சென்னைவாசிகளே! பாத்து போங்கப்பா...!!

போன வாரம் இரவு சுமார் 11:30 அளவில் அலுவலில் இருந்து வீட்டிற்கு (அலுவல்) காரில் திரும்பி வந்து கொண்டிருந்தேன். விமான நிலையம் தாண்டி அடுத்து வந்த பழவந்தாங்கல் சிக்னல் அருகே வண்டி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எங்கள் வண்டியை வெள்ளை மாருதி ஸ்விஃப்ட் ஒன்று ஓவர் டேக் செய்தது. வழக்கமாக இப்படி இன்னொரு வண்டி ஓவர் டேக் செய்யும் பொழுது வண்டியின் வேகத்தை கணிப்பேன். எங்கள் வண்டியில் 80 காட்டியது. அவன் ஓவர் டேக் பன்னின விதத்தை பார்த்தால் எப்படியும் கண்டிப்பாக 110க்கு மேல் தான் சென்றிருக்க வேண்டும். அவன் எங்களை மட்டும் ஓவர் டேக் செய்யவில்லை. ரோடில் இருக்கிற எல்லா வண்டியையும் ஓவர் டேக் செய்துகொண்டு தான் சென்றது. அதுவும் அப்படி ஒரு ராஷ் ட்ரைவ்.

எங்கள் வண்டிக்கு முன்னால் ஒரு கன ரக சுமையூந்து, அதாவது லாரி (நன்றி மக்கள் தொலைக்காட்சி) சென்றது. அது சாதாரன லாரி கிடையாது. பாறைகளையும் ஜல்லிக்கற்களையும் ஏற்றிச் செல்லும் லாரி. அந்த லாரி சற்றே உயரமுடனும் அதன் சக்கரம் அகலமாகவும் இருக்கும். அடுத்து அந்த லாரியையும் ஓவர் டேக் செய்ய முயன்றது. அந்த காருக்கு இடதுபுறம் மற்றொரு காரும் வலது புறத்தில் அந்த லாரியும். இடையில் வெகு சில இடைவெளி மட்டுமே. இந்த நேரத்தில் ஓவர் டேக் செய்கிறானே, அந்த கார் சற்று வலப்புறம் வந்தாலும் / அந்த லாரி சற்று இடப்புறம் வந்தாலோ / இரண்டுமே நடந்தால் என்ன ஆவது என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் அதையும் தாண்டி அந்த இரு வண்டிகளுக்கு இடையில் சென்ரு ஒருவாறு சென்றுவிட்டது அந்த மாருதி ஸ்விஃப்ட்.

இந்த நேரத்தில் மாருதி ஸ்விஃப்ட் 100-லும், அதன் பின்னால் அந்த லாரி 80-லும் அந்த வண்டியின் பின் 5 - 8 மீட்டர் இடைவெளியில் பின்னால் 80-ல் எங்கள் வண்டியும் சென்று கொண்டிருந்தது. இப்பொடுது சரியாக பழவந்தாங்கல் சிக்னலில் சிகப்பு விழுந்தது. அந்த மாருதி ஸ்விஃப்ட் சிக்னல் அருகில் வரும்போது தான் சிகப்பு விழுந்தது. ஆனால் அவன் சிக்னலை கடந்து விட்டான். கடந்தவன் சென்றிருக்க வேண்டும். என்ன நினைத்தானோ / நினைக்க வைத்ததோ, சடாரென்று ப்ரேக் அடிக்க வண்டி செம கன்ட்ரோல் போல. அப்படியே நின்றது. இதை சற்றும் எதிர்பார்க்காத லாரியின் ஓட்டுனர், மாருதி ஸ்விஃப்ட் மிக அருகில் சென்று அதன் மேல் மோதாதவாறு தவிர்க்க வண்டியை வ்லது பக்கமாக ஒடித்தார். அப்பொழுது சாலைக்கு நடுவில் 2 அடி உயர சுவர் மேல் வண்டியின் வலது பின்புறம் பயங்கர சத்தத்துடன் மோதியது. இந்த மோதலில் வண்டி நிலை தடுமாறி வலது பக்கம் சாயத் தொடங்கியது. இப்பொழுது வண்டியின் இடது பக்க முன் மற்றும் பின் சக்கரங்கள் சுமார் 2 அடி உயரத்துக்கு உயர்ந்தது (அதாவது வண்டி வலது பக்கம் சாயத்துவங்கியது). ஓட்டுனர் சுதாரித்து சடாரென்று இடது பக்கம் ஒடிக்க ஷங்கர் படத்தில் வருவது போல தடாரென்று நிலைக்கு வந்தது. துணியை பிழிந்தால் எப்படி துணியின் முன் பக்கம் ஒரு பக்கமாகவும், பின் பக்கம் இன்னொரு பக்கமாகவும் முறுக்குமோ அப்படி விழும் முன் லாரி இருந்தது. இந்த களேபரத்தில் அந்த மாருதி ஸ்விஃப்ட் ஒரு கீரல் கூட விழாமல் எஸ் ஆனது. லாரி கடைசியில் நிலைக்கு வந்து ஓரமாக நின்றது. எனக்கு பக்கத்தில் மற்றொரு காரில் வந்த வடமாநிலத்தவர் அந்த ஓட்டுனரை பார்த்து இந்தியில் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டிருந்தார். நான் மாருதி ஸ்விஃப்ட் செய்த தவறு என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்கு அவர், 'இவன் சிக்னலுக்கு நிறுத்தியிருக்க வேண்டும் இல்லையா?' என்று கேட்டார். நியாயம் தான்.

