Posts

Showing posts from August, 2007

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு..

Image
என்றைக்கு: ஞாயிறு 26-ஆகஸ்ட்-2007 எப்போ: மாலை 5 முதல் 7 வரை எங்கே: வுட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னின் விழாக்களுக்கான ஹால்(Conference Hall), கதீட்ரல் ரோடு நிகழ்ச்சி நிரல்: * பதிவர் பட்டறையின் அடுத்த நகர்வு குறித்து விவாதித்தல் - மா.சிவகுமார் * டி.எம்.ஐ நிறுவனத்தின் பணிகள் குறித்த அறிமுகம் - டி.எம்.ஐ சார்பாக நண்பர்கள் சொர்ணம் சங்கரபாண்டி மற்றும் சுந்தரவடிவேல் * மேலும், இணையத்தமிழ் வளர்ச்சியில் முக்கியமான பங்குக்கு சொந்தக்காரரான நண்பர் சுரதா யாழ்வாணனும் இந்த சந்திப்பில் கலந்து கொள்கிறார். தொடர்புக்கு: மா.சிவகுமார்(98840 70556)- பாலபாரதி (99402 03132) மிக குறைந்த இடைவெளியில் அறிவிக்க நேர்ந்துவிட்டது.. நண்பர்களின் வருகையும் இடமும் உறுதி செய்ய நாளாகி விட்டது.. அல்லாரும் மறக்காம வந்துருங்கபா.. மேப் :

சென்னை நினைவுகள் - உண்மைத்தமிழன் (விருந்தினர் பத்தி)

1995-ம் ஆண்டு ஜனவரி 1. என் வாழ்க்கையில் நடந்த திருப்பங்களில் முதன்மையானது சென்னையில் கால் பதித்த இந்த நாள்தான். சென்னையில் நான் பார்க்கச் சென்று மீள முடியாமல் மூழ்கியது கன்னிமாரா நூலகத்தில்தான். திண்டுக்கல், மதுரை என்று வாசம் செய்த ஊர்களிலெல்லாம் நூலகங்களை இரண்டாவது வீடாக வைத்திருந்த நான் சென்னைக்கு வந்ததும் முதல் ஞாயிற்றுக்கிழமை கன்னிமாராவில்தான் கழித்தேன். எத்தனை, எத்தனை புத்தகங்கள்? படிக்க நேரம்தான் கிடைக்கவில்லை. இப்போதும் தொடர்ந்து பத்து வருடங்களாக அந்நூலகத்தின் உறுப்பினராக இருந்து வருகிறேன். தொடர்ந்து சென்னையை வலம் வர ஆரம்பித்தேன் புது மாப்பிள்ளை, பொண்ணுடன் ஊர், ஊராகச் சென்று விருந்து சாப்பிடுவானே அது மாதிரி.. எப்போதும் எனக்குப் பிரியத்திற்குரிய சினிமா தியேட்டர்களை, சாயந்தர வேளைகளில் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தேன். தமிழ்ப் படங்களைவிட ஆங்கிலப் படங்களே எனக்கு அதிகம் பிடித்தன. தேவி, சத்யம், ஆனந்த் மூன்று காம்ப்ளக்ஸ்களிலும் ஒரு விடுமுறை நாளில் நான்கு ஷோவும் பார்த்துவிட்டுத்தான் சைக்கிளில் அசோக் நகர் சென்றடைவேன். அன்றைக்கு எனக்கு இருந்த சினிமா ஆசையை வெறியாக மாற்றி என்னை வெறிநாய் கணக்

சிங்காரச் சென்னை - தமிழ்நதி (விருந்தினர் பத்தி)

