Posts

Showing posts from January, 2011

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

Image
த னது நரைத்த மீசையைக் கம்பீரமாக நீவிக்கொண்டு - ''வண்டியா ஸார் வேணும்?'' என்று ஜட்காவுக்குள்ளே படுத்து இருந்த துரைசாமி மிகவும் மரியா தையாக வண்டியைவிட்டுக் கீழிறங்கி நின்றார்.  ''நீங்க எத்தனை வருஷமா ஜட்கா ஓட்டிக்கினு இருக்கீங்க?'' என்ற ஒரு கேள்விதான் நான் கேட்டேன். மனுஷன் ஒரு பேட்டிக்கு அல்ல - ஒரு சிறு கதைக்கு அல்ல - ஒரு நாவலுக்கு வேண்டிய விஷயங்களை ஓர் இலக்கியத்தில் வரும் குணச்சித்திரம் போன்று சொல்லஆரம் பித்துவிட்டார். அவ்வளவு சுவை யாக என்னால் அவற்றைத் திருப்பிச் சொல்ல முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ''அம்பது வருஷத்துக்கு மேலே ஆயிடுச்சி ஸார், நானும் ஜட்கா ஓட்ட ஆரம்பிச்சு'' என்று தொடங்கியவுடன், தொடக்கத்திலேயே உதடு பிதுக்கலுடன் ஒரு (ஜீணீusமீ) நிதானம். ''அப்போஎல்லாம் ஸார்'' என்று சொல்லி, ஒரு சிறு மௌனம்... அப்புறம் மீசை நீவல்... உதடுகளுக்குள் ஓர் ஏலாமைச் சிரிப்பு... பின்னர் ஒரு பெருமூச்சு! ''ம்... இப்பத்தானே டாக்சிங்க, காருங்க எல்லாம் வந்துடுச்சு. இந்தத் தொயிலுக்கு மரியாதியே பூடிச்சு ஸார்... அந்தக் காலத்திலே வண்டிகளு...