அப்புறம் தான் தெரிந்தது, லாரி சுவற்றில் மோதிய இடத்தில் சிக்னலுக்காக ஒருத்தர் நின்று கொண்டிருந்தது. அவர் அந்த சுவற்றை தாண்டி வலது புறம் திரும்புவதற்காக நின்று கொண்டிருந்தார். லாரி சுவற்றில் மோதிய இடத்தில் சில அங்குல இடைவெளியில் தான் அவர் நின்றுகொண்டிருந்திருக்கிறார். அவர் மட்டும் ஒரு அடி பின்னே நின்றிருந்தாலும், சட்னி தான். அவரை பயங்கர அதிர்ஷ்டக்காரர் என்று சொல்லுவதா, என்ன?

இங்கே தவறுகள்,

1) இரவில் அந்த நேரத்தில் சிக்னல் தேவையா?

2) தேவை என்றால் காவல்துறை போதிய அளவில் மக்களுக்கு தெரியப்படுத்தியதா? (தெரியப்படுத்தியது)

3) தெரியப்படுத்தினாலும், அதை 'கடைபிடிக்கிறார்கள்' என்ரு குறைந்த பட்சம் உறுதியாவது செய்திருக்கிறதா போக்குவரத்து துறை? (ஆங்காங்கெ முக்கியமான சிக்னல்களில் கேமரா வைத்து அபராதம் விதித்கிருகிறார்கள் என்று தெரிந்தது).

4) இரவில் சிக்னலை மதிக்கத்தேவையில்லை என்பது 'உண்மையான' சென்னைவாசிக்கு தெரியும். (ஸோ, மாருதி ஸ்விஃப்ட்ம், லாரி ஓட்டுனரும் சென்னையை சேர்ந்தவர்களாக இருக்க முடியாது என்பது புரிகிறது).

5) மாருதி ஸ்விஃப்ட் 110-ல் சென்றது முதல் தவறு (டி.டி-யா? தெரியவில்லை).

6) சிக்னலை தாண்டியவன் அப்படியே போய் தொலைந்திருந்தால் பரவாயில்லை. தாண்டி சென்று சடாரென்று நிறுத்தியது பெருந்தவறு.

7) பின்னால் வந்த லாரி ஓட்டுனர் சிக்னலை மதிக்காமல் செல்ல முற்பட்டது அடுத்த தவறு.

இதில் பாவப்பட்டவர் என்று பார்த்தால் அங்கு சிக்னலுக்காக நின்றிருந்தவர் தான். அவரும் வேறு ஏதாவது சிக்னல் ஜம்ப் செய்திருப்பார் என்பது வேறு விஷயம். ஆனால், அன்று அவர் உயிர் பிழைத்திருந்தது, அவர் பயங்கர அதிர்ஷ்ட்டக்காரர் என்பதாலேயே. தவறு செய்தவர்கள் அந்த மாருதி ஸ்விஃப்டும், லாரியும். ஆனால், இவர்கள் சேஃப். பிழைத்தவர் அதிர்ச்சியில் வண்டியை அப்படியே போட்டுவிட்டு பேந்த பேந்த விழித்திருந்தார் (அவரால் வேறு என்ன செய்ய முடியும்?). இவர் மட்டும் என்னவாம். கோட்டை தான்டி அந்த சுவற்றுக்கு முன்னே தான் நின்று கொண்டிருந்தார், ரூல்ஸை மீறி. ஆனால், அதனால் தான் அவர் பிழைத்தார். ஒரு வேளை, ரூல்ஸ் பேசிக்கொண்டு கோட்டின் அருகிலேயே நின்றிருந்தால் சட்னி தான். இவையாவும் 15 முதல் 20 வினாடிகளுக்குள் நிகழ்ந்து விட்டது.

