Posts

Showing posts from October, 2006

எழுத்தறிய நூலகங்கள்

Image
பள்ளியில் படிக்கும் போதே நூலகத்தில் உறுப்பினராகி புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவில்லை. சென்னைக்கு வந்ததும் அந்த எண்ணம் மீண்டும் உயிர் விட்டது. கல்லூரி விடுதியில் சேர்ந்த உடன் நடக்கும் ராகிங் வேடிக்கைகள் ஆரம்பித்த காலம். விடுதியில் தங்காத சில மாணவர்களுடன் சேர்ந்து கலாய்ப்பதற்காக ஒரு இரண்டாம் ஆண்டு மாணவர் மிதிவண்டியில் உட்கார வைத்து புரசைவாக்கம் கூட்டிப் போனார். போகும் வழியில் "இந்த ரோட்டில் அந்த பக்கம் அமெரிக்கன் லைப்ரரி இருக்கு, உனக்குப் புத்தகம் படிக்க ஆர்வம் இருக்கில்லையா, போய் மெம்பராயிக்கோ" என்று கைகாட்டி விட்டுக் கூட்டிப் போயிருந்தார். ஆனால், முதலில் வாய்த்தது கன்னிமரா போவதுதான். இரண்டாமாண்டு படிக்கும் போது உறுப்பினர் ஆகியே விட்டேன். கன்னிமரா நூலகத்தில் உறுப்பினராவதில் அப்போது இருந்த சிரமம், விண்ணப்பப் படிவம் பெறுவதுதான். ஒவ்வொரு முறை போகும் போதும், படிவம் வைத்திருப்பவர் இருக்கையில் இருக்க மாட்டார், இருந்தால் படிவம் தீர்ந்து போயிருக்கும், என்று ஒரே இழுத்தடிப்பு. மனம் தளராமல் மீண்டும் மீண்டும் முயன்றதில் ஏழாவது அல்லது எட்டாவது முயற்சியில் ஒரு படிவம் கிடைத்தே வ

சென்னை மழை சில படங்கள்

Image
------------ படங்கள் நன்றி: தினமலர். [குறிப்பு: ஃபுட் நோட் சென்னைவாசியின் கருத்துக்கள் அல்ல]

வாராரு ஆட்டோகாரரு....

Image
சென்னைக்கு போறோம் என்று முன்பெல்லாம் சொன்னதும் "அங்க தண்ணி பிரச்சனை ஆச்சே??!!" என்று பயப்படுத்துவது அதிகம் இருந்தது. இப்ப அந்த பிரச்சனை ஓர் அளவுக்கு முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் உண்மையில் இன்று நம்ம சென்னைவாசிகளுக்கு பிரச்சனையாக உருவாகிவருவது சென்னைக்குள் சுழன்று வரும் பொது போக்குவரத்து சாதனங்கள்தான்னு சொல்லணும். சென்னைக்குள் எந்த பகுதிக்கு செல்வதானாலும் பஸ், ரயில், MRTS (Mass Rapid Transit System) என பல வழிகள் இருந்தாலும், அதன் கூட்ட நெரிசல், சரியான நேரத்துக்கு வருவதில்லை, பஸ் ஸ்டாண்டுகளில் நிற்காமல் செல்வது போன்ற பல காரணங்களால் நடுத்தர மக்கள் பெரும்பாலும் ஆட்டோ என்னும் வசதியை நாட நினைக்கிறார்கள். அந்த வசதி எப்படி நமக்கு உபயோகமாயிருக்கு, அதன் நன்மைகள், அதன் பிரச்சனைகள், ஆட்டோ ஓட்டுனர்களின் நிலை என சில விசயங்களை இங்கு பார்ப்போம். மற்ற பொது போக்குவரத்து வசதிகளை பற்றி அடுத்து வரும் பதிவில் பார்ப்போம். ஆட்டோ: இந்த வசதியை ஆச்சர்யமாக பார்க்கும் வெளிநாட்டினர், சென்னை வந்தால் ஒரு முறையாவது இதில் ஏறி ஒரு சவாரி( பயணம் - சென்னை வட்டாரப் பேச்சு) போக வேண்டும் என்று ஆசைப்படுவர். ஆனால் அ

கோயம்பேடு - the buzz(s) world..

