Posts

Showing posts from September, 2010

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

இன்று சென்னையில் இருக்கும் மக்களில் பெரும்பான்மையோர், மற்ற ஊர்களில் இருந்து வந்து குடியேறியோர். அதனால், சென்னையின் ஏற்கனவே இருந்த(!) இயல்பான தமிழ்(!) வழக்கொழிந்து போய், எல்லாம் கலந்த சாக்கடை... ம்ஹூம்...பஞ்சாமிர்தமாகி விட்டது. ஆனாலும், வந்து குடியேறுவோரின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. 'மெட்ராஸ்' என்பது சென்னையின் பழைய பெயர். எப்போ அரசாங்கம் Madras-ஐ சென்னை-னு மாத்திடுச்சோ, அப்பவே நாமெல்லாம் அந்த பெயரை மறந்திட்டோம். அதான் நியாபகப்படுத்தவேண்டியுள்ளது. 'பாஷை' - சமஸ்கிருத பாஷையிலிருந்து...மன்னிக்க...சமஸ்கிருத மொழியிலிருந்து 'பாஷா' (பாட்ஷா அல்ல) என்ற வார்த்தையை ஸ்வீகரித்துக் கொண்டு, அது மருவி 'பாஷை' ஆனது. அன்று முதல் 'மெட்ராஸ் பாஷை' எங்களின் மொழியானது. 'மெட்ராஸ் பாஷை' - ஒரு வரலாற்று பார்வை மெட்ராஸ் பாஷையின் இலக்கணத்தில் முக்கிய பங்காற்றுவது, ஆங்கிலம் என்னும் மொழி. இந்த ஆங்கில மொழியானது இன்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மொழி. எம்.ஆர்.ராதா முதல் 'சின்ன(புத்தி) கலைவானர்' விவேக் வரை