எழுத்துக்கும் எனக்குமிடையில் ஒருவித இடைவெளி விழுந்துவிட்டதை,தொடர்பறுந்த நிலையில் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில்,சென்னைப் பட்டினம் பற்றி எழுதும்படி பொன்ஸ் கேட்டிருக்கிறார். சென்னையைப் பற்றி ஏற்கெனவே இரண்டு தடவைகள் எழுதிவிட்டேன். அதன் சாயல் இந்தப் பதிவிலும் இடம்பெறக்கூடும் என்ற அச்சம் மேலிடுகின்றபோதிலும் பிரியத்திற்குரியவர்கள் கேட்கும்போது மறுக்க முடியவில்லை. இந்த வரியை எழுதும்போது அடுத்த வரி என்ன எழுதப்போகிறேன் என்று எனக்குத் தெரியாது. எந்த நகரமாக இருப்பினும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் அப்போதைய மனோநிலையைப் பொறுத்தே பார்வைகளும் அமையும். மரணங்கள் மலிந்த பூமியில் சவப்பெட்டிகள் செய்பவன் மகிழ்ச்சியாக இருப்பதைப் போலொத்ததெனும் குரூரமான உதாரணத்தையே இங்கும் சுட்டவேண்டியிருக்கிறது. இரக்கமேயில்லாமல் வெயில் எறித்து எரிக்கும் கொடுங்கோடை நாட்களில் சென்னையைச் சபித்திருக்கிறோம். அதிலும் க்குவரத்து நெரிசலுள் மாட்டிக்கொள்ள நேரும்போது உடல் கொதித்துப் போகிறது. மனம் கோபத்தினால் செய்யப்பட்டதாகிவிடுகிறது. உரசினால் பற்றிக்கொள்ளுமோ என்றஞ்சுமளவிற்கு உடல்கள் வெயிலை வேண்டுமளவிற்குக் க

சென்னை/ பக்கத்துவீட்டு ஜன்னல் புன்னகை - த. அகிலன் (விருந்தினர் பத்தி)

சென்னை என்கிற வார்த்தை எனக்குத் தெரிகிறபோது. ஒரு 8 வயதிருக்கும். கட்டுங்கடங்காமல் காட்டுக்குள் குகைகளிற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் விசத்திரக்குள்ளர்களையும், முகமூடி வீரர் மாயாவியையும் அவரது காதலி டயானாவையும் ராணி காமிக்ஸ் புத்தகத்தில் புரட்டி முடிந்து ஆவலடங்காமல் கடைசி மட்டைவரை படித்துவிடுகிறபோது எனக்கு தெரிந்த வார்த்தை சென்னை- 600018 என்று நினைக்கிறேன். பிறகு சென்னை இந்திய புத்தகங்கள் வழியாகவும் சினிமா வழியாகவும் மிகவும் பரிச்சயமான பக்கத்து வீட்டு ஜன்னலில் ஒளிர்கிற புன்னகை போலாகிவிட்டது. நான் சென்னையில் வசிக்கநேரிடும் என்று அப்போதெல்லாம் நான் நினைத்து பார்த்தது கிடையாது. இப்போது நான் ஒரு சென்னை வாசி. அதன் பிரமிப்புக்களை எல்லாம்தாண்டி அதன் வாழ்வியலுக்குள் என்னை நுழைத்துக்கொண்டு விட்ட சராசரி நகரவாசியான பின்பு எனது கற்பனையில் இருந்த சென்னை கொஞ்ச இடங்களில் தகர்ந்து போய்விட்டிருக்கிறது. கொஞ்ச இடங்களில் இன்னும் ஒரு பெரிய நாற்காலி போட்டு உட்கார்ந்து கொள்கிறது. ஒரு திசை தெரியாப் பயணியைப்போல் நான் நுழைந்த ஆரம்பங்களில் சென்னை என்னை திக்குமுக்காட வைத்திருக்கிறது. இந்தப் பெருநகரின் வாய் எங்கே