Image
"சென்ட்ரலில் இறங்கி, CMBT என்று போட்டிருக்கும் பேருந்தில் ஏறி வந்துவிடு". 2002இல் அப்பா சொன்ன போது பேருந்து நிலையத்தைப் பற்றிய பெரிய யோசனை ஏதுமில்லை. அப்போது தான் நாங்கள் கோயம்பேட்டுக்குக் குடிவந்த புதிது. ஒரு மாதம் முன்னால் புது வீட்டுக்கு வருவதற்கு பேருந்துகள் அதிகம் இல்லாமல், ஆட்டோ பிடித்துப் போக வேண்டியது போலவே இப்போதும் இருக்கும் என்று நினைத்துக் கொண்டே தான் இறங்கினேன். CMBT என்பது அப்போது ஒரு புதுமாதிரியான மாயாஜால வார்த்தையாகத் தோன்றியது. பேருந்து மெல்ல அந்த வளாகத்துக்குள் நுழையும் வரை இத்தனை பெரியதாக இருக்கும் என்று எண்ணக் கூட இல்லை. 37 ஏக்கர் பரப்பில் விரிந்து கிடக்கும் புறநகர் பேருந்து நிலையம் நாட்டின் முக்கிய விமான நிலையங்களைப் போல் பளபளவென்று மின்னிக் கொண்டிருந்தது. சினிமாக்களில் வரும் ஆஸ்பத்திரிகள், கதாநாயகன் நாயகிக்குத் தயங்கிக் கொண்டே பூ கொடுத்து வழியனுப்பும் விமான நிலையங்கள் போல மொசைக் தரையும் சுமார் 100 பேர் அமரக் கூடிய காத்திருக்கும் இடமும், முன்புறத்தில் புல்வெளியும் ஏதோ புது யுகத்துக்குக் கடத்திப் போவது போலிருந்தது. முன் ஹாலைத் தாண்டி உள்ளே போனபோது கூட பேரு

சென்னையில் ஒரு கண்காட்சி

Image
விதவிதமான கலைகளை மனிதன் கண்டுபிடித்து விட்டாலும், ஆதி கலையான ஓவியக் கலையின் சிறப்புகள் தனி தான். கற்காலம் தொட்டே மனிதன் தான் தங்கி இருந்த குகைகளில் எல்லாம் சித்திரங்களால் தங்கள் அடையாளத்தை விட்டு வந்துள்ளான்.ஓவியக்கலை கொஞ்சம் கொஞ்சமாய் மனிதனோடு வளர்ந்தே வந்துள்ளது. பல்வேறு வளர்ச்சி கண்ட ஓவியக்கலை நவீன ஓவியமாக மாறிய போது, சித்திரக்காரனுக்கு மட்டுமல்லாது அதைப் பார்க்கும் பார்வையாளனுக்குள்ளும் பரவசத்தை ஏற்படுத்த தொடங்கியது. அதுவரை வரையப்பட்ட சித்திரங்களின் உணர்வுகள் அப்படியே சித்திரக்காரனின் உணர்வுகளை கடத்தி வந்திருந்தன. அந்நிலையை மாற்றி பார்வையாளனையும், சித்திரக்காரனையும் ஒரே நாற்காலியில் அமரச்செய்த பெருமை நவீன ஓவியத்திற்கு மட்டுமே உண்டு. இன்று பல பத்திரிக்கைகளில் நவீன ஓவியங்கள் மிகச் சாதாரணமாய் வரத்தொடங்கி விட்டது. ஆனந்த விகடனில் தொடராக வந்த எஸ்ராவின் துணையெழுத்துக்கு கிடைத்த அதே வரவேற்பு அத்தொடருக்கு படம் வரைந்த 'டிராஸ்கி'மருது ஓவியத்திற்கும் இருந்தது எல்லோருக்கும் தெரியும். கடந்த வாரம் மூன்று ஓவியர்கள் ஒன்று சேர்ந்து நடத்திய ஓவியக்கண்காட்சி நடந்தது; அதற்கு போகும் வாய்ப்பும் கி