இதையெல்லாம் பார்த்து விட்டு எங்க காரின் ஓட்டுனர் டென்ஷனாகிவிட்டார். கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் பக்கவாட்டில் (புரியும் படி சொன்னால் பரங்கிமலை ஜோதி பக்கமாக) செல்லவேண்டியவர், ஒரு தொடர் பேருந்து அவர் காரை ஓவர் டேக் செய்ததால் அவரை அப்படியே ஒதுக்கி மேம்பாலம் ஏறவிட்டுவிட்டது. புலம்பி கொண்டே வீட்டில் இறக்கி விட்டார்.

மற்றொரு சம்பவம்

ஒரு முறை என் இரு சக்கர வண்டியில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தேன். வண்டியின் பின், என் சக ஊழியர் உட்கார்ந்து கொண்டிருந்தார். வண்டி விமான நிலையம் தாண்டியது. அப்பொழுது என் ஸ்பீடோமீட்டர் 60-ஐ காட்டியது. நான் பொதுவாக, முன் அனுபவம் காரணமாக, என்.எச்-ல் 60-ஐ தாண்ட மாட்டேன். அப்பொழுது சாலையில் இடது ஓரத்தில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அழுக்கேரிய உடையும் வெட்டாத தலை முடியும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல. நானும் எதுவும் யோசிக்காமல் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன். அவர் மிக அருகில், கிட்டே, சென்ற போது, சடாரென்று கையில் இருப்பதை எறிவதை போல ஓங்கினார். அவர் கையில் அரை செங்கல். ஒரு நிமிடம் வெலவெலத்து போய் வண்டியை கொஞ்சம் அசைத்தது. வண்டு ஒரு அரை அடிக்கு அவரை விட்டு விலகி நடு ரோட்டுக்கு சென்றது. நல்ல வேளையாக பக்கத்தில் எந்த வண்டியும் இல்லை. இருந்திருந்தால் கண்டிப்பாக ஏதாவது ஆகியிருக்கும். இத்தனை நடந்தும் பின்னால் இருந்தவன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததால் அவனுக்கு நடந்தது எதுவும் தெரியவில்லை.

பாத்து போங்கப்பா...

Comments

Anonymous said…
Sari ya sonninge srini ..
DHANS said…
இந்த விபத்தில் அனைவருமே தவறு செய்து உள்ளீர்கள், தங்கள் வண்டியில் ஓட்டுனர் உட்பட.

80 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதும் தவறுதானே மாநகர வேக கட்டுப்பாடு 40 கிலோமீட்டர் வேகம்தான்.

இவை அனைத்தும் சிக்னல் மதிக்கத்தவறியதால் தான் வந்தது. இவர்கள் இனிமேல் எந்த ஒரு சிக்னலிலும் கொஞ்சமாது பயத்துடன் நின்று செல்வார்கள் என்று நினைக்கிறேன்
PPattian said…
இதிலருந்து எனக்கு ஒண்ணு நல்லா தெரியுது..

விதி வலியது.. :)
அண்ணே முதல்ல எந்த இடம்னு புரியல...பரங்கிமலை ஜோதின்னவுடன் பளிச்சுன்னு புரிஞ்சது..ஹி..ஹி..ஹி
Indian said…
1) இரவில் அந்த நேரத்தில் சிக்னல் தேவையா?

-> கண்டிப்பாக

2) தேவை என்றால் காவல்துறை போதிய அளவில் மக்களுக்கு தெரியப்படுத்தியதா? (தெரியப்படுத்தியது)

-> போக்குவரத்து விதிகளே தெளிவில்லாமல் உள்ளது. இதில் காவல்துறையைச் சொல்லி என்ன பயன்?

