ஆர்ப்பரிக்கும் கடலலை - Fusion
அந்திவானத்தில் சூரியன் நிகழ்த்திய நிற வேடிக்கைக்கு போட்டியாய் மேடையில் வர்ண ஒளிவிளக்குகள் ஜாலம் காட்டிக் கொண்டிருந்தன. என்றும் கடல் அலையின் சத்தம் ஓங்கி இருக்கும் இடத்தில், மக்களின் சத்தத்தில் கடல் அடங்கி இருந்தது. இடம் கண்டுபிடித்து மண்ணில் கால் புதைய நடைக்கையிலேயே கணீரென ஒரு பெண் குரல் பாட்டு பாடியபடி இருந்தது. அடடா நேரமாச்சோ என்றபடி ஓடிப்போனால், அட அது ஒலிப்பெருக்கிச் சோதனை. ஆம், நீங்கள் நினைப்பது சரிதான் அது பெசன்ட் நகர் கடற்கரையில் 'சென்னை சங்கமத்தின்' நிறைவுநாள் நிகழ்ச்சியேதான். இனி நேரடி ரிப்போட். மாலை 6 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் எனச் சொல்லியிருந்தார்கள். சரியாக 6.10 க்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. அப்போதே அநேக முக்கிய விருந்தினர்களும் வந்துவிட்டிருந்தார்கள். இந்த பத்து நிமிட தாமதம் கூட ஒலி ஒளி அமைப்பு ஏற்பாடு தாமதத்தினால்தான். முதலில் 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் (அவர் தன் பெயரை குறிப்பிடவில்லை) சிறப்பு விருந்தினர் அமைச்சர் பரிதி இளம்வழுதி, இறையன்பு I.A.S, அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி, இந்திரகுமாரி, ராஜாமணி அம்மையார், மலேசிய அமைச்சர் ச...