"சென்னை நமது பெருமை"
ஒரு நகரம் பெரு நகரமாக வளம் பெற என்ன வேண்டும்? நகருக்கு என்று ஒரு அடையாளமும், அதன் மீதான ஒவ்வொருவரின் பெருமையும்தான் ஒரு மாநகர வாழ்க்கையை நிலை பெறச் செய்ய முடியும். சென்னையில் வசிப்பவர்களில் நிறைய பேருக்கு இது சோறு போடும் இடம். 'பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டி விட்டால், ஓய்வு பெற்று நம்ம ஊரில் போய் கடைசி காலத்தைக் கழிக்கலாம்' என்று வாழ்பவர்கள் உண்டு. சென்னையையே தமது ஊராகக் கொண்டு சென்னையில் பெருமை கொண்டு வாழ்பவர்களின் எண்ணிக்கை இப்படி சகித்துக் கொண்டு வாழ்பர்களின் எண்ணிக்கையை விடக் குறைவாகத்தான் இருக்கும் என்று படுகிறது. சென்னையின் பெருமை உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரையோ, வள்ளுவர் கோட்டமோ, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியோ மட்டும் இல்லை. இவற்றை எல்லாம் உள்ளடக்கியது இன்னும் மேலானது இங்கு வாழும் இங்கு வந்து போகும் மக்களின் பங்களிப்பு. அதற்கு ஒரு அடையாளம் வேண்டும். மும்பைகார், அம்சி மும்பை, சிட்டி ஆஃப் ஜாய் (கல்கத்தா), கார்டன் சிட்டி (பெங்களூர்) என்று சென்னைவாசிகளுக்கு ஒரு அடையாளம் இருக்கிறதா? அந்த அடையாளத்தில் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள முடியுமா? அந்த அடையாளம் நீண்ட கால நோக்கில் நிலைத்த