Posts

Showing posts from 2007

சென்னை படம் காட்டறாங்க...

Image
சென்னை பல விசயங்களுக்கு நல்லதா பட்டாலும், பெரும்பாலும் வெளியே எங்கயாவது போகனும் என்றால் டிராபிக் என்ற கொடுமையை சந்திக்க வேண்டியுள்ளது!!! முக்கியமா கத்திப்பாரா ஜங்ஷன், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அடையாறு & திருவான்மியூர் ஏரியா பக்க போனும் என்றாலே ஒரு அலர்ஜி போல ஆயிடுச்சு!!! நான் பெரும்பாலும் Peak hoursல் வெளியே செல்வதை தவிர்த்துவிடுவேன், வேற வழியே இல்லை என்றால் குறுக்குவழி, ஒண்டிச்சந்து என பல தேடி சேரவேண்டிய இடத்தை அடைவது வழக்கம். சிஃபி.காம் ஒரு சிறப்பு இணைய தளம் அமைத்திருக்காங்க, இது போன்ற ட்ராபிக் பிரச்சனையை அவாய்டு செய்து செல்ல... இப்பொழுது சென்னையின் மூன்று இடங்களில் லைவ் வீடியோ இணைய தளம் மூலம் காண்பிக்கப்படுது! (Traffic Live video feed- Kathipara, Kilpauk, Thiruvanmiyur), இனி மேலும் பல இடங்கள் இதில் சேரலாம் என்று நினைக்கிறேன்! இந்த இணையத்தை பயன்படுத்தி எங்க ட்ராபிக் இருக்கு, எங்க இல்லை என்பதை அறிந்து அதற்கேற்றார் போல உங்கள் பயனத்தை திட்டமிட உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். லைவ் கேமேரா Feeds பார்க்க இங்கே சொடுக்கவும் . முதலில் படங்கள் வர கொஞ்சம் தாமதமாகும் அட்ஜஸ்ட் பண்ணிக்க்க

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு..

Image
என்றைக்கு: ஞாயிறு 26-ஆகஸ்ட்-2007 எப்போ: மாலை 5 முதல் 7 வரை எங்கே: வுட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னின் விழாக்களுக்கான ஹால்(Conference Hall), கதீட்ரல் ரோடு நிகழ்ச்சி நிரல்: * பதிவர் பட்டறையின் அடுத்த நகர்வு குறித்து விவாதித்தல் - மா.சிவகுமார் * டி.எம்.ஐ நிறுவனத்தின் பணிகள் குறித்த அறிமுகம் - டி.எம்.ஐ சார்பாக நண்பர்கள் சொர்ணம் சங்கரபாண்டி மற்றும் சுந்தரவடிவேல் * மேலும், இணையத்தமிழ் வளர்ச்சியில் முக்கியமான பங்குக்கு சொந்தக்காரரான நண்பர் சுரதா யாழ்வாணனும் இந்த சந்திப்பில் கலந்து கொள்கிறார். தொடர்புக்கு: மா.சிவகுமார்(98840 70556)- பாலபாரதி (99402 03132) மிக குறைந்த இடைவெளியில் அறிவிக்க நேர்ந்துவிட்டது.. நண்பர்களின் வருகையும் இடமும் உறுதி செய்ய நாளாகி விட்டது.. அல்லாரும் மறக்காம வந்துருங்கபா.. மேப் :

சென்னை நினைவுகள் - உண்மைத்தமிழன் (விருந்தினர் பத்தி)

1995-ம் ஆண்டு ஜனவரி 1. என் வாழ்க்கையில் நடந்த திருப்பங்களில் முதன்மையானது சென்னையில் கால் பதித்த இந்த நாள்தான். சென்னையில் நான் பார்க்கச் சென்று மீள முடியாமல் மூழ்கியது கன்னிமாரா நூலகத்தில்தான். திண்டுக்கல், மதுரை என்று வாசம் செய்த ஊர்களிலெல்லாம் நூலகங்களை இரண்டாவது வீடாக வைத்திருந்த நான் சென்னைக்கு வந்ததும் முதல் ஞாயிற்றுக்கிழமை கன்னிமாராவில்தான் கழித்தேன். எத்தனை, எத்தனை புத்தகங்கள்? படிக்க நேரம்தான் கிடைக்கவில்லை. இப்போதும் தொடர்ந்து பத்து வருடங்களாக அந்நூலகத்தின் உறுப்பினராக இருந்து வருகிறேன். தொடர்ந்து சென்னையை வலம் வர ஆரம்பித்தேன் புது மாப்பிள்ளை, பொண்ணுடன் ஊர், ஊராகச் சென்று விருந்து சாப்பிடுவானே அது மாதிரி.. எப்போதும் எனக்குப் பிரியத்திற்குரிய சினிமா தியேட்டர்களை, சாயந்தர வேளைகளில் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தேன். தமிழ்ப் படங்களைவிட ஆங்கிலப் படங்களே எனக்கு அதிகம் பிடித்தன. தேவி, சத்யம், ஆனந்த் மூன்று காம்ப்ளக்ஸ்களிலும் ஒரு விடுமுறை நாளில் நான்கு ஷோவும் பார்த்துவிட்டுத்தான் சைக்கிளில் அசோக் நகர் சென்றடைவேன். அன்றைக்கு எனக்கு இருந்த சினிமா ஆசையை வெறியாக மாற்றி என்னை வெறிநாய் கணக்