3) தெரியப்படுத்தினாலும், அதை 'கடைபிடிக்கிறார்கள்' என்ரு குறைந்த பட்சம் உறுதியாவது செய்திருக்கிறதா போக்குவரத்து துறை? (ஆங்காங்கெ முக்கியமான சிக்னல்களில் கேமரா வைத்து அபராதம் விதித்கிருகிறார்கள் என்று தெரிந்தது).

-> எல்லா இடங்களிலும் காவலர்கள் கண்காணிக்க முடியாது. ஆனால் அவர்கள் எப்பொழுதும் நம்மைப் பிடிக்கக்கூடும் என்ற பயம் தேவை. கலிஃபோர்னியாவில் வண்டி ஓட்டும்போது இரவு 3 அல்லது 4 மணியானாலும் சாலைச்சந்திப்பில் நின்றுதான் செல்வேன்.

4) இரவில் சிக்னலை மதிக்கத்தேவையில்லை என்பது 'உண்மையான' சென்னைவாசிக்கு தெரியும். (ஸோ, மாருதி ஸ்விஃப்ட்ம், லாரி ஓட்டுனரும் சென்னையை சேர்ந்தவர்களாக இருக்க முடியாது என்பது புரிகிறது).

-> Bull shit. Sorry for the language.

அமெரிக்காவில், அட்லீஸ்ட் கலிஃபோர்னியாவில் ஓட்டுநர் உரிமத் தேர்வில் சொல்வது என்னவென்றால், விதிகளைப் பின்பற்றுங்கள், ஆனால் வலியுறுத்தாதீர்கள். அதாவது ஒருவர் சிவப்பு விளக்கை மீறிச் சென்றாலும், உங்களுக்குப் பச்சை விளக்கெரிந்தாலும், நின்று செல்லுங்கள் என்பதே.

நேரம் கிடைக்கும்போது கலிஃபோர்னியா ஓட்டுநர் கையேட்டைப் படித்துப் பாருங்கள்.

http://www.dmv.ca.gov/pubs/dl600.pdf
சீனு said…
//80 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதும் தவறுதானே மாநகர வேக கட்டுப்பாடு 40 கிலோமீட்டர் வேகம்தான்.//

Dhans,

தவறு தான். ஆனால், அது இரவு நேரம். சாலை காலியா இருக்கும் போது தவறில்லை, பாதுகாப்பா இருக்கிற வரைக்கும்... ஆனால் பிரச்சினை என்னவென்றால், சாலையில் ஆங்காங்கே வேகம் குறைக்க சாலையின் இரண்டு பக்கமும் தடுப்புகள் வைத்திருப்பார்கள். ஆனால், இப்பொழுதெல்லாம், அதன் அருகில் வரும்போது வண்டியின் வேகத்தை குறைக்காமல் ஒரு "S" கட்டிங் அடிக்கிறார்கள். ஓட்டுனருக்கு பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருப்பவருக்கு எப்பொழுதும் திக் திக் தான்.

//அண்ணே முதல்ல எந்த இடம்னு புரியல...பரங்கிமலை ஜோதின்னவுடன் பளிச்சுன்னு புரிஞ்சது..ஹி..ஹி..ஹி//

"சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்"

//நேரம் கிடைக்கும்போது கலிஃபோர்னியா ஓட்டுநர் கையேட்டைப் படித்துப் பாருங்கள்.//

சரிங்க Indian!!! ;)
சீனு said…
/////
//அண்ணே முதல்ல எந்த இடம்னு புரியல...பரங்கிமலை ஜோதின்னவுடன் பளிச்சுன்னு புரிஞ்சது..ஹி..ஹி..ஹி//

"சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்"
/////

அதாவது, எப்படி நாங்க கரீக்டா லேன் ட் மார்க் கொடுத்திருக்கோம் பாருங்கன்னு சொல்லவரேன்...
Unknown said…
சூப்பர்ரப்பூ
Unknown said…
சூப்பர்ரப்பூ
Unknown said…
சூப்பர்ரப்பூ
Unknown said…
இரவில் இது போல் செல்வது மிகவும் தவறு
நாமே சட்டங்களை மதிக்கணும் இல்லை என்றால் யவர் மதிபார்?
Anonymous said…
வீட்டில் உள்ளவர்களை மனதில் கொண்டால், வாகனம் ஓட்டும்போது கவனம் வரும்.
Anonymous said…
வீட்டு ஞாபகம் மனதில் இருந்தால் போதும். சாலைப்பயணம் சாகம் குறையும்.

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

27D