முழு சென்னைவாசியாக 50 டிப்ஸ்
இன்னா நைனா? ஊருக்கு புச்சா? மொதல்ல இத படிச்சு கரீக்டா ஃபாலோ பன்னேன்னு வெச்சுக்க, நீ மெய்யாலுமே 100 பர்சன்ட் சென்னைவாசி ஆயிடலாம்... 1. சினிமா சூட்டிங்னு நின்னு வேடிக்கை பார்த்து தொலையாதீங்க. அது நிஜ என்கவுன்ட்டரா இருக்க போகுது. 2. "சென்னைக்கு வந்துட்டோம்டா" அப்படீன்னு ஒரு பெருமிதம் உங்களோட வந்து ஒட்டிக்கும் (ஹி..ஹி..எனக்கு ஒட்டிகிச்சு இல்ல), அந்த பெருமிதத்தோட சென்னைல கால் வைக்கவும். முடிஞ்சா வலது கால வைக்கவும் (BTW, இப்படி யோசிக்கிற நேரத்துல ஏதாவது ஒரு பிக்பாக்கெட் உங்ககிட்ட வேலையை காட்டிடலாம், உசார் மாமே). 3. ஊருக்கு வந்து இறங்கி சென்ட்ரலோ அல்லது கோயம்பேடிலோ வெளியே வந்ததும், மேலே ஏதாவது ஏரோப்ளேன் சத்தம் கேட்டா அங்கேயே நின்னு வானத்தையே அன்னாந்து பார்க்கனும். (எப்படி அவ்ளோ பெரிய ஏரோப்ளேனுக்கு பெயின்ட் அடிப்பாங்கன்னு கேக்கக்கூடாது). 4. "மெட்ராஸ்லல்லாம் ஆட்டோகாரங்க நல்லா ஏமாத்திடுவாய்ங்கடா"-ன்னு எவனாச்சு ஒரு ஃபிரென்டு கண்டிப்பா உங்ககிட்ட சொல்லியிருப்பான். அதனால் கோயம்பேடிலோ, சென்ட்ரலிலோ இறங்கியதும், ஆட்டோ பிடிக்கிறத நிப்பாட்டனும். எவ்ளோ தூரமானாலும் நடராஜா சர்வீஸ், இல்ல ...