சிங்காரச் சென்னை - தமிழ்நதி (விருந்தினர் பத்தி)

எழுத்துக்கும் எனக்குமிடையில் ஒருவித இடைவெளி விழுந்துவிட்டதை,தொடர்பறுந்த நிலையில் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில்,சென்னைப் பட்டினம் பற்றி எழுதும்படி பொன்ஸ் கேட்டிருக்கிறார். சென்னையைப் பற்றி ஏற்கெனவே இரண்டு தடவைகள் எழுதிவிட்டேன். அதன் சாயல் இந்தப் பதிவிலும் இடம்பெறக்கூடும் என்ற அச்சம் மேலிடுகின்றபோதிலும் பிரியத்திற்குரியவர்கள் கேட்கும்போது மறுக்க முடியவில்லை. இந்த வரியை எழுதும்போது அடுத்த வரி என்ன எழுதப்போகிறேன் என்று எனக்குத் தெரியாது. எந்த நகரமாக இருப்பினும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் அப்போதைய மனோநிலையைப் பொறுத்தே பார்வைகளும் அமையும். மரணங்கள் மலிந்த பூமியில் சவப்பெட்டிகள் செய்பவன் மகிழ்ச்சியாக இருப்பதைப் போலொத்ததெனும் குரூரமான உதாரணத்தையே இங்கும் சுட்டவேண்டியிருக்கிறது. இரக்கமேயில்லாமல் வெயில் எறித்து எரிக்கும் கொடுங்கோடை நாட்களில் சென்னையைச் சபித்திருக்கிறோம். அதிலும் க்குவரத்து நெரிசலுள் மாட்டிக்கொள்ள நேரும்போது உடல் கொதித்துப் போகிறது. மனம் கோபத்தினால் செய்யப்பட்டதாகிவிடுகிறது. உரசினால் பற்றிக்கொள்ளுமோ என்றஞ்சுமளவிற்கு உடல்கள் வெயிலை வேண்டுமளவிற்குக் க

சென்னை/ பக்கத்துவீட்டு ஜன்னல் புன்னகை - த. அகிலன் (விருந்தினர் பத்தி)

சென்னை என்கிற வார்த்தை எனக்குத் தெரிகிறபோது. ஒரு 8 வயதிருக்கும். கட்டுங்கடங்காமல் காட்டுக்குள் குகைகளிற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் விசத்திரக்குள்ளர்களையும், முகமூடி வீரர் மாயாவியையும் அவரது காதலி டயானாவையும் ராணி காமிக்ஸ் புத்தகத்தில் புரட்டி முடிந்து ஆவலடங்காமல் கடைசி மட்டைவரை படித்துவிடுகிறபோது எனக்கு தெரிந்த வார்த்தை சென்னை- 600018 என்று நினைக்கிறேன். பிறகு சென்னை இந்திய புத்தகங்கள் வழியாகவும் சினிமா வழியாகவும் மிகவும் பரிச்சயமான பக்கத்து வீட்டு ஜன்னலில் ஒளிர்கிற புன்னகை போலாகிவிட்டது. நான் சென்னையில் வசிக்கநேரிடும் என்று அப்போதெல்லாம் நான் நினைத்து பார்த்தது கிடையாது. இப்போது நான் ஒரு சென்னை வாசி. அதன் பிரமிப்புக்களை எல்லாம்தாண்டி அதன் வாழ்வியலுக்குள் என்னை நுழைத்துக்கொண்டு விட்ட சராசரி நகரவாசியான பின்பு எனது கற்பனையில் இருந்த சென்னை கொஞ்ச இடங்களில் தகர்ந்து போய்விட்டிருக்கிறது. கொஞ்ச இடங்களில் இன்னும் ஒரு பெரிய நாற்காலி போட்டு உட்கார்ந்து கொள்கிறது. ஒரு திசை தெரியாப் பயணியைப்போல் நான் நுழைந்த ஆரம்பங்களில் சென்னை என்னை திக்குமுக்காட வைத்திருக்கிறது. இந்தப் பெருநகரின் வாய் எங்கே