சென்னைக்குப் பொறந்த நாளு

Image
168 ஆண்டுகளுக்கு முன்பாக, சென்னைப்பட்டினமாக உருவெடுத்த தினம் இன்று.. சென்னை தினத்தை முன்னிட்டு லலித் கலா அகாதமியுடன் இணைந்து இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவுக் களஞ்சியம் என்ற பெயரில் ஒரு கண்காட்சியை நடத்துகிறது. இக்கண்காட்சி வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெற இருக்கிறது. லலித் கலா அகாதமி சேர்மன் பேராசிரியர் பாஸ்கரன் குத்துவிளக்கேற்றி நிகழ்வைத் துவங்கிவைத்தார். பல்வேறு கால கட்டத்தைச் சேர்ந்த இந்திய ரூபாய்களையும் காசுகளையும் இங்கே காட்சிப் படுத்தி உள்ளனர் கள்ள நோட்டுகளை அடையாளம் காட்டும் ரசாயன பயிற்சிகளையும் இலவசமாக செய்து காட்டுகின்றனர் பார்வை பறிபோன பிறகு ஓவியர் மனோகர் வரைந்த சென்னை குறித்த சித்திரங்களையும் காட்சிப் படுத்தி யுள்ளனர் சென்னை தினம் குறித்த பிற தளங்கள். 1. விருபாவின் சென்னை வாரம் 2. சென்னை தின நிகழ்வுகள்

புறநகர் போக்குவரத்து நிலையம் - சில படங்கள்

Image
சமீபத்தில் புறநகர் போக்குவரத்து நிலையம் சென்றிருந்தபோது எடுத்த சில படங்கள் எல்லாம் சரி.. இந்த அம்பேத்கார் எந்த இடத்தில் இருக்கார்னு சொல்லுங்க பார்ப்போம்:

பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு!

சென்னையின் முக்கியமான ஷாப்பிங் ஏரியா என்று சொல்ல வேண்டுமானால் அது டி.நகர் என்று தான் சொல்வோம், ஆனால் அங்க போனால் நம்மை வரவேற்கும் முக்கிய பிரச்சனை டிராபிக் அடுத்த விசயம் பார்க்கிங். இந்த பார்க்கிங் பிரச்சனைக்கு ஒரு தீர்வை நம்ம சென்னையை சேர்ந்த பொறியாளர் கண்பிடித்துவிட்டார் என்றே சொல்லலாம்! இன்று அதன் செலவு அதிகமாக இருக்கலாம் கொஞ்சம் காலத்தில் டெக்னாலஜி வளர்ச்சியால் மேலும் குறைந்த விலைக்கு அது வரக்கூடும். கீழே உள்ள வீடியோவை பாருங்க மேட்டர் புரியும்!

சென்னை வலைப்பதிவர் பட்டறை - அப்டேட் 2!

Image
விக்கி நன்றியுரை கூற, பாலாபாய் பட்டறையின் ஒருங்கிணைப்பாளர்களை அறிமுகப்படித்தி வைத்தார் சென்னை வலைப்பதிவர் பட்டறை வெற்றிகரமாகவும், சிறப்பாக நடந்து முடிந்தது!!!

சென்னை வலைப்பதிவர் பட்டறை - அப்டேட்!

Image
சென்னை வலைப்பதிவர் பட்டறை தற்பொழுது நிலவரப்படி சுமார் 400க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்!!! முதல் மாடியில் ஒரு அரங்கில் பினாத்தலார் flash பற்றி பினாத்திக்கிட்டு இருக்கார்!!! சிங்கையிலிருந்து குழலி தொலைப்பேசியில் நிகழ்ச்சியின் நிலவரங்களை கேட்டறிந்தார் ;) முதன்மை அரங்கில் இணையத்தில் இன்றைய நுட்பமும் நாளைய தொழிலும் என்ற தலைப்பில் அருண்குமார் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்! இட்லிவடை முதன்மை அரங்கில் சைலண்டா ரிப்போர்ட் செய்வதாக செய்தி வெளியாகியுள்ளது! அதை தொடர்ந்து பல குழுக்கள் இட்லிவடையை கையும் மடிக்கணினியுமாய் பிடிக்க ரெடியாகி வருவதாக கேள்வி ;)