தவேலை முடிந்தோ முடியாமலோ கிளம்பிப் போகும்போது சொல்லிவிட்டுப் போகும் ஒரு வசனம் - "ச்சே... ச்சே... எப்படித்தான் இந்த ஊர்ல இருக்கீங்களோ...?"

அப்போதெல்லாம் அவர்களுக்கு என்ன சொல்லிப் புரியவைப்பதென்று தெரியாது. 'வந்த வேலையை முடிக்க மட்டுமே அலைஞ்சா, சென்னை மட்டுமல்ல, எல்லா ஊருமே இப்படித்தான் இருக்கும்...' - இது நான் என் நண்பர்களுக்குச் சொல்வது. இனி இதைமட்டும் சொல்லாமல் இந்த வலைப்பூவை அவர்களுக்குப் பரிந்துரை செய்யலாம்!

சென்னை என்பது ஒரு ஊர் மட்டுமல்ல. அது ஒரு உறவு! இதனை இந்த வலைப்பூ உணர்த்தினால் அதுவே எங்கள் மகிழ்ச்சி :)

இன்னதென்று வகைப்படுத்த முடியவில்லை. சென்னை தரும் அனுபவங்கள் அனைத்தும் இங்கு வரலாம். நல்ல விஷயங்கள் மட்டுமல்ல. சென்னையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் இங்கு பகிர்ந்துகொள்ளப்படும்.

Comments

நல்ல முயற்சி. வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுக்கு நன்றி சிவா :)
சரியாச் சொன்னீங்க அருள்.

இங்கு வாழ்ந்து பார்த்தால்தான் இதன் இனிமையான பக்கங்கள் புலப்படுகின்றன. ஓரிரு நாட்கள் வேலை நிமித்தம் வந்து விட்டுப் போகிறவர்களுக்கு அழுக்குப் பேருந்து நிலையங்களும், அடாவடி ஆட்டோ ஓட்டுனர்களும், குழப்பம் நிறை சாலைகளும்தான் தெரிகின்றன.

அன்புடன்,

மா சிவகுமார்
அருள் ரொம்ப நல்ல விதயம்!!!

இணையத்தில் சந்திக்கும் சென்னைவாசிகளையெல்லாம் படுத்தி எடுத்துக்கொண்டிருந்தேன். இனிமேல், எல்லாரும் கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள். ஆனால், உங்களையெல்லாம் படுத்தி எடுப்பேனே! :)

இந்தக் கூட்டுப்பதிவில் உணர்வுபூர்வமான இடுகைகள் வருமென்று சொல்லியிருப்பது ஆறுதலாக இருக்கிறது அருள்.

உணர்வுபூர்வமான இடுகைகள் + அனுபவங்கள் + வரலாறுபூர்வமான இடுகைகள் + கட்டுரைகள் + சென்னையின் உணவு விடுதிகள், கடைகள், கோவில்கள் இத்தியாதி இத்தியாதி குறித்த இடுகைகள் + ஏரியா வகையான இடுகைகள் + சென்னையின் முக்கிய இடங்களின் புகைப்படங்கள் + மக்களின் அன்றாட வாழ்வைக் காட்டும் புகைப்படங்கள் + இன்னும் என்னெல்லாம் முடியுமோ அதெல்லாம் உள்ளடங்கி இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

கொஞ்சம் அதிகப்படியான தொந்தரவுதான். கூட்டுப்பதிவாளர்கள் சமாளித்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ;)

சந்தோ்ஷத்துடன்,
முன்னாள் சென்னைவாசி
மிக்க நன்றி மதி,
//வகைப்படுத்த முடியவில்லை. சென்னை தரும் அனுபவங்கள் அனைத்தும் இங்கு வரலாம்.// எப்படி சொல்வதெனக் குழம்பி விட்டுவிட்டேன்...

//உணர்வுபூர்வமான இடுகைகள் + அனுபவங்கள் + வரலாறுபூர்வமான இடுகைகள் + கட்டுரைகள் + சென்னையின் உணவு விடுதிகள், கடைகள், கோவில்கள் இத்தியாதி இத்தியாதி குறித்த இடுகைகள் + ஏரியா வகையான இடுகைகள் + சென்னையின் முக்கிய இடங்களின் புகைப்படங்கள் + மக்களின் அன்றாட வாழ்வைக் காட்டும் புகைப்படங்கள் + இன்னும் என்னெல்லாம் முடியுமோ அதெல்லாம் உள்ளடங்கி //
...நீங்கள் அழகாய்ச் சொல்லிவிட்டீர்கள் :)

//ஆனால், உங்களையெல்லாம் படுத்தி எடுப்பேனே! :)//
மகிழ்வுடன் ஏற்கிறோம் :)
//'வந்த வேலையை முடிக்க மட்டுமே அலைஞ்சா, சென்னை மட்டுமல்ல, எல்லா ஊருமே இப்படித்தான் இருக்கும்//
நல்ல விஷயத்துக்காக ஆரம்பிச்சு இருக்கீங்க, ஜமாய்ங்க மக்களே

*முன்னாள் சென்னைவாசி
இளா
//'வந்த வேலையை முடிக்க மட்டுமே அலைஞ்சா, சென்னை மட்டுமல்ல, எல்லா ஊருமே இப்படித்தான் இருக்கும்//
நல்ல கருத்தோடு ஆரம்பிச்சு இருக்கீங்க.
நல்ல விஷயத்துக்காக ஆரம்பிச்சு இருக்கீங்க, ஜமாய்ங்க மக்களே

*முன்னாள் சென்னைவாசி
இளா
Unknown said…
உங்கள் ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் உணர்வு பூர்வமான வாழ்த்துக்கள்

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

27D

வாராரு ஆட்டோகாரரு....