சென்னைக்குப் பொறந்த நாளு

Image
168 ஆண்டுகளுக்கு முன்பாக, சென்னைப்பட்டினமாக உருவெடுத்த தினம் இன்று.. சென்னை தினத்தை முன்னிட்டு லலித் கலா அகாதமியுடன் இணைந்து இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவுக் களஞ்சியம் என்ற பெயரில் ஒரு கண்காட்சியை நடத்துகிறது. இக்கண்காட்சி வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெற இருக்கிறது. லலித் கலா அகாதமி சேர்மன் பேராசிரியர் பாஸ்கரன் குத்துவிளக்கேற்றி நிகழ்வைத் துவங்கிவைத்தார். பல்வேறு கால கட்டத்தைச் சேர்ந்த இந்திய ரூபாய்களையும் காசுகளையும் இங்கே காட்சிப் படுத்தி உள்ளனர் கள்ள நோட்டுகளை அடையாளம் காட்டும் ரசாயன பயிற்சிகளையும் இலவசமாக செய்து காட்டுகின்றனர் பார்வை பறிபோன பிறகு ஓவியர் மனோகர் வரைந்த சென்னை குறித்த சித்திரங்களையும் காட்சிப் படுத்தி யுள்ளனர் சென்னை தினம் குறித்த பிற தளங்கள். 1. விருபாவின் சென்னை வாரம் 2. சென்னை தின நிகழ்வுகள்

புறநகர் போக்குவரத்து நிலையம் - சில படங்கள்

Image
சமீபத்தில் புறநகர் போக்குவரத்து நிலையம் சென்றிருந்தபோது எடுத்த சில படங்கள் எல்லாம் சரி.. இந்த அம்பேத்கார் எந்த இடத்தில் இருக்கார்னு சொல்லுங்க பார்ப்போம்:

பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு!

சென்னையின் முக்கியமான ஷாப்பிங் ஏரியா என்று சொல்ல வேண்டுமானால் அது டி.நகர் என்று தான் சொல்வோம், ஆனால் அங்க போனால் நம்மை வரவேற்கும் முக்கிய பிரச்சனை டிராபிக் அடுத்த விசயம் பார்க்கிங். இந்த பார்க்கிங் பிரச்சனைக்கு ஒரு தீர்வை நம்ம சென்னையை சேர்ந்த பொறியாளர் கண்பிடித்துவிட்டார் என்றே சொல்லலாம்! இன்று அதன் செலவு அதிகமாக இருக்கலாம் கொஞ்சம் காலத்தில் டெக்னாலஜி வளர்ச்சியால் மேலும் குறைந்த விலைக்கு அது வரக்கூடும். கீழே உள்ள வீடியோவை பாருங்க மேட்டர் புரியும்!

சென்னை வலைப்பதிவர் பட்டறை - அப்டேட் 2!

Image
விக்கி நன்றியுரை கூற, பாலாபாய் பட்டறையின் ஒருங்கிணைப்பாளர்களை அறிமுகப்படித்தி வைத்தார் சென்னை வலைப்பதிவர் பட்டறை வெற்றிகரமாகவும், சிறப்பாக நடந்து முடிந்தது!!!

சென்னை வலைப்பதிவர் பட்டறை - அப்டேட்!

Image
சென்னை வலைப்பதிவர் பட்டறை தற்பொழுது நிலவரப்படி சுமார் 400க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்!!! முதல் மாடியில் ஒரு அரங்கில் பினாத்தலார் flash பற்றி பினாத்திக்கிட்டு இருக்கார்!!! சிங்கையிலிருந்து குழலி தொலைப்பேசியில் நிகழ்ச்சியின் நிலவரங்களை கேட்டறிந்தார் ;) முதன்மை அரங்கில் இணையத்தில் இன்றைய நுட்பமும் நாளைய தொழிலும் என்ற தலைப்பில் அருண்குமார் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்! இட்லிவடை முதன்மை அரங்கில் சைலண்டா ரிப்போர்ட் செய்வதாக செய்தி வெளியாகியுள்ளது! அதை தொடர்ந்து பல குழுக்கள் இட்லிவடையை கையும் மடிக்கணினியுமாய் பிடிக்க ரெடியாகி வருவதாக கேள்வி ;)

சாகரன் நினைவு மலர்

சாகரன் என்ற கல்யாணின் நினைவாக அச்சிடப்பட்ட நினைவு மலரின் பிடிஎஃப் வடிவம் . தொகுத்தளித்த பாலபாரதிக்கு நன்றிகள். பிடிஎஃப் செய்த சிந்தாநதிக்கு நன்றிகள்.

கோவை பதிவர் முகாம்: முடிந்தது.

Image
சிரில் அலெக்ஸ் உடன் நடந்த வீடியோ கான்பிரஸ்... நல்ல படியாக நிகழ்வு முடிந்தது. விரிவாக நண்பர்கள் பதிவு செய்வார்கள் என்று எதிர் பார்க்கிறேன்.

கோவை சந்திப்பு - 1

கோவை வலைப்பதிவர் பட்டறை ஆரம்பித்து விட்டது. அறிமுகங்கள் முடிந்து கூட்டம் களை கட்டுகிறது. --மா சிவகுமார் மே 20, 2007 - 10.40 am வந்திருப்பவர்கள (இது வரை) ் 1. பாலபாரதி 2. மா சிவகுமார் 3. வினையூக்கி 4. மோகன் தாஸ் 5. சென்ஷி 6. பாமரன் 7. முகுந்தராஜ் 8. உண்மைத் தமிழன் 9. எஸ் பி வி சுப்பையா 10. கோவை ரவி 11. பி வின்சென்டு 12. தாமோதரன் சந்துரு 13. சேகுவேரா 14. ஜெயகுமார் 15. லிவிங் ஸ்மைல் வித்யா 16. ராஜா வனஜ 17. பாரதி ராஜா

தினகரன் வசந்தம்: பதிவர் சந்திப்பு செய்தி

Image
நன்றி:- லக்கிலுக்

ஒரு வழிப்பாதை

கிண்டி ரயில் நிலையம் அருகில் பாலம் ஏறி இறங்கி, போராடி சர்தார் படேல் சாலையில் திரும்ப வலது புறம் ஒதுங்கினால் செல்லம்மாள் கல்லூரி அருகில் வலது புறம் திரும்ப முடியாது என்று பலகை. சில நாட்கள் முன்பு நாளிதழில் படித்திருந்த ஒரு வழிப்பாதை ஏற்பாடு மங்கலாக நினைவு வந்தது. கிண்டியிலிருந்து அடையாறு செல்ல வேண்டுமானால் செல்லம்மாள் கல்லூரியின் எதிரில் காத்திருந்து திரும்பாமல், ஒரு வழிப்பாதையாகி விட்ட அடுத்த பகுதியில் சின்னமலை வரை போக வேண்டும். சின்ன மலையிலிருந்து வலது புறம் திரும்பி ராஜ்பவன் நோக்கிப் போகும் போது சைதாப்பேட்டையிலிருந்து கிண்டி போக வேண்டிய வண்டிகளும் சேர்ந்து கொள்கின்றன. ராஜ்பவன் எதிரில் இடது புறம் திரும்பி அடையாறு. வலது புறம் திரும்பி சர்தார் படேல் சாலையிலிருந்து வரும் வாகனங்களுடன் சேர்ந்து கொண்டு வேளச்சேரி சாலைக்குப் போக வேண்டும் வேளச்சேரி நோக்கிப் போக வேண்டியவர்கள். சில கிலோமீட்டர்கள் கூடுதலாக சுற்ற வேண்டியிருந்தாலும், எங்கும் தேங்காமல், காத்திருக்காமல் நான்கு சாலை நிறுத்தங்களை முற்றிலும் ஒழித்து விட்ட இந்த ஏற்பாடு ஏதோ கனவுலகம் போலத் தோன்றியது. வேளச்சேரியிலிருந்து வந்து அடையாறு போக

மக்கள் தொலைக்காட்சியில் சந்திப்பு செய்தி! -வீடியோ

தகவல் தந்த அண்ணன் வடூவூராருக்கு நன்றி! நன்றி :- மக்கள் தொலைக்காட்சி 22ஆம் தேதி சென்னை வலைபதிவர் சந்திப்பு பற்றிய மற்ற பதிவுகள்: 1. அபி அப்பா 2. இட்லிவடை 3. மா.சிவகுமார் 4. மிதக்கும்வெளி 5. லக்கிலுக் 6. பொன்ஸ் 7. வடுவூர் குமார் 8. பாலபாரதி 9. ஓசை செல்லா

பதிவர் சந்திப்பு - சில பதிவுகள்

கண்ணதாசன் பதிப்பகம் என்ற பலகை வைத்திருந்த தெருவினுள் நுழைந்து வண்டியை பூங்காவின் பின் வாசலில் நிறுத்தி விட்டு நுழைந்தேன். வெயில் இன்னும் தாழ்ந்திருக்கவில்லை. சிமென்டு பாவியிருந்த நடைபாதை வழியே சுற்றிக் கொண்டு வந்தால், தூரத்தில் பளபளக்கும் மொட்டைத் தலை தென்பட பாலபாரதியின் இருப்புப் பளிச்சிட்டது. பாலா, சிறில் அலெக்ஸ், உண்மைத் தமிழன் உட்கார்ந்திருந்தார்கள். வழக்கமான இடத்துக்குச் சற்று தள்ளி நிழலில் இருந்தார்கள். சிறில், இப்போது பழகிப் போனபடி, உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். (அருகிலிருந்த நிழல் மேடையில் இன்னொரு குழுவின் சந்திப்பு நடந்து கொண்டிருந்தது.) வெயில் குறையும் வரை இங்குதான் உட்கார வேண்டும். பாலா சரியாக மூன்றரை மணிக்கு சந்திப்பை ஆரம்பித்து விட்டார். தனியாகப் பேசிக் கொண்டிருந்த போஸ்டன் பாலா, விக்கி, ஐகாரஸ் பிரகாஷும் சேர்ந்து கொள்ள அதற்குள் ராமகி ஐயா, தருமி ஐயா, பாலராஜன் கீதா, வந்து சேர்ந்து விட வட்டம் பெரிதாகியிருந்தது. அப்போதே பத்து பேருக்கு கிட்ட சேர்ந்து விட்டோம் என்று நினைவு. முதலில் சாகரனுக்கு அஞ்சலி செலுத்தும் சிறுமலர் வெளியீடு, நான் கொடுக்க பாலராஜன் கீதா பெற்றுக் கொண்டார்.

சென்னை சந்திப்பு - 22 ஏப்ரல் - 2

சென்னபட்டினம் குழுவின் மூலம் இதுவரை மூன்று வலைபதிவர் சந்திப்புகள் நிகழ்த்தியுள்ளோம். நாகேஸ்வர ராவ் பூங்காவில் ஆகஸ்ட் 2006 இல் முதல் சந்திப்பு நிகழ்ந்த போது, முத்து தமிழினி, முத்துகுமரன், பரஞ்சோதி, வரவனையான் உள்ளிட்ட வெளியூர்/வெளிநாடு வாழ் பதிவர்கள் கலந்து கொண்டார்கள். அனானி பின்னூட்டங்களால் உருவாகிக் கொண்டிருந்த பிரச்சனை பற்றிய விவாதங்களின் முடிவில் அனானி முன்னேற்றக் கழகம் உருவாக முதலடி இந்தச் சந்திப்பில் தான் எடுத்து வைக்கப்பட்டது. நவம்பர் 2006இல் நிகழ்ந்த அடுத்த சந்திப்பு, தேனாம்பேட்டை பார்வதி ஹாலில் நிகழ்ந்தது. (வி)யெஸ்கே, அகிலன், நிலவன், தமிழ்நதி போன்ற வெளிநாடுவாழ் பதிவர்கள் தவிரவும் பல புதிய பதிவர்கள் கலந்து கொண்ட சந்திப்பு அது. தமிழ்வலைபதிவர் உதவிக் குழு இந்தச் சந்திப்பில் உருவம் பெற்றது. தற்போது புதிய பதிவர்களுக்கு உதவியாக செயல்பட்டு வரும் இந்தக் குழுவில் சென்னை பதிவர்கள் மட்டுமல்லாமல் உலகளாவிய பதிவர்கள் பலரும் இருந்து உதவி வருகின்றனர். டிசம்பர் 2006 இல், நடேசன் பார்க்கில் திரு அவர்களின் சென்னை வருகையை ஒட்டி நடைபெற்றது அடுத்த சந்திப்பு. இந்தச் சந்திப்பில் நிகழ்ந்த கருத்துப் பரி

சென்னை சந்திப்பு - 22 ஏப்ரல் - 1

போன ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ம் தேதி நடேசன் பூங்காவில் ஒரு வலைப் பதிவர் சந்திப்பு நடந்தது. கவிஞர் மதுமிதாவைச் சந்திக்க சில பதிவர்கள் போயிருந்தோம். அருள் குமார், வீரமணி, ஜெய்சங்கர், நான், பாலபாரதி, ப்ரியன், சிங் ஜெயகுமார் எல்லோரும் இந்தச் சந்திப்பு முடிந்ததும் அருள் குமாரின் தூண்டுதலால் இரு சக்கர வண்டிகளில் மாமல்லபுரம் போக முடிவு செய்தோம். அந்தப் பயண விபரங்களை ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொருவர் எழுதி பதிவு செய்தோம். அதைப் படித்த நண்பர்கள் இது போல சென்னையின் வெவ்வேறு பகுதிகளை படம் பிடித்து போடலாம், சென்னை குறித்து எழுத ஒரு கூட்டு பதிவு உருவாக்கலாம் என்று சொன்னார்கள். (சொன்னது மதி கந்தசாமி). பாலபாரதி, பொன்ஸ், அருள் குமார், ஜெய்சங்கர், பிரியன் இவர்களுடன் என்னையும் சேர்த்து ஒரு கூட்டு வலைப்பதிவை உருவாக்கி விட்டார்கள். சென்னப் பட்டிணம் என்று இந்தக் குழுவினர் சேர்ந்து செயல்பட பல திட்டங்களை சொல்வார் பாலபாரதி. அவரது புத்தகக் கடையில் எல்லோரும் சந்தித்தோம். ஒருவர் ஒரு நாள் வீதம் வாரம் ஆறு பதிவுகள் என்று நான் சொன்ன அதி ஆர்வத் திட்டத்தைக் கைவிட்டு மாதம் ஆறு பதிவுகளாவது போடுவது என்று குறைந்த பட்ச செயல் திட்

திருக்குறள் எழுதி சாதனை படைக்கும் செருப்புத் தொழிலாளி!

Image
நன்றி: தினமலர்

ஆர்ப்பரிக்கும் கடலலை - Fusion

Image
அந்திவானத்தில் சூரியன் நிகழ்த்திய நிற வேடிக்கைக்கு போட்டியாய் மேடையில் வர்ண ஒளிவிளக்குகள் ஜாலம் காட்டிக் கொண்டிருந்தன. என்றும் கடல் அலையின் சத்தம் ஓங்கி இருக்கும் இடத்தில், மக்களின் சத்தத்தில் கடல் அடங்கி இருந்தது. இடம் கண்டுபிடித்து மண்ணில் கால் புதைய நடைக்கையிலேயே கணீரென ஒரு பெண் குரல் பாட்டு பாடியபடி இருந்தது. அடடா நேரமாச்சோ என்றபடி ஓடிப்போனால், அட அது ஒலிப்பெருக்கிச் சோதனை. ஆம், நீங்கள் நினைப்பது சரிதான் அது பெசன்ட் நகர் கடற்கரையில் 'சென்னை சங்கமத்தின்' நிறைவுநாள் நிகழ்ச்சியேதான். இனி நேரடி ரிப்போட். மாலை 6 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் எனச் சொல்லியிருந்தார்கள். சரியாக 6.10 க்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. அப்போதே அநேக முக்கிய விருந்தினர்களும் வந்துவிட்டிருந்தார்கள். இந்த பத்து நிமிட தாமதம் கூட ஒலி ஒளி அமைப்பு ஏற்பாடு தாமதத்தினால்தான். முதலில் 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் (அவர் தன் பெயரை குறிப்பிடவில்லை) சிறப்பு விருந்தினர் அமைச்சர் பரிதி இளம்வழுதி, இறையன்பு I.A.S, அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி, இந்திரகுமாரி, ராஜாமணி அம்மையார், மலேசிய அமைச்சர் ச

சென்னை சங்கமம் - பார்க்க வாங்க!

Image
மக்களே! பட்டினக்காரர்களின் கவனக்குறைவால் சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் செய்தியை நீங்க மிஸ் பண்ணியிருப்பீங்க! அந்த குறையை சரி செய்ய, இன்று நிறைவு நாள் நிகழ்ச்சிகள் கலை கட்டப்போகுது, அதையாவது அனைவரும் போய் பார்ப்போம்! இன்று மாலை 6 மணியளவில் பெசன்ட் நகர் கடற்கரையில், சென்னை கூத்து என்ற பெயரில் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நடைப்பெற உள்ளன! சென்னை கூத்தில் ராக் வகை பாடல்களை நம் தமிழ் கலாச்சாரத்துடன் இணைத்து ஒரு Fusion நிகழ்ச்சியாக தமிழகத்தின் தமிழகத்தின் தலை சிறந்த ராக் பாடல் குழுக்களும், தலை சிறந்த கிராமிய நடன குழுக்களும் ஒன்றாக சேர்ந்து , ஒரு புது வகை அனுபவத்தை தரப்போகிறார்கள்! வானவேடிக்கை, வானவெடி நிகழ்ச்சிகள் என்று அசத்தப்போகிறார்கள்! இந்த நிகழ்ச்சி இனிமையான மாலை நேரத்தில், அலைகடல் அருகே தூள் கிளப்பபோகுது! இதற்கு அனுமதி முற்றிலும் இலவசம்! குடும்பத்தோட போய் என்ஜாய் பண்ணுங்க சென்னைவாசிகளே! இடம்: பெசன்ட் நகர் கடற்கரை நேரம்: மாலை 6:00 மணி தேதி : பிப் 26, 2007 அனுமதி: இலவசம்

சென்னை சங்கமம் - நேரடி ரிப்போர்ட

Image
சென்னை சங்கமம் – பறையடி மற்றும் கோலாட்டம்! பெப்ருவரி 21 அன்று மாலை சென்னை கோட்டூர்புரத்தில் மாநகராட்சியால் புதியதாக அமைக்கப்பட்ட பூங்காவில் சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோலாட்டமும், பறையடியும் கோலாகலாமாக நடந்தது. அதற்கு முன்பாகவே புலிவேஷம் கட்டியவர் கலக்கிக் கொண்டிருந்தார். பூம் பூம் மாடு போன்று மனிதர்களே வேடம் அணிந்து குழந்தைகளை மகிழ்வித்துக் கொண்டிருந்தார்கள். எதிர்பார்ப்புக்கு மாறாக மக்கள் பெரும் கூட்டமாக கூடியிருந்தார்கள். சாலையோர சிறிய பூங்காவான அதிலேயே சுமார் 300 முதல் 350 பேர் வரை கூடியிருந்து நிகழ்ச்சிகளை ரசித்தார்கள். சுமார் 100 முதல் 150 குழந்தைகள் வரை வந்திருந்து அட்டகாசம் செய்து கொண்டிருந்தார்கள். கோலாட்டம் என்பது நாம் சினிமாவில் பார்த்து ரசிக்கும் "தாண்டியா" நடனம் போல இல்லாமல் மிக மிக வித்தியாசமாக இருந்தது. 20 வீரர்கள் வட்டமாக நின்றுக் கொண்டு சுமார் இரண்டரை அடி நீளம் கொண்ட மூங்கில் கழி வைத்து விளையாடினார்கள். இவர்களது ஆட்டத்துக்கேற்ப ஒரு கலைஞர் "உடுக்கை" எனப்படும் இசைக்கருவியை அசுரத்தனமாக வாசித்தார். இது வெறும் நடனமாக இல்லாமல் கோல் சண்டை

சென்னை சங்கமம் – பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சி!

Image
சென்னை மக்களின் கலை, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் தலங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக "தமிழ் மய்யம்" அமைப்பு "சென்னை சங்கமம்" என்ற ஒருவார விழாவினை நடத்த முன்வந்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் உதவியும் இவ்விழாவிற்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இளைய தலைமுறையினருக்கு அறிமுகமில்லாத தமிழகத்தின் பண்பாட்டுக் கலைகளையும், கிட்டத்தட்ட அழிந்துப்போன தமிழின அடையாளங்களையும் மீட்டெடுக்கும் விதத்தில் இந்நிகழ்ச்சிகள் அமையும் என நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள் உறுதியளித்திருக்கிறார்கள். 200க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் சென்னையின் பல்வேறு இடங்களில் பெப்ருவரி 21 முதல் 26 வரை நடத்தப்படும் எனத் தெரிகிறது. தமிழக அரசும் இந்நிகழ்ச்சியை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்த உறுதி அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இக்கலாச்சார நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேவாரமும், திருப்புகழும் சென்னையின் புகழ்பெற்ற பூங்காக்களில் பாடப்படும் என்றும், தமிழர்களின் இசைக்கலாச்சார அடையாளமான நாதஸ்வர நிகழ்ச்சிகளும் அவற்றோடு ஒன்றிணைந்து நடத்தப்படும் என்று விழா பொறுப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மரங்கள்

முழு சென்னைவாசியாக 50 டிப்ஸ்

இன்னா நைனா? ஊருக்கு புச்சா? மொதல்ல இத படிச்சு கரீக்டா ஃபாலோ பன்னேன்னு வெச்சுக்க, நீ மெய்யாலுமே 100 பர்சன்ட் சென்னைவாசி ஆயிடலாம்... 1. சினிமா சூட்டிங்னு நின்னு வேடிக்கை பார்த்து தொலையாதீங்க. அது நிஜ என்கவுன்ட்டரா இருக்க போகுது. 2. "சென்னைக்கு வந்துட்டோம்டா" அப்படீன்னு ஒரு பெருமிதம் உங்களோட வந்து ஒட்டிக்கும் (ஹி..ஹி..எனக்கு ஒட்டிகிச்சு இல்ல), அந்த பெருமிதத்தோட சென்னைல கால் வைக்கவும். முடிஞ்சா வலது கால வைக்கவும் (BTW, இப்படி யோசிக்கிற நேரத்துல ஏதாவது ஒரு பிக்பாக்கெட் உங்ககிட்ட வேலையை காட்டிடலாம், உசார் மாமே). 3. ஊருக்கு வந்து இறங்கி சென்ட்ரலோ அல்லது கோயம்பேடிலோ வெளியே வந்ததும், மேலே ஏதாவது ஏரோப்ளேன் சத்தம் கேட்டா அங்கேயே நின்னு வானத்தையே அன்னாந்து பார்க்கனும். (எப்படி அவ்ளோ பெரிய ஏரோப்ளேனுக்கு பெயின்ட் அடிப்பாங்கன்னு கேக்கக்கூடாது). 4. "மெட்ராஸ்லல்லாம் ஆட்டோகாரங்க நல்லா ஏமாத்திடுவாய்ங்கடா"-ன்னு எவனாச்சு ஒரு ஃபிரென்டு கண்டிப்பா உங்ககிட்ட சொல்லியிருப்பான். அதனால் கோயம்பேடிலோ, சென்ட்ரலிலோ இறங்கியதும், ஆட்டோ பிடிக்கிறத நிப்பாட்டனும். எவ்ளோ தூரமானாலும் நடராஜா சர்வீஸ், இல்ல

குறும்பட விழா -செ.பு.க 3

சென்னை புத்தக கண்காட்சியின் பிரிவாக, சர்வதேச-தேசிய குறும்படம் மற்றும் ஆவணப் படத் திரைவிழா நேற்று புத்தக கண்காட்சியின் மூன்றாவது நாளில் தொடங்கியது. பபாசி மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருக்கும் இந்தத் திரைவிழா, புத்தக கண்காட்சி அரங்கத்துக்கு வெளியே, சுட்டிவிகடனின் குழந்தைகள் அரங்கத்தை அடுத்து A.K. செட்டியார் அரங்கத்தில் நடக்கிறது செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வந்திருந்து தொடங்கி வைத்தார். திரையிடப்படும் படங்கள் பற்றிய விவரம்: முழுமையாக பார்க்க இயக்குனர் சிவக்குமார் பேசுகையில், த.மு.எ.சங்கத்தினரின் முயற்சியில் தமிழக எழுத்தாளர்கள் பலரும் பங்குபெற்ற குறும்பட பயிற்சிப் பட்டறை போன வருட இறுதியில் நிகழ்ந்தது என்றும், அதன் தொடர்ச்சியாக, இளம் தமிழ் எழுத்தாளர்கள் பலரும், குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் எடுக்கும் வேலையில் தற்போது மும்முரமாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டார். மீண்டும் பிப்ரவரியில் கூடி இப்படி எடுக்கப்பட்ட குறும்படங்கள் குறித்த விவாதங்கள் நடைபெறப் போவதாகவும் தெரிவித்தார். [கண்காட்சி அரங்கத்திற்கு வெளியில் இருப்பதால், அநேகமாக இந்தத் திரைவ

சென்னை புத்தகத் திருவிழா Day - 2

Image
முதல் நாள் படங்கள் இங்கே இரண்டாவது நாள் செய்திக்கு